‘கிளாவிசு’ என்னும் இலத்தீன் சொல் சாவியைக்குறிக்கும்; உயர்தமிழ்இலக்கியத்
திறவுகோலாக இப்பெயரில் வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதிய சிறந்த
தமிழ்இலக்கணம்; இதனை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை.
முதுமுனைவர் ச. இராசமாணிக்கம் என்ற துறவி
ஆங்கிலத்தில் பெயர்த்தார். வெளிவரவில்லை. நான் தமிழில் எழுத்ததிகாரம்
மட்டும் ஆய்வுரையுடன் மொழிபெயர்த்துள்ளேன். இந்நூல் அன்று
வெளியிடப்பெறுகிறது. கருத்தரங்கில். மூதறிஞர் செ வை சண்முகம், முனைவர் பா
வளனரசு, முனைவர் திலகவதி, முனைவர் சான்சிராணி, அமுதன்அடிகளார், தேம்பாவணி
உரையாளர் மார்க்கிரேட்டு, ச.லூர்துசாமி சான்சன், கேத்ரின்ஆசா, தம்புசாமி
சில்வர்ஆரோ சோசப்பு, சான்பிரிட்டோ அடிகள், குடந்தை ஆயர் அந்தோணிசாமி
ஆண்டகை, புள்ளம்பாடி மறைவட்டம் என்றி புட்பராசு அடிகள் பங்கேற்கின்றனர்.
இயன்ற நண்பர்கள் வருக. பல்வேறு தலைப்புகளில் உரைகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக