வியாழன், 11 ஆகஸ்ட், 2016

தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி




தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி

மாணிக்கவாசகம்பள்ளி, அறிவியல் ஊர்தி01 : manickavasakampalli_mobliesciencevan01 மாணிக்கவாசகம்பள்ளி, அறிவியல் ஊர்தி02 ;manickavasakampalli_mobliesciencevan02 மாணிக்கவாசகம்பள்ளி, அறிவியல் ஊர்தி03 ; manickavasakampalli_mobliesciencevan03 மாணிக்கவாசகம்பள்ளி, அறிவியல் ஊர்தி04 ;manickavasakampalli_mobliesciencevan04
தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல்  ஊர்தி மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
   நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
  அகத்தியா அறக்கட்டளையும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அறிவியல் ஊர்தி யில் துணைக்கருவிகளைக் கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி  ஆய்வு மூலம் சென்னையைச் சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டலக் காற்று, காற்றின் அழுத்தம், காற்றின் சமநிலை அறியும்  ஆய்வு ஆகியனவற்றை சிறிய  நெகிழிப் பந்து, சிறிய  நெகிழிக் குழல் கொண்டு செய்து காண்பித்தார். வெற்றிடம்   எவ்வாறு ஏற்படுகிறது? சூறாவளி சுழலும் காற்று எப்படி உருவாகிறது? என்பது பற்றியும் குறைந்த காற்றழுத்தம், உயர்ந்த காற்றழுத்தம் ஆகியன கொண்டும் விளக்கினார்.
  காற்றழுத்தக் குழாய் கொண்டு நீருக்குள் செங்கோண வடிவில் குழல் வைத்தும், வெற்றிடக் குழாயுக்குள் வரும் காற்றை ஊதவைத்தும், குடுவையில்  உள்ள நீரினைக் காற்றுழுத்ததால் தெறிக்கச் செய்து நீர் தெளிப்பான்  ஆய்வு செய்து காண்பித்தார். இது நீரிறைப்பான் (pump set), பூச்சிக்கொல்லி மருந்தடிக்கும் கருவி, குடுவை ஆகிவற்றில் இம்முறை பயன்படுத்தபடுகிறது  என  விளக்கினார்.  காற்றழுத்த கருவியில், மின் விசை கொண்டு பந்து உயரே சுழல்வதைச் செய்து காண்பித்தார். பருப்பொருள் ஒவ்வொன்றின் நிறை, பண்புகள், பாயும் தன்மை, இயற்பியல் – வேதியியல் மாற்றம் ஆகியன செய்து காண்பித்தார்.
   மாணவர்கள்  செகதீசுவரன், விசய், பரத்து, தனலெட்சுமி, இராசேசுவரி, சின்னம்மாள், காவியா  முதலான பலர் கேள்விகள் கேட்டு  விடைகள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
jeyamchok@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக