girl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
girl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 டிசம்பர், 2012

11 years old girl issue notice to P.M. Manmohan

தகவல் உரிமைச் சட்டம்:  தல‌ைமை அமைச்சருக்கு  அறிவிப்பு  அனுப்பிய 11 அகவைச் சிறுமி 


இலக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

இந்நிலையில், அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என, கவலை தெரிவித்திருந்தார்.இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, தகவல் உரிமை சட்ட ஆர்வலர், 11 வயது, ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, தன் வழக்கறிஞர் மூலம், நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, பிரதமரை அவர் எச்சரித்துள்ளார்.

நோட்டீசில், சிறுமி தெரிவித்துள்ளதாவது:அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள் தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60 நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

"உண்மையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை, இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது' என, ஊர்வசி சர்மாவுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

பெண்கள் அலை பேசி வைத்திருந்தால் தண்டத் தொகை

பெண்கள் அலை பேசி  வைத்திருந்தால் தண்டத் தொகை: பீகாரில் பஞ்சாயத்து முடிவு

பாட்னா: பீகாரில் உள்ள, ஒரு கிராமத்தில், "இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாயும், திருமணமான பெண்கள், வீட்டுக்கு வெளியில், மொபைல் போன்களை பயன்படுத்தினால், 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்' என, பஞ்சாயத்து நிர்வாகம், உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான், அரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, சில கிராமங்களில், இளம் பெண்கள், மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், "கிராம நிர்வாகத்தின் உத்தரவை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான், அறிவிக்கப்பட்டதே தவிர, என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி, பகிரங்கமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில், பீகார் மாநிலம், கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள, சுந்தர்பதி என்ற கிராமத்தை சேர்ந்த, பஞ்சாயத்து நிர்வாகிகளின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த, முகமது மன்சூர் ஆலம் கூறியதாவது:இளம் பெண்கள், மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளம் பெண்கள், மொபைல் போன் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.திருமணமான பெண்கள், தங்களின் வீடுகளுக்கு வெளியில், மொபைல் போன் பயன்படுத்தியது தெரியவந்தால், அவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே போல், பெண்கள், சாலையோரங்களில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எங்கள் கிராமத்தை சேர்ந்த பெரியவர்களில் பெரும்பாலோனார், இந்த அபராதம் விதிப்பதற்கு, வரவேற்பு தெரிவித்துள்ளனர். மொபைல்போன் பயன்படுத்துவது, சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் செயல். இளம் பெண்கள், காதல் வலையில் விழுவதற்கு, இது காரணமாக இருக்கிறது.இவ்வாறு முகமது மன்சூர் ஆலம் கூறினார்.

திங்கள், 9 ஜூலை, 2012

சிறுநீரை க் குடிக்கவைத்து ச் சிறுமிக்கு த் துன்புறுத்தல்

சிறுநீரை க் குடிக்கவைத்து ச் சிறுமிக்கு த் துன்புறுத்தல்

First Published : 09 Jul 2012 03:07:42 AM IST


சாந்திநிகேதன் (மேற்கு வங்கம்), ஜூலை 8:÷மேற்கு வங்க மாநிலத்தில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்த 5-ம் வகுப்பு சிறுமியை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த பெண் விடுதிக் காப்பாளர் மீது போல்பூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பள்ளியின் விடுதியில் இச்சம்பவம் நடைபெற்றது.  படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தவறான பழக்கத்தை மாற்றுவதற்காக இதைச் செய்ததாக விடுதி காப்பாளர் கூறியுள்ளார். சிறுநீர் கழிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பைப் பிழிந்து சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி அவர் ஊற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.  இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்க முடிவு செய்துள்ளது

திங்கள், 10 அக்டோபர், 2011

4 year girl tells the names of 200 national flags: 200 நாடுகளின் தேசியக் கொடி: நான்குஅகவைச் சிறுமி அசத்தல்




கரூர் : கரூரில், இரண்டரை நிமிடத்தில், 200 நாடுகளின் தேசியக்கொடி பெயர் மற்றும் ஒன்றரை நிமிடத்தில், 99 வகையான பூக்களின் பெயர்களைச் சொல்லி, நான்கு வயது பள்ளிச் சிறுமி, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்'டில் இடம்பெற்று சாதனை புரிந்தார்.

கரூரைச் சேர்ந்த சக்திவேல்-செல்வி தம்பதியரின் மகள் இனியா,4. இவர், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறார். சிறுமி இனியாவுக்கு அதிகளவில் ஞாபக சக்தி இருந்ததை, அவரது பெற்றோர் அறிந்தனர்.இதையடுத்து, முதல் கட்டமாக தனித்திறனை வெளிப்படுத்த, சிறுமி இனியாவுக்கு, பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் பூக்களின் பெயர்களை கற்றுக்கொடுத்தனர். சில நாட்களில் தேசியக்கொடிகள் மற்றும் பூக்களின் பெயர்களை, சிறுமி இனியா தானாகவே சொல்ல ஆரம்பித்தார்.

இதையடுத்து, 200 நாடுகளின் தேசியக்கொடியைப் பார்த்து, நாட்டின் பெயரை சொல்லுதல் மற்றும் கபிலர் பாட்டில் உள்ள, 99 தமிழ்ப் பூக்களின் பெயர்களை பார்க்காமல் சொல்லுதல் ஆகிய சாதனை நிகழ்ச்சி, நேற்று கரூர் ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை மகாலில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், 200 நாடுகளில் தேசியக்கொடியைப் பார்த்து, நாடுகளின் பெயரை இரண்டு நிமிடம் 34 செகண்டிலும், 99 பூக்களின் பெயர்களை பார்க்காமல், ஒரு நிமிடம் இரண்டு செகண்டிலும் சிறுமி இனியா சொல்லி முடித்தார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளரும், நிர்வாகியுமான வெங்கடாச்சாரி, சாதனை சிறுமி இனியாவுக்கு, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சான்று வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் உமாபதி, ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.