திங்கள், 11 மே, 2015

தமிழர்க்குரியனவற்றை ஆரியர் தமக்குரியன என்றனர்

maraimalaiadikal01
 இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருத்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்ப, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப்பெரிது! அவர் படிற்றொழுக்க இயல்பு இணைத்தென்றறியாத நம்மனோரும் அவர் மயக்க உரையில் விழுந்து அவமேயாகின்றான். இனியேனும் நம்மனோர் நம் பெருஞ்சிறப்புணர்ந்து ஆக்க மெய்துவாராக.
- தமிழ்க் கடல் மறைமலையடிகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக