வெள்ளி, 16 ஜனவரி, 2015

கொசுக்கடிக்குத் தீர்வு புகைமூட்டம்


61mosquito-smoke
  தேனிமாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொசுக்கடியிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மூட்டம் என்ற பெயரில் கொசுக்களை விரட்டியடிக்கும் முறையைக் கையாண்டனர்.
  பழமையான மண்சட்டி, நொச்சி இலை, வேப்பிலை, தேங்காய் மட்டை, சிரட்டை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தீயினால் உருவாக்கப்பட்ட கங்குகளை வைத்து புகைமூட்டம் போடுவார்கள். இவ்வாறு புகை மூட்டம் போடப்பட்டு அதனைக் கால்நடைகள் வைத்திருப்பவர்கள் தங்கள் தொழுவத்தில் வைப்பார்கள். இதனால் கால்நடைகள் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றப்படும்.
  அதன்பின்னர் புதுமையாகி, கொசுவர்த்திச் சுருள், கொசுவை அழிக்கும் மருந்துகள்,   தெளிப்பான், நீர்மமருந்து போன்றவை வருகை புரிந்ததால் மூட்டம் போடுவதை நிறுத்தி விட்டனர். தற்பொழுது பெய்த மழையினாலும், ஊர்களைச்சுற்றி நீர்நிலைகளில் நீர்கள் தேங்கியிருப்பதாலும் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் மறுபடியும் மண்சட்டி, மண்கலயம், வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றைக்கொண்டு மூட்டம் போட்டு கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
vaigai anesu61

அகரமுதல 61

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக