‘தமிழாடல்‘2015
சிடிவி(GTV’) தமிழாடல்’2015 என்ற மாபெரும் தமிழ்ப்பேச்சுப் போட்டியொன்றை
நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். மேடையில் தமிழ் பேசும் கலை அருகிவருகின்ற
காலக்கட்டத்தில், மேடைப்பேச்சை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், அடுத்த
தலைமுறையினர் தமிழில் மேடையில் பேசுவதற்கு ஆர்வத்தைத்தூண்டும்
நோக்கத்துடனும், இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில்,
(1) 10 அகவைக்குட்பட்டவர்களை கீழ்ப்பிரிவாகவும்,
(2) 11 அகவை முதல் 16 அகவை வரை உள்ளவர்களை மத்தியப் பிரிவாகவும்,
(3) 17 அகவை முதல் 25 அகவை வரை உள்ளவர்களை மேற்பிரிவாகவும்,
என மூன்று பிரிவுகளாகப் பிரித்து,
ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் எனப் பணப்பரிசுகளும்(முதலிடத்தைப்
பெறுபவர்களுக்கு £1000 பரிசு) வெற்றிக்கோப்பைகளும், சான்றிதழ்களும்
வழங்கவிருக்கின்றோம். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட தனிப்பட்ட எவரும்
பங்குபற்றலாம். இதில் கலந்து கொள்வதன் மூலம் உங்களின் மாணாக்கர்கள்
தமிழ்ப்பேச்சில் உயர்வுபெறவும், பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், ஓர் அரிய
வாய்ப்பாக அமையும். நடுவர்களாகப் பல தமிழறிஞர்கள் செயற்பட்டு, அவர்கள்
தலைமையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
உங்கள் மாணவர்களையும் இந்தப்போட்டியில்
இணைத்துக்கொள்ள விரும்பினால், பின்வரும் இலக்கதுடன், அல்லது மின்னஞ்சல்
மூலமாகத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களையும், விண்ணப்பப்படிவங்களையும்
பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் எமது இணையத்தளமான www.newsgtv.com என்ற இணையத்தளத்தில் மேலதிகமான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இத் தொலைக்காட்சியின் தமிழாடல் 2015 நிகழ்ச்சி ஒரு போட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாது, சேவையாகவும் செயல்பட விரும்புகின்றது.
அதனடிப்படையில், பாடசாலைகள்மூலமாக
சி.டிவிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், அதே பாடசாலைக்கு
£2.00 நன்கொடையாக வழங்க சிடிவி விரும்புகின்றது. இந்த நடைமுறை
பாடசாலைகள்மூலம் கிடைக்கபெறும் விண்ணப்பங்களுக்குமட்டுமே என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலதிக விவரங்களுக்கு சிடிவி(GTV’) யுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி.
சிடிவி (GTV)யின் ‘தமிழாடல்‘ நிகழ்ச்சிக்குழு.
விண்ணப்ப முடிவு நாள் : 15.05.2015
முதல் கேட்பு: மே 23 முதல் 31 வரை ( அரைப்பருவ விடமுறைக்காலம்)
தொடர்பிலக்கம் GTV :-020 3468 7523 – 0208 150 3475
இணையத்தளம் : www.newsgtv.com
முகநூல் : GTVtamilaadal
விண்ணப்பப்படிவம்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக