வெள்ளி, 25 மார்ச், 2011

Soniya & Raghul will not visit Thamizh nadu: சோனியா,இராகுல் தமிழகம் வருகை இல்லை

நல்லதுதான். மண்ணைக்  கவ்வும் பொழுது சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? இருவரும் வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! ‌ மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சோனியா, ராகுல் தமிழகம் வருகை இல்லை


சென்னை, மார்ச் 24: தமிழகத்தில் தி.மு.க. அணிக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டுப் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள் என தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களுக்குக் கூடுதல் இடம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு 63 தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ்.  தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் ஓரிரு நாள்கள் தாமதம் ஏற்பட்டது.  இருந்தபோதிலும் வேட்புமனு தாக்கலுக்கு சில தினங்களுக்கு முன்பாகவே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார்.  கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் 2 நாள்கள் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசியுள்ளார்.  ஒவ்வொரு தேர்தலுக்கும் சோனியா காந்தியுடன் ஒரு முறை கூட்டுப் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுவது வழக்கமாக இருந்தது.  கடந்த மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே மேடையில் பேச வேண்டும் என்பதற்காக, பிரசாரம் முடியும் வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைகூட ஏற்பட்டது.  இருந்தாலும் இருவரும் கூட்டுப் பிரசாரம் என்பது நடந்து வந்தது.  இடையில் தமிழகத்துக்கு வரும் மத்திய அமைச்சர்கள், மரியாதை நிமித்தமாக முதல்வர் கருணாநிதியை சந்திப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்தபோதெல்லாம் கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. இது தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் பெற்றாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ராகுல் காந்தியின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.  உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலத் தேர்தல்களின்போது ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறவும் தேர்தல் பணியில் உற்சாகம் ஊட்ட ராகுல் காந்தி வருவார் என்ற எதிர்பார்ப்பு அந்தக் கட்சியினரிடம் இருந்தது.  ஆனால் இந்த முறை ராகுல் தமிழகம் வரப் போவதில்லை என்று தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்த சிறு விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால், ஓய்வு எடுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேச சோனியா காந்தியும் தமிழகம் வர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.  தொகுதிப் பங்கீடு பிரச்னை எழுந்தபோது, கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து ஏற்கெனவே தி.மு.க. தலைவர்களிடம் சோனியா கண்டனம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.  மூத்த தலைவர் என்ற வகையில் கருணாநிதி மீது தமக்கு ஒரு மரியாதை உண்டு என்று சோனியா அடிக்கடி கூறுவது உண்டு. மேற்படி தீர்மானம் காரணமாக சோனியாவுக்கு ஏற்பட்ட வருத்தம், அதன்பிறகு தொகுதிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கலால் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கருணாநிதியை சந்திப்பதை சோனியா தவிர்க்கக் கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.  கேரள மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக சோனியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்துக்கு அவர் வரமாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.  காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் இல்லாமல், மாநிலத் தேர்தலை காங்கிரஸ் கட்சியினர் சந்திக்கும் சூழ்நிலை முதல்முறையாக இப்போதுதான் ஏற்பட்டிருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக