திங்கள், 30 ஏப்ரல், 2012

சிறிலங்கா விவகாரத்தினைக் கையிலெடுத்த அமெரிக்க மாணவச் சமூகம் !

சிறிலங்கா விவகாரத்தினைக் கையிலெடுத்த அமெரிக்க மாணவச் சமூகம் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நட்பு இணைய இதழ் - பதிவு செய்த நாள் : 30/04/2012


Amnesty International, அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூ யோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

“Get on the Bus for human rights “ எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு  போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சான் சுந்தரம் அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில்…
உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர்  Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர்.
காணமல்போயும் , கடத்தி வைக்கப்பட்டும் உள்ளவர்களது நிலையினை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த நிகழ்வரங்கொன்று , பர்மிய பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்டமை அனைவரது கவனத்தினையும் பெற்றது.
அண்ணளாவாக 700க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
உள்ளரங்கினைத் தொடர்ந்து, சிறிலங்காவின் உயர்ஆணையத்தினை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், சிறிலங்காவே உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம் என தொடர் முழக்கமிட்டனர்.
அமெரிக்கர்கள் இவ்வாறு சிறிலங்கா தொடர்பில் அணிதிரள்வதும், குறிப்பாக மாணவ சமூகம் சிறிலங்காவின் விவகாரத்தினை கையிலெடுத்திருப்பது நம்பிக்கையினைத் தருவதாக உளள்ளதென மக்கள் பிரதிநிதி சான் சுந்தரம் அவர்கள் தெரிவித்தார்.
சிறிலங்காவின் முள்வேலிக்குள் அகப்பட்ட தமிழர்கள் மற்றும் வெள்ளைக்கொடியேந்திய தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தமை ஆகியனவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்த ஒவியங்கள் இவ்விரு நிகழ்வுக்களிலும் முக்கிய இடத்தினைப் பிடிந்திருந்தது.
மக்கள் பிரதிநிதி சான் சுந்தரம் அவர்களே இவ்விரு ஒவியங்களை சொந்தக்காரர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
காணொளி காண்பதற்கு படத்தை அழுத்தவும்நாதம் ஊடகசேவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக