வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

கூடிய விரைவில் தொழில் அதிபர்!

கூடிய விரைவில் தொழில் அதிபர்! 


நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொடுக்கும், ஆட்டோ ஓட்டுனர் ரவி: சென்னை தான் என் சொந்த ஊர். பள்ளிக்குப் போகாமல், எங்கள் பகுதி ஆட்டோ ஓட்டுனர்களுடன், ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பேன். அப்படியே, நானும் ஆட்டோக்காரன் ஆகிவிட்டேன். அம்பத்தூரில் இருந்து, தாம்பரம் வரை, சென்னையில் உள்ள அனைத்து சந்து பொந்துகளும் தெரியும். 30 ஆண்டு காலமாக, அபிராமபுரம் ஆட்டோ ஸ்டாண்டு தான் என் வீடு. கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுத்து நடத்தும், தனியார் கம்பெனியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த விழாவிற்குத் தேவையான பொருட்கள், ஆட்களை ஏற்றிக் கொண்டு போய் நிறைய வேலைகள் செய்வேன். சில சமயம், நானும், அவர்களுக்கு ஐடியாக்கள் கொடுப்பேன். என் யோசனையையும் செயல்படுத்துவர். கம்பெனி மீட்டிங்கில், படித்தவர்கள் மத்தியில் என் கருத்தையும் கேட்கின்றனர் எனும்போது, பெருமையாக இருக்கும். எனக்கும் திறமை உள்ளது என்று புரிந்தது. தனியாக தொழில் செய்யலாம் என்று நிறைய இடங்களில் ஆர்டர் கேட்டு, ஒரு வழியாக பிறந்த நாள் விழாவை வடிவமைக்க ஆர்டர் கிடைத்தது; அனைவரும் வியக்கும் அளவிற்கு செய்தேன். இதுவரை, 50 விழாவிற்கும் மேல் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறேன். தற்போது, திருமண ஆர்டர் தான் நிறைய வருகிறது. திருமண விழாக்களில், மேஜிக் ÷ஷா, பார்ட்டி கேம் என்று, அவர்களுக்கு எது விருப்பமோ, அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து விடுவேன். குறுகிய காலத்தில் தனியாக வந்து சாதிப்பது பெருமையாக உள்ளது. ஒரு மாதத்திற்கு, 10 ஆர்டர்கள் வரை வரும்; மற்ற நேரங்களில் ஆட்டோ ஓட்டப் போய் விடுவேன். எனக்கு சும்மா இருக்கப் பிடிக்காது; கூடிய விரைவில் நான் தொழிலதிபர் ஆகிவிடுவேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக