தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
தேனி மாவட்டத்தில்; கடந்த சில வாரங்களாக அதிகமான அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
தேவதானப்பட்டியிலும் அதன்
சுற்றுவட்டாரத்திலும் கடந்த சில வாரங்களாகக் கடும் பனிப்பொழிவு
காணப்படுகிறது. இதனால் அதிகாலை வரை வாகனங்கள் இருள்சூழ்ந்தபடியே விளக்குகள்
எரித்தும், மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பனி விளக்கு (mist light)
பயன்படுத்தியும் வாகனத்தை இயக்குகின்றனர்.
மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத
அளவிற்குக் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவால்
பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன;
மல்லிகை, முளரிப்பூ(ரோசா) அரளிச்செடிகள் போன்றவை கருகி வருகின்றன. கடுமையான
பனிப்பொழிவு காரணமாக வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில்
மழை பொழிந்தால் எப்படி இருக்குமோ அதுமாதிரி தோற்றத்துடன் காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக