மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டி
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
தேவகோட்டை
– பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்
அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப்
பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை மாணவர் புகழேந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவ மாணவியர் முத்தையன், செயசிரீ, பாலமுருகன், கிசோர்குமார், அசய் பிரகாசு, காயத்திரி, அரிகரன், பரமேசுவரி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒன்றாம் வகுப்பு மாணவி காளியம்மாள் அப்துல் கலாம் வடிவம் செய்து கொண்டுவந்தார். 7ஆம் வகுப்பு நந்த குமார், 8 ஆம் வகுப்பு விசய் ஆகியோர் விமானம் மாதிரி செய்து கொண்டு வந்தனர். ஆசிரியர் சிரீதர் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்.
மாணவி நித்திய கல்யாணி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக