வியாழன், 19 ஜூன், 2014

நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்

நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்

days of the hero01
தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள்  முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய  நாள்களில்,
இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து நமது நடுகற்கள் முகநூல் குழு நடத்தவுள்ளது சிறப்பானதாகும். முனைவர் ஒய்.சுப்பராயலு, முனைவர் கே.இராசன், முனைவர் இராசகோபால், முனைவர் சுந்தரா, முனைவர் ஆருணி,முனைவர் வேம்புலி கங்காதர், தியோடர் பாசுகரன், சு.கி.செயகரன், முனைவர் பூங்குன்றன், முனைவர் பக்தவத்சல பாரதி, முனைவர் சு. இராசவேலு,  முனைவர  சுப்பிரமணியன், முனைவர் சொ.சாந்தலிங்கம், முனைவர் மகேசுவரன் முதலான ஆய்வறிஞர்கள் பலரும் பிற மாநில ஆய்வறிஞர்களும் பங்கு பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பின்வரும் பொருள்களில் கவனம் செலுத்தி, நடுகல் பற்றிய கருநாடக,ஆந்திர, கேரள, தமிழக அறிஞர்களின் உரைகளும் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இடம் பெறும்.
01. தொல்பழங்காலமும் நடுகற்களும்
02. நடுகல் வழிபாட்டின் பழங்குடிப் பின்னணி,
03. நடுகல்லும் கால்நடை வளர்ப்பும்
04. நடுகல்லும் தீமிதி சடங்குகளும்
05. நடுகல் காட்டும் அரசியல்
06. நடுகல் சமூகம்
07. நடுகல் இலக்கணம்
08. நடுகல் மொழி
09. நடுகல் நம்பிக்கைகளும் சடங்குகளும்
10. நடுகல் நாடும் ஊரும்
11. நடுகல் சிற்ப அமைதி
12. இளையோர் குழு
13. தலைபலி, சதி
14. நடுகல்/நினைவுக் கற்கள் –விலங்குகள்
15. நடுகல் காலக் கணிப்பு
16. சங்கம் நடுகற்கள், பல்லவ நடுகற்கள் முதல் இன்று வரையிலான பார்வை
17. பிறமொழி/பிற மாநில நடுகற்கள்
18. நடுகல் காட்டும் நிலம்
அறிவுரைகள், வழிகாட்டல்கள் வரவேற்கப்படுகின்றன.
நிகழிடம் – கே.ஏ.பி. திருமண மணமண்டபம், ஓசூர்
நாள்  :  ஆனி 7 & ஆனி 8, 2045/21 சூன்,  22 சூன், சனி & ஞாயிறு
தொடர்புக்கு
சுகவனமுருகன், பெண்ணையாறு தொல்லியல் சங்கம் 90421 58667
ராஜசேகர் பாண்டுரங்கன், நடுகல் ஆய்வுக்குழுமம் 73054 37393
herostonestudies@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக