ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல்




தமிழர் தேசிய முன்னணி –  மா.பெ.பொ.க.

இணைந்து நடத்தும்

ஈழ விடுதலைப் போராளி

ச.அ. டேவிட்டு ஐயா அவர்களின்

நினைவேந்தல்

நாள் :     திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி
இடம் :     சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்,  சிவ. இளங்கோ கட்டடம்.
தலைமை  :     தோழர் வே. ஆனைமுத்து
படத்திறப்பு :     ஐயா பழ. நெடுமாறன்
வரவேற்புரை    :     திரு. பா. இறையெழிலன்
இரங்கலுரை     :     கவிஞானி அ. மறைமலையான்
                                முனைவர் ந. அரணமுறுவல்
                                திரு. மு. நடராசன், அண்ணா நகர்
                                நாஞ்சில் செ. நடராசன்
                                முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன்
 பலர் இரங்கலுரையாற்ற உள்ளனர்.
அனைவரும் வருக!
இவண்
விழாக்குழுவினர்
தொடர்புக்கு :
பேசி : 22640421
david04
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.          (குறள் 336)
ஈழ விடுதலைப் போராளி  ச.அ. டேவிட்டு ஐயா   ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையும் ஈடுபடுத்திக் கொண்டவர். இல்லற வாழ்வைத் துறந்து தமிழ் மக்களுக்காக உழைத்தவர் டேவிட்டு அய்யா அவர்கள்.
  மரு. இராசசுந்தரம் அவர்களுடன் இணைந்து ‘காந்தியம்’ என்னும் பண்ணையைத் தொடங்கி பாட்டாளித் தமிழர்களுக்கு உதவினர். பல காணி நிலத்தை நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, உழுவை இயந்திரம், தேவையான வேளாண்மைக் கருவிகள் அனைத்தையும் வாங்கி அவர்களை வாழவைத்தவர் டேவிட்டு ஐயா அவர்கள். அதில் அதிகம் பயன்பெற்றோர் 5000 மலையகத் தமிழ்க் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டி உதவினார். 450 மழலையர் பள்ளிகள் நடத்தினார். தமிழீழ விடுதலைப் போராளிகளை அந்தப் பண்ணையில் வைத்துப் பயிற்சியளிக்க உதவினார்.
  இவர் மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்பாளர். இவர் வழிகாட்டுதலால் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கட்டடம் கட்ட வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
  தமிழகத்தில் இருந்துகொண்டு ‘தமிழன்’ என்னும் இதழை நடத்தி உலகெங்கும் பரப்பினார். பின்னர் தோழர் ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து ‘Periyar Era’ என்னும் ஆங்கில இதழை நடத்தினார். இந்த இதழை உலக நாடுகளுக்கெல்லாம் அனுப்பி ஈழச் செய்திகள் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியச்செய்தார்.
  அவரது இறுதிக்காலத்தில் ‘Tamil Eelam Freedom’ என்னும் நூலை ஆங்கிலத்தில் அரும்பாடுபட்டு எழுதி வெளியிட்டார்.
 இறுதியில் தம் தாயகத்தில் – கிளிநொச்சியில் ஒரு நேர்ச்சியில் அடிபட்டு மறைந்தார்.
டேவிட் ஐயா அவர்களின் தமிழீழ விடுதலையில் அவர் கொண்டிருந்த எண்ணம் ஈடேற நாம் அனைவரும் சிந்தித்துச் செயற்படுவோம்.
ஈழ விடுதலைக்காகப் போராடிய டேவிட்டு ஐயாவின் புகழ் ஓங்குக!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக