திங்கள், 11 மே, 2015

கணிணித்தமிழ் – இணைய இதழ் : அறிமுகம்


kaninithamizh02

  தமிழ்க்கணிமை சார்ந்த ஆராய்ச்சிகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டற்ற மென்பொருட்களும், தனியுரிம மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
  பல்வேறு கணிணி அறிஞர்கள், பல்வேறு கணிணி மொழிகளில் தமிழுக்காக நிரலாக்கம் செய்து வருகின்றனர். பல்வேறு தமிழ் அறிஞர்களும் பல வகையில் பங்களித்து வருகின்றனர்.
  இந்த முயற்சிகள் அனைத்தையும் இணைக்கும் பாலமே இந்த இணைய இதழ்.
இங்கு நீங்களும் பங்களிக்கலாம்.
நீங்கள் பங்களிக்கும் தமிழ்க் கணிமை சார்ந்த திட்டங்கள், உரையாடல்கள், கருத்துகளை இங்கே பகிரலாம்.

எவ்வாறு பங்களிக்கலாம்?
  1. நீங்கள் பங்குபெறும் தமிழ்த் தொடர்க்கான மென்பொருட்கள் பற்றி எழுதலாம்.
  2. பல்வேறு களங்களில் நடைபெறும் தமிழ்க்கணிமை, மொழியியல் தொடர்பான உரையாடல்கள், ஒலிக்கோப்புகள், காணொ ளிகள், திட்டங்கள், பங்களிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றை அவர்கள் இசைவோடு, உரிய மூல இணைப்பு, உரிமை அறிவிப்பு தந்து இங்கு தொகுக்கலாம்.
  3. ஆய்வுக் கட்டுரைகள், எதிர்கொண்ட பணியறிவுகள், மொழி இலக்கணம், பிறமொழிகளில் கணினி வளர்ச்சிகள், தமிழுக்கான நுட்ப அறிவுரைகள் எனப் பன்முகத் தன்மையில் இருக்கலாம்.
  4. உங்களுக்குத் தேவைப்படும் புதுத் தமிழ் சார்ந்த மென்பொருட்கள் பற்றிய வேண்டுகோள்களை இங்கு எழுதலாம்.
  5. இங்குள்ள புது மென்பொருள் வேண்டுகோள்களுக்கு பங்களிக்கலாம்.

தமிழ்கணிமை உலகின் செய்திகளை ஓரிடத்தில் இணைக்க உதவுங்கள்.
ஆர்வமுள்ளோர் tshrinivasan@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்புக.
நன்றி !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக