புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
123 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124 ஆவது
பிறந்தநாள் விழா, உழைப்பாளர் நாள் விழா ஆகிய முப்பெரு விழா தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தால், இராயப்பேட்டை, ஔவை சண்முகம்சாலை பெரியார் சிலை
அருகில் வைகாசி 31, 2045 / 14.06.2014 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு
நடைபெற்றது.
த.பெ.தி.க. சட்டத்துறைச் செயலர் திரு வை. இளங்கோவன், தலைமை தாங்கினார்.
காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது.
ஆனூர் செகதீசன், தலைவர் – த.பெ.தி.க.
வழக்கறிஞர் சே. துரைசாமி, துணைத்தலைவர் – த.பெ.தி.க.
கோவை இராமகிருட்டிணன் பொதுசெயலாளர் – த.பெ.தி.க.
சி. மகேந்திரன் – க.பி.ஐ.
திருச்சி சௌந்தர்ராசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சு. குமாரதேவன், தலைமை நிலையச் செயலாளர், த.பெ.தி.க.
ப. அமர்நாத்து, தலைமை செயற்குழு உறுப்பினர், த.பெ.தி.க.
கரு. அண்ணாமலை, வடக்கு மண்டல அமைப்பாளர் – த.பெ.தி.க.
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சடுகுடு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையையும், பண முடிப்பையும் வழங்கினர்.
இயக்குநர் – நடிகர் ஆர். சுந்தர்ராசன் அவர்கள் நடுவராகப் பங்கேற்ற ,
“சமுதாய மாற்றத்திற்குக் காரணம்
அருள் நெறியே! அறிவு நெறியே!” என்னும் தலைப்பிலான
மாபெரும் பகுத்தறிவுப் பட்டிமன்றம் நடைபெற்றது.
ச. குமரன், சே. குமரன் ஆகியோர் நன்றி நவின்றனர்.
விழாவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்
தோழர்கள், அம்பேத்கர் மன்றத் தோழர்கள், பொதுமக்கள் என 500க்கு மேற்பட்டோர்
கலந்துகொண்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக