தலைப்பு-திருக்குறளைப்போல் கண்டதுமில்லை :thalaippu_thirukkuralpoal_kandadhuillai

திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை;

கேட்டதுமில்லை!

  திருக்குறள் ஏறக்குறைய இப்பொழுது எஞ்சி நிற்கும் இலக்கியங்கள் எல்லாவற்றினும் முற்பட்டதாகக் காண்கின்றது. எங்ஙனமாயினும், இதற்கு முன்னே இன்னோரன்ன நூல் தமிழில் இருந்ததாகக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. வடமொழியில் உள்ள மிருதிகளும் வருண சமயச் சார்புடனே நியாயப்பிரமாணங்களை அவ்வக்காலத்துக்கேற்றபடி கூறிய நூல்களாயின. நாம் கண்ட கேட்ட பிற தேயங்களிலும் இவ்வகையான நூல் யாதொன்றும் இருப்பதாக இதுகாறும் கேட்டிலோம். ஆகவே, இஃது இணையில்லாத நூலாயிற்று. நூற்பாகுபாடுகளும் நூற்போக்கும் நுதலிய பொருளும் நமதாசிரியர் தமது கல்வி கேள்விகளினாற்றலால் தாமே புத்தியில் புகுவதாகக் கூர்ந்துய்த்தறிந்துரைத்தன வாமாதலின் இவ்வாசிரியரும் இணையில்லாத வராயினார்.
பேரறிஞர் திருமணம் செல்வக் கேசவராயர்:
திருவள்ளுவர்: பக்கம்42