ஞாயிறு, 16 அக்டோபர், 2011

Voice of Tamilnadu-Vaiko: தமிழக மக்கள் சிக்கல்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்: வைகோ

தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்: வைகோ

First Published : 16 Oct 2011 04:07:46 AM IST


சென்னை, அக்.15: தமிழக மக்களுக்கு எந்த இடத்தில், என்ன பிரச்னை ஏற்பட்டாலும் நான் குரல் கொடுப்பேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.  சென்னையில் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தம்புசெட்டித் தெருவில் சனிக்கிழமை அவர் பேசியது:  ம.தி.மு.க. சுயமரியாதை உள்ள கட்சி. கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க.வுக்கு அனைத்து நேரத்திலும் பக்கபலமாக இருந்து வந்தோம். ஆனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. தமிழக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து 1988-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் அறிவித்தபோது, நான்தான் முதல் ஆளாக மக்களவையில் எதிர்ப்புத் தெரிவித்தேன். முல்லை பெரியாறு விவகாரத்திலும் தொடர்ந்து போராடி வருகிறேன். இதேபோல் சில்லறை வியாபாரிகளின் முக்கியப் பிரச்னைகளுக்கும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மக்களின் பிரச்னைக்காகப் போராட, ஆண்ட கட்சி மறந்தாலும், ஆளும் கட்சி மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத ம.தி.மு.க.வுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் ஊழல் இல்லாத உள்ளாட்சியைத் தருவோம். இது அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக