செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தேசிய இளைஞர் நாள் விழா, தேவகோட்டை

தேசிய இளைஞர் நாள் விழா
பாவை விழா ஒப்பித்தல் போட்டியில்
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு.
  தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் முதல் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் முதலிடம்
 தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. இதனில் பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முதல் வகுப்பு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
   விழாவிற்கு வந்தவர்களை மாணவி சுமித்ரா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி விவேகானந்தர் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். விழாவில் சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற முதல் வகுப்பு மாணவி செயசிரீக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
  மேலும் தேவகோட்டை வட்டார அளவில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் இராசேசுவரி, தனலெட்சுமி, மாணவர் ஆகாசு, ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற தனம், கண்ணதாசன், வெங்கட்ராமன், கிசோர்குமார், திவ்யசிரீ, உமா மகேசுவரி, தனசிரீ ஆகியோர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
  நிறைவாக மாணவ மாணவியர் விவேகானந்தரின் பொன் மொழிகளை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டனர். மாணவர் சகா நன்றி கூறினார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

இலெ.சொக்கலிங்கம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக