வியாழன், 3 மே, 2012

புலிக்கொடி பூச்சாண்டியைக் காட்டி மேலும் கொடுமைகளைச் செய்யும் தந்திரம்

சிங்கள க் கொடுங்கோல் அரசிற்கு அடிப்பொடிஆழ்வாராக உள்ள தமிழ் இரண்டகர்கள் அவர்களுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சி. இதி்ல் சிங்கள உளவுப்படையின் தந்திரத்தால் புலிக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளது. புலிக்கொடி பூச்சாண்டியைக் காட்டி மேலும் கொடுமைகளைச் செய்யும் தந்திரமே இது.  எனினும் உரிமையைப் பறிகொடுத்து நூறாயிரவர் இன்னுயிர் இழந்து தவிக்கும் தமிழ் ஈழம் விடுதலைப்புலிகள் தலைமையில் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நெறிகாட்டுதலில் மலர்ந்து சிறக்கும் என்பது உறுதி. தமிழ் ஈழ வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
மே தினப் பேரணியில் விடுதலைப் புலிகள் கொடி?

First Published : 03 May 2012 02:37:09 AM IST


கொழும்பு, மே 2: இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை நடத்திய மே தினப் பேரணியில் சுமார் 5 இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் கொடியை காட்டியதாகக் கூறப்படுகிறது.  எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.  இது தொடர்பாக போலீஸôர் விசாரணை நடத்தி வருவதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் "தினமணி' செய்தியாளரிடம் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை பாதுகாப்புப் படை தளபதி மகிந்த ஹதுரசிங்க தெரிவித்தார்.  ""பேரணி நடந்து கொண்டிருந்தபோது சில வினாடிகள் புலிக் கொடிகள் தென்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால் கொடியைக் காட்டியவர்களை அடையாளம் காண்பது கடினமாகிவிட்டது. இந்தச் சம்பவத்தால் நாங்கள் கவலையடைந்துள்ளோம்'' என்றார் அவர்.  4000 விடுதலைப் புலிகள்? தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்பதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதைக் காரணமாகக் கூறி திரிகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இலங்கையில் சுமார் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் இன்னும் இருப்பதாக பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுடனான போர் நடந்த பகுதிகளில் இன்னமும் ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.  இந்தியாவில் 150 விடுதலைப் புலிகள்? இதனிடையே, இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, சுமார் 150 விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக சிங்கப்பூர் நாங்யங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சித் துறைத் தலைவர் ரோகன் குணரத்ன தெரிவித்தார்.  இலங்கை ராணுவம் மறுப்பு: இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கலாம் என்பதை இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது. இந்தியாவில் விடுதலைப்புலிகள் முகாம் அமைப்பதற்கான சாத்தியங்கள் இப்போது இல்லை என்றும் கூறியிருக்கிறது.  திரிகோணமலையில் நடக்கும் தேடுதல் நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காணும் வழக்கமான நடவடிக்கைதான் என்று ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு: சந்தேகத்தின் பேரில் இளைஞர்களைப் பாதுகாப்புப் படையினர் பிடித்துச் செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அதிபர் ராஜபட்சவுக்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கிறார்.

விடுதலைப் புலி கொடி: அரசே நடத்திய நாடகம்

First Published : 04 May 2012 04:14:08 AM IST

இச்செய்தியை மு்நதைய நாடகச் செய்தியில் கருத்தூட்டமாக எழுதியதைத்தான் தினமணி வெளியிடவில்லை. எப்பொழுது திருந்துமோ தினமணி?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

1 கருத்து:

  1. இச் செய்தி தொடர்பான உண்மையைத் தெரிவித்து இருந்தேன். வெளியிட மனம் வரவிலலை தினமணிக்கு! தினமணியே உன் நிலை இதுதானா? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு