தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி
சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.
பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.
நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில்
போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11 அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள்
பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன் முதலிடத்தையும்,
அதே வகுப்பு மாணவர் சஞ்சீவு இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6
ஆம் வகுப்பு மாணவி காயத்திரி முதல் இடத்தையும், அதே வகுப்பைச் சார்ந்த
மாணவி நித்திய கல்யாணி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.
14 அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கான பிரிவில் 8 ஆம் வகுப்பு
மாணவர் சிவா முதல் இடத்தையும் அதே வகுப்பைச் சேர்ந்த மாணவர் இராசேசு
இரண்டாம் இடத்தையும், பெண்களுக்கான பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவி
தனலெட்சுமி முதல் இடத்தையும், அதே வகுப்பைச் சார்ந்த இராசேசு இரண்டாம்
இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி
ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு
இவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக