வியாழன், 24 மார்ச், 2011

சுற்றுலா சென்றால் புத்துணர்வு ஏற்படும் : இறையன்பு இ.ஆ.ப.,, பேச்சு



சென்னை : ""சுற்றுலா செல்வதால், மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு ஏற்படும்,'' என, சென்னை பல்கலை கருத்தரங்கில் இறையன்பு பேசினார். சென்னை பல்கலையின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில், சுற்றுலா குறித்த கருத்தரங்கு நடந்தது. வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடராமன், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பெங்களூர் நேஷனல் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பரினீதா பங்கேற்றனர்.

இதில், சுற்றுலாவின் இனிமைகள் என்ற தலைப்பில், இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேசியதாவது: இன்ப சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கலாசார சுற்றுலா, உணவு சுற்றுலா, வணிக சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வரும் பயணிகள் இன்பச் சுற்றுலா செல்லும் அளவுக்கு மாறுகின்றனர். ரஷ்யர்கள் தஞ்சைக்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கின்றனர். அங்குள்ள கோவில்களில் உள்ள ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்கின்றனர். ஆனால், நம்மவர்கள் அதனருகில் நின்று புகைப்படம் எடுத்து சென்று விடுகின்றனர். சுற்றுலா என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் பயணம் செய்தால் தான் மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு ஏற்படும். எனவே, அனைவரும் பயனுள்ள சுற்றுலா செல்லுங்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தது 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்ய வேண்டும். 10 ஆயிரம் புத்தகங்களை படிக்க வேண்டும். இவ்வாறு இறையன்பு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக