அழை-முருகதாசன் நினைவு : azhai_murugadasan

“ஈகைப்பேரொளி” முருகதாசனின்

7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

பிரித்தானியா

  உலகத்தேயத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு ஈகத்தின் உச்சமாய் தன்னையே தீக்கு இரையாக்கி வீரமரணமடைந்த “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில்

மாசி 17, 2047 / 28.02.2016

அன்று இலண்டனில் காலிண்டேல் நகரில்

(St Matthias church, Rush-grove Avenue, Colindale, Landon Nw9 6QY என்னும் இடத்தில்) நடை பெற உள்ளது.
 புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட “ஈகைப்பேரொளி” முருகதாசன், “ஈகைச் சுடர்”முத்துக்குமார் முதலான ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மைத் தீயிட்டுத் தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து ஈகியர்களையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
மேலதிகத் தொடர்புகட்கு:
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 
02033719313 ,07540 302109.