வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

high court judge should inquire the encounter

உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

First Published : 24 Feb 2012 01:40:30 AM IST

Last Updated : 24 Feb 2012 02:40:23 AM IST

சென்னை, பிப்.23: வங்கிக் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் இந்தச் சம்பவத்துக்கு அவர்கள் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.மனித உரிமை ஆர்வலர் அ. மார்க்ஸ்:வங்கிக் கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த என்கவுன்ட்டர் தேவையற்றது. சுட்டுக் கொல்லும் அளவுக்கு அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. முடிந்தவரை போலீஸôர் அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்ய முயற்சி செய்திருக்கலாம். கைது செய்திருந்தால் அவர்களோடு தொடர்புடைய கூட்டாளிகளையும் கூண்டோடு பிடித்திருக்க முடியும்.ஒருவர் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனைகளுக்குரிய தவறுகளை செய்தால் மட்டுமே அவர்களைச் சுடலாம், அதுவும் தற்காப்புக்காக மட்டுமே சுட முடியும் என சட்டம் கூறுகிறது.தற்காப்புக்காக சுட்டோம் என போலீஸôர் கூறினாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சம்பவத்தில் தொடர்புடைய போலீஸôர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றத்தில் தற்காப்பு நோக்கத்துக்காக மட்டுமே சுட நேர்ந்தது என நிரூபிக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.மேலும் இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தை விசாரிக்க மாஜிஸ்திரேட்டு விசாரணை போதாது. பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.வழக்குரைஞர் புகழேந்தி: இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து போலீஸôர் கூறுவதை நம்ப முடியவில்லை. என்கவுன்ட்டர் நடைபெற்ற இடம் மிகவும் குறுகலான குடியிருப்புக்குள் அமைந்துள்ளது. இந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றிருந்தால் அதிக எண்ணிக்கையிலான போலீஸôர் காயப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தமிழகத்தில் போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெறுவது அதிகமாகிவிட்டது. குறிப்பாக இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தின் உண்மை நிலையை அறிய சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும். மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி டிபென்: "இந்தச் சம்பவம் முழுவதும் காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகும். முறையாக விசாரணை செய்து கைது செய்ய வேண்டிய கொள்ளையர்களை, போலீஸôர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். 5 பேரை 14 போலீஸôர் கைது செய்ய முடியாத அளவுக்கு காவல்துறை பலவீனமாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.நாட்டின் ஜனநாயகம் நல்ல முறையில் இருக்க, காவல்துறை நல்ல முறையில் இயங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நடத்த வேண்டும்.இச்சம்பவத்துக்கு எதிராக பாதிக்கப்பட்டக் குடும்பம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவாக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் இருப்போம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, புதிய போலீஸ் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக