திங்கள், 20 பிப்ரவரி, 2012

சேதுக்கரசி நாச்சியார்

கலை வளர்த்த ராஜ வம்சத்தில் வந்த ராஜராஜேஸ்வரி சேதுக்கரசி நாச்சியார்: 


என் அப்பா, ராமநாதபுரம் அரண்மனையை கட்டி ஆண்ட கடைசி மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி. அவருக்கு நான்காவது மனைவியான என் அம்மாவுக்கு நான் மூத்த மகள். அரண்மனைன்னாலே அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இல்லையா... அந்த சூழ்நிலைல வளர்ந்த எனக்கும் கலை மேல ஈடுபாடு வந்ததுல ஆச்சரியம் இல்லை.என் அப்பாவோட அடிக்கடி ராமநாதபுரம் கடற்கரைக்கு போவோம். அங்க எல்லாரும் அலையை ரசிக்கும்போது, நான் அலை கொண்டு வர்ற சிப்பிகளை சேகரிப்பேன். அப்படி ஆரம்பிச்ச பழக்கம், சிப்பிகளை வெச்சு ஆர்ட் பண்ணலாம்ங்கிற சிந்தனையை தூண்டுச்சு.சென்னையில படிக்கிற சமயத்தில், கிராப்ட் டீச்சர் ராஜாமணி புதுசு புதுசா ஏதாவது செய்யணும்னு சொல்றது, அப்படி புதுமையா ஏதாவது செய்தா அதுக்கு பரிசும் கொடுப்பாங்க. அந்த பரிசுக்காகவே நானும் ஏதாச்சும் செய்துட்டே இருப்பேன். கிளிஞ்சல்கள் மீதான என் ஆர்வத்தை பார்த்து, அவங்க எல்லாம் ஏராளமான கிளிஞ்சல்களை வாங்கி வந்து கொடுப்பாங்க.எனக்கு கிடைக்கற பரிசுகளும் கிளிஞ்சல்கள் தான்; நான் கொடுக்கற பரிசுகளும் கிளிஞ்சல்கள் தான். ஒரே வித்தியாசம், அவங்க உதிர் உதிரா கொடுக்கறாங்க; நான் அதை ஒண்ணா இணைச்சு ஓவியமா தர்றேன். இளம் வயதில் காங்கிரசில் உறுப்பினராக இருந்தபோது, கிளிஞ்சல் வேலைப்பாடுகளை எல்லாம் திரட்டி, ஒரு கண்காட்சி நடத்தினேன். அதை பார்வையிட்ட காமராஜர், "கிளிஞ்சல் பாப்பா' என, பட்டம் கொடுத்து பாராட்டினார்.அதேபோல், இயற்கையை நேசிக்கும் அப்துல் கலாமுக்கு, மூணடி உயரத்துல மூன்று மாச உழைப்பைக் கொடுத்து உருவாக்குன கிளிஞ்சல் ஓவியத்தை அவர் ரொம்ப ரசிச்சது மகிழ்ச்சியும், பெருமையுமா இருக்கு. டிசைன்கள்ல புதுமை காட்டற திறமையும், அழகியல் உணர்வும் இருந்தாப் போதும், கிளிஞ்சலை வெச்சு, வீட்டிலிருந்தே நல்லா சம்பாதிக்கலாம்.என் ஆத்ம திருப்திக்காக செய்யும் கலை இதுங்கிறதால ஆத்மார்த்தமான உழைப்பும், ஈடுபாடும் இருக்கு. இதுக்கு விலையோ, பேரமோ பேச முடி யாது. அதனால, விரும்பிக் கேட்டவர்களுக்கு பரிசாகவே கொடுக்கிறேன். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக