ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும்பற்றித்
தமிழர்களே கற்றவர் என உலகோரால் போற்றப்படும் தமிழரே நன்கு அறியாதவராய்
உள்ளனர். ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள்
தமிழர்கள். இமயம் முதல் குமரி வரை இனிதே வாழ்ந்த தமிழர்கள்
ஆரியர்களிடமிருந்தே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றனர் என்று கூறுவது
உண்மை நிலையறியாத வரலாற்று ஆசிரியர்க்கு ஒரு மரபாகிவிட்டது. மேனாட்டு
வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நடுநிலை நின்று ஆராய்ந்து ஆரியர்களோடு
தொடர்பு கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும்
சிறந்து விளங்கினர் என்று கூறியுள்ளமை நன்கு விளம்பரம் பெற்றிலது.
– பேராசிரியர் சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்1 இதழ்18): ஆவணி 17,1995: 1.9.64
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக