TNPSC01

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : 

தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு


தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலைப் பணிப்பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரம் வருமாறு:

அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441  நாள் 29.07.2016

பணி:  இளநிலை  அறிவியல் அலுவலர்(Junior Scientific Officer)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,800
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
  1. உயிரியல்(Biology) – 06
  2. வேதியல்(Chemistry) – 22
  3. இயற்பியல்(Physics) – 02
தகுதி:  தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம்: உரூ.50. தேர்வுக் கட்டணம் உரூ.100.
(இதற்கு முன்னர்ப் பதிவுக்கட்டணம் செலுத்தியவர்கள் இப்பொழுது தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.)
அகவை வரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net  / www.tnpscexams.in  என்ற இணையத்தளம் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும்  நாள் :  
தாள் – 1  :  16.10.2016 அன்று காலை 10 மணி முதல்  நண்பகல் 1.00  வரை
தாள் – 2 : பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 வரை
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.08.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி  நாள்: 30.08.2016