யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!
யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர்
காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத்
தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள்
எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன நிலையில்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல்
கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை
7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது.
ஆனாலும் இங்குக் கைதிகளின் மன
ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி முதலான வசதி எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் கைதிகள் மன நிலையில் பாதிப்படைந்துள்ளனர்.
சிறைச்சாலையின் மருந்தாளர், தமிழ் அரசியல்
கைதிகளான தம் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுகிறார் என்றும் இதனால்
தாம் நோய் வாய்ப்பட்ட நிலையில் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர, சிங்கள அதிகாரிகள் சிலரும் தம் மீது
காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள அரசியல்
கைதிகள் இவை குறித்து மேலதிகாரிகளுக்குப் பல தடவைகள் முறைப்பாடுகள்
செய்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.
தகவல் : தமிழர் குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக