வெள்ளி, 4 மே, 2012

வாய்ப்புகளைத் தேட வேண்டும்:



வாய்ப்புகளைத்தேட வேண்டும்:


டுவிட்டர், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம், ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெற்றுள்ள கமலேஷ்: பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம், உலகெங்கும் என் நட்பு வட்டத்தை விரிவாக்கினேன். அதில் வீண் அரட்டை அடிக்காமல், கிடைத்த நண்பர்களின் உதவியுடன், எங்கெல்லாம் என் தகுதிக்கு பணி வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, விடாமுயற்சியுடன் விண்ணப்பித்தேன். அப்படி ஒரு முறை விண்ணப்பித்தபோது, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் ஒருவரின் வழிகாட்டுதலின் படி, என், "பயோ டேட்டாவை' இரண்டு வெவ்வேறு பிரபல நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அமெரிக்காவிலிருக்கும் அந்த நிறுவனங்களுடன், இணைய வழி நேர்முகத் தேர்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் ஒரு நிறுவனம், 75 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி என்னைத் தேர்ந்தெடுத்தது. சில நாட்களில், இன்னொரு நிறுவனம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து என்னை வேலைக்கு அழைத்தது. இதுவரை, நான் வேலை பெற்ற இரண்டு நிறுவனங்களிலும், யாரையும் நேருக்கு நேராக சந்திக்கவேயில்லை; எல்லாம் இணையதளம் மூலம் தான். நேர்முகத் தேர்வு, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. கிட்டத்தட்ட, 16 சுற்றுகள் இன்டர்வியூ செய்யப்பட்டேன். என்னைத் தேர்வு செய்யப்பட்ட விதம், மிக கடினமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாங்காது, முடியாது என சொல்லிவிடலாம் என்று கூடத் தோன்றும். அப்போதெல்லாம் என் குடும்பத்தினர் தான் என்னை ஊக்கப்படுத்தி சாதிக்க வைத்தனர். இன்று உலகெங்கும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகளுக்காக நாம் காத்திருக்காமல், அதைத் தேடி உழைக்க வேண்டும். பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், நல்ல முறையில் அவற்றை பயன்படுத்தினால், வெற்றி நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக