தலைப்பு-மக்கள்நலக்கூட்டணி-வலை01 : mamaku_web01
  மக்கள் நலக் கூட்டணிக்காகப் புதிய இணையத்தளமும் குமுக வலைத்தளப் (Social Network) பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
  மார்ச்சு ௮ (8) செவ்வாய்க்கிழமை முதல் இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பரப்புரைப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகளும், படங்கள் – காணுரைகள் (videos) ஆகியவையும் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் குமுக வலைத்தளப் பக்கங்கள் வழியாகத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#MakkalNalan

தலைப்பு-மக்கள்நலக்கூட்டணி-வலை02 : manaku_web02
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan