thalaippu_thamizhmozhikalil

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த

பழந்தமிழகம்

கல்வியாளர்கள்
‘நல்லிசைப் புலவர்’      (தொல்.பொருள் 313.14)
‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’   (தொல்.பொருள் 12:3)
‘வாய்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.387:2)
‘நூல் நவில் புலவர்’   (தொல்.பொருள்.467:2)
‘உயர்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.482:3)
‘தொன்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.550:3)
‘நுணங்கு மொழிப் புலவர்’   (தொல்.பொருள்.653:5)
என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால்,
‘முதுவாய் இரவலர்’     (சிறுபாண். 40; புறம் 48:7)
‘முதுவாய்க் கோடியர்’  (பட்.253; குறுந்.78:2)
‘துறைபல முற்றிய பைந்தீர்ப்பாணர்’     (மலைபடு.40)
‘புகழ் மேம்படுநர்’  (பொருநர்.60)
‘ஏழின் கிழவர்’  (பொருநர்.63)
என அழைக்கப்பெற்றனர்.
மேலும்,
‘செந்நாப்புலவர்’ (புறம் 107:2)
‘அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்’  (புறம் 235: 13, 9-10)
‘புலனுழுது உண்மார்’   (புறம்: 46:3)
‘பலர் புகழ் சிறப்பின் புலவர்’  (புறம்: 72:15-16)
‘நாநவில் புலவர்’ (புறம்: 282: 13)
‘உயர் மொழிப் புலவர்’ (புறம் 394: 5)
‘வெல்லும் வாய்மொழிப் புலவர்’  (புறம்: 188:9)
‘நூலறி புலவர்’  (முருகு: 261)
‘நன்மொழிப் புலவர்’  (முருகு : 286)
‘நுணங்கு நுண்பனுவல் புலவன்’    (அகம் 345: 6)
‘புலன் நா உழவர்’ (கலித்.68:4)
‘தொல்லியல் புலவர்’ (பரி. 3: 86)
‘மாசில் பனுவல் புலவர்’ (பரி.6:7)
‘வாய்மொழிப் புலவர்’   (பரி.9:13)
‘யாணர்ப் புலவர்’  (மதுரைக் காஞ்சி: 750)
‘மென்சொல் கலப்பையர்’    (பதிற்.15:26)
என்று கல்வி கேள்விகளில் வல்லோரை நுட்பாக மதிப்பிட்டுப் பாராட்டும் நிலை சங்கக் காலத்தில் இருந்தது.
முனைவர் ப.கிருட்டிணன்:
தமிழ் நூல்களில் தமிழ் மொழி, தமிழ்
இனம், தமிழ்நாடு: பக்கம். 46-47