வியாழன், 20 அக்டோபர், 2011

ஆணோ பெண்ணோ யாராயினும் முயன்றால் முன்னேறலாம்!

நிதி ஆலோசகர் அனிதா பட்: கேரள மாநிலம் கொச்சியில், என் அப்பா தனியார் வங்கியில் பியூனாக வேலை பார்த்தார். என் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பெண்கள். ஒரு பையன். வறுமை நிறைந்த காலம் அது. என் அம்மா அக்கம் பக்கம் பெண்களுக்கு துணி தைத்து கொடுப்பார்.வருமானத்தை அதிகரிக்க சூரத்திலிருந்து சேலை, துணி வகைகளை வாங்கி வந்து சிறிய கடையை ஆரம்பித்தார். என் அம்மா கஷ்டப்படுவதைப் பார்த்து, ஒருவர் பின் ஒருவராக திருமணம் முடியும் வரை, அம்மாவிற்கு உதவியாக இருப்போம்.எனக்கு சென்னையில் திருமணம் முடிந்தது. அப்போது என் கணவருக்கு மாதம், 750 ரூபாய் தான் வருமானம். மேலும், இரண்டு ஓட்டல்களில் அக்கவுண்ட்ஸ் பார்ப்பார். மொத்தம் சேர்த்து, 1,500 ரூபாய் தான் வருமானம் வந்தது. பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டோம். என் கணவரின் ஆலோசனையின் படி, நிதி சம்பந்தமான துறைக்கு வந்தேன்.தபால் அலுவலகத்தில், ஆர்.டி., ஏஜன்டாக சேர்ந்தேன். ஒரு வயது பெண் குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வீடுவீடாக போய் ஆர்.டி., க்கு ஆட்கள் சேர்ப்பேன். அதன் பின், சிறிய அளவில் என் கணவர் அலுவலகம் வைத்துக் கொடுத்தார்.நிதி ஆலோசனை பற்றி, மக்களுக்கு அதிகம் தெரியாததால், யாருமே அலுவலகத்தை தேடி வரவில்லை. ஆனால், என் கணவரின் முயற்சிகள் வீணாகக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்தேன். கிடைத்த வாய்ப்புகளை திறமையாக கையாண்டேன்.என் கணவரும், அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, என்னுடன் கைகோர்த்தார். இப்படிப் படிபடியாக முன்னேறி, இன்ஷூரன்ஸ், வங்கி நிரந்தர வைப்பு நிதி, மியூச்சுவல் பண்ட் என, நிதி சம்பந்தமான அனைத்துத் திட்டங்களையும் வினியோகம் செய்கிறோம்.இப்போது, நான் பிசியான நிதி ஆலோசகர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக