திங்கள், 30 ஏப்ரல், 2012

போர்க்குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி கொழும்பு திரும்புகிறார்

போர்க்குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி கொழும்பு திரும்புகிறார்

First Published : 29 Apr 2012 02:04:20 PM IST


கொழும்பு, ஏப்.29: பிரிட்டானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும், இலங்கை ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்பவுள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ராணுவத்தின் 59ஆவது பிரிவுக்கு தலைதாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றவாளி என்றும் அவருக்கான தூதரக விலக்குரிமையை நீக்க வேண்டும் என்றும் பிரிட்டன் தமிழர் பேரவை, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தது. இந்த நிலையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்புவார் என்றும் இனிமேல் அவர் பிரிட்டனில் பணியாற்றமாட்டார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சரத் திசநாயக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக