தமிழ் இனத்தை அழித்த சிங்களஇலங்கையுடனான
உறவை முறிக்குமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து கடந்த ஆறு
ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்திய – சிங்களஇலங்கைக்
கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் போர்க்கப்பலை இந்திய அரசு
இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா – சிங்களஇலங்கை இடையே கடற்படை
உறவை மேலும் நெருக்கமாகக் கட்டமைப்பதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான
வானூர்தி தாங்கிப் போர்க்கப்பல் இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு)
விக்கிரமாதித்யா இலங்கைக்கு 21.01.2016 அன்று சென்றடைந்தது.
இது குறித்து நடுவணரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) விக்கிரமாதித்யா போர்க்கப்பலுடன் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை படைத்த இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) மைசூர் விமானம் தாங்கிப் போர்க்கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போர்க்கப்பல்களும் சனவரி 23 வரை கொழும்புக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பயணத்தில், இந்தியா – இலங்கை
கடற்படைகளுக்கு இடையே ஏற்கெனவே உள்ள நெருங்கிய ஒத்துழைப்பை மேலும்
கூட்டுவது தொடர்பாக இரு நாடுகளின் கடற்படை அலுவலர்களும் கலந்துரையாடல்
நடத்துவார்கள்.
இரு நாடுகளின் கடற்படை அலுவலர்களுக்கு இடையே விளையாட்டு முதலான நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக