புதன், 5 செப்டம்பர், 2012

கடலோடு விளையாட்டு!


 
 கடலோடு விளையாட்டு! 
பாய்மரப் படகு போட்டியில் சாதித்து வரும் மேகனா: நான் ஒன்பதாவது படித்த போது, கோடை பயிற்சி வகுப்பிற்குச் சென்றேன். அங்கு தான், எனக்கு பாய்மரப் படகு அறிமுகமானது. அன்று முதல், இது தான் நமக்கான விளையாட்டு என, முடிவெடுத்தேன்.முறையான பயற்சி, தைரியம், நீச்சல் இந்த மூன்று விஷயங்கள் தான், இதற்குத் தேவை. ஆரம்பத்தில், தண்ணீரில் குதித்த போது, கொஞ்சம் பயம் இருந்தது, இப்போது பழகி விட்டது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, காற்றின் வேகம், அது வீசும் திசை. இவை இரண்டையும், சரியாக கணித்துக் கொண்டே படகு செலுத்தினால், எளிதில் வெற்றி பெறலாம். காற்று வீசுவதை கண்டுபிடிப்பது தான், சவாலானது. அதைப் பற்றித் தான், எந்நேரமும் யோசித்துக் கொண்டிருப்பேன்; அதற்கேற்றாற் போல் படகை செலுத்துவேன். வாரத்தில் இரண்டு நாள், துறைமுகத்திற்கு பயிற்சிக்கு செல்வேன். மூன்று மணி நேரம், படகு விடுவேன். 2010ல், இந்திய அளவில் நடந்த, 16 வயதிற்குட்பட்ட, பெண்களுக்கான,"லேசர் 4.7' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். இந்த ஆண்டு, அதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். 4.7 என்பது, பாய்மரத்தின் பரப்பளவைக் குறிக்கும். பாய்மரப் படகின் விலை, மூன்றரை லட்சம் ரூபாய், அதை செலுத்தப் பயன்படும் துடுப்பு, 35 ஆயிரம் ரூபாய். மற்ற விளையாட்டுடன் ஒப்பிடும் போது, இதற்கு ஆகும் செலவு அதிகம் தான். அதனால், தான் நடுத்தர வர்க்கத்தினரிடம், இந்த விளையாட்டிற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தமிழக அரசு, சில உதவிகள் செய்தால், இந்த விளையாட்டு பிரபலமாகும். 2016ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக்கில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்வதே என் லட்சியம்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக