புதன், 22 பிப்ரவரி, 2012

I will not come back without medal : "பதக்கம் வாங்காமல் திரும்ப மாட்டேன்!'

சொல்கிறார்கள்



மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டில், மாநில, தேசிய அளவில் விருதுகளை குவித்துள்ள இந்து: என் கால்கள் இரண்டும் வளைந்துள்ளது என்று, பிறந்த ஒன்பதாவது மாதத்திலேயே அறுவை சிகிச்சை செய்தனர்; ஆனாலும் சரியாகவில்லை. கால்களை தரையில் ஊன்றி, நேராக நடக்க முடியாது என்று, மருத்துவர்கள் கூறிவிட்டனர். நான் தத்தித் தத்தி நடந்தேன்; வளர்ந்தேன்.ஏழு வயது இருக்கும் போது, பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடந்த போது, ஓட்டப் பந்தயத்தில் பெயர் கொடுத்தேன். "உன்னால் முடியுமா?' என்று பெற்றோர் வேதனைப்பட்டனர்; வெளியில் சிலர் கேலி செய்தனர். எதையும் பொருட்படுத்தாமல், மற்ற பெண்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றேன். அப்போது தான், என் மேல் எனக்கு நம்பிக்கை வந்தது.அப்பா புக் பைண்டிங் வேலை செய்கிறார். தெருத்தெருவாக போய் புடவை விற்கிறார் அம்மா. இப்படி, வறுமைக்கு நடுவில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த போது தான், நாகராஜன் சாரை பார்க்க நேர்ந்தது. என் திறமையை அடையாளம் கண்டு, எனக்கு பயிற்சியளிப்பவர். மாவட்ட, மாநிலப் போட்டிகளில் ஜெயித்த பதக்கங்கள் மூலம், அவருக்கு நன்றி சொன்னேன்.கர்நாடகாவில் நடந்த ஒரு போட்டியை, என்னால் மறக்கவே முடியாது. அங்கு போட்டிக்காக வந்தவர்கள், நவீன உபகரணங்களுடன் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் நான், பெரிய கல்லை வட்டு எறிதலுக்கும், நீளமான குச்சியை ஈட்டி எறிதலுக்கும் பயன்படுத்தினேன். போட்டியின் போது தங்கம், வெள்ளி என்று பரிசுகளை அள்ளினேன். பயிற்சிக்கு கருவியை விட, மன உறுதி தான் முக்கியம் என்று, அப்போது புரிந்து கொண்டேன்.போட்டிக்குப் போனால், ஒரு பதக்கமாவது வாங்காமல் திரும்பியதே இல்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும், பேஷன் டிசைனர் ஆக வேண்டும், என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்ளணும். இது தான் என் லட்சியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக