(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.
நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்.
சிலர்தமிழில் knowledge, wisdom என்னும்இரண்டிற்கும்அறிவுஎன்றேகுறிப்பதாகத்தவறாகஎழுதியும்பேசியும்வருகின்றனர். நமக்குத்தெரியவில்லைஎன்பதால்தமிழில்சொற்கள்இல்லையென்றுஎண்ணக்கூடாது. திருக்குறளில்இரண்டிற்கும்வேறுபட்டசொற்கள்உள்ளமையைக்காணலாம். அறிவு – knowledge என்பதுஅறிவுடைமைஎன்னும்அதிகாரத்தின்மூலமும்பிறகுறள்கள்மூலமும் 45 இடங்களில்கையாளப்பட்டுள்ளது. அறிவுதொடர்பானஅறிவினான்முதலானசொற்களும்உள்ளன. சங்கஇலக்கியங்களில்அறிவுஎன்பது 43 இடங்களில்கையாளப்பட்டுள்ளது. ஆனால்ஒட்பம்என்பதைத்திருவள்ளுவர்மட்டும்இரண்டுகுறட்பாக்களில்(404, 425) கையாண்டுள்ளார். மேலும் துறை அறிவுக் கலைச்சொற்கள் நீங்கலாகப் பொதுவாகப், பேரறிவு, சிற்றறிவு, புலனறிவு, மெய்யறிவு, மதி, கூர்மதி, மதிநுட்பம், மதிநலம், பட்டறிவு, பணியறிவு, நூலறிவு, ஒட்பம், ஒண்மை, பொறி முதலான பல சொற்கள் அறிவைக் குறிப்பதற்கு உள்ளன.
கல்வியறிவு இல்லாதவரின் பிற அறிவைக் கற்றவர்கள் ஏற்பதில்லை. எனவே, உலகியறிவு முதலானவை இருப்பினும் படிப்பறிவு இல்லையேல் படித்தோர் பொருட்படுத்த மாட்டார்கள். தம் அறிவு உலகிற்குப் பயன்படவாவது அறிவாளர்கள் நூலறிவையும் பெற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக