குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூன், 2013

குடும்பத்துடன் உடல்தானம் செய்த முன்னாள் படைஞர்



பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தாலும் வாழ்வோம்...: குடும்பத்துடன் உடல்தானம் செய்த முன்னாள் படைவீரர்

கோவை: கோவையை ச் சேர்ந்த முன்னாள் படைவீரர், மனைவி, மகன், மகளுடன் முழு உடல்தானம் செய்தார். கோவை சூலூர், டிபென்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால், 51; முன்னாள் படைவீரர். அவரது மனைவி செல்லம்மாள், 46, மகள் பூவிழி, 24, மகன் கோவலன், 22, ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். குடும்பத்தினருடன் முழு உடல்தானம் செய்வதாக கலெக்டர் கருணாகரனிடம் கடிதம் கொடுத்தார்.

முன்னாள் படைவீரர் ராஜகோபால் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது, ரத்ததானம் செய்தேன். அதன்பின், கண்களை தானம் செய்ய படிவம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், கோவையை சேர்ந்த சுகுமாரி என்பவர், முழு உடல்தானம் செய்த செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். அவரை போன்று, நானும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்தானம் செய்ய திட்டமிட்டேன். என்னுடைய முடிவுக்கு குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் கிடைத்தது. என்னுடன் சேர்ந்து, மனைவி, மகள், மகன் ஆகியோரும் உடல்தானம் செய்ய விரும்பினர். உடல்தானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் எங்களுக்கு தெரியவில்லை. கோவை குனியமுத்தூரை சேர்ந்த, "பிறர்க்கு உதவு' என்ற பொது நல இயக்கத்தின் உதவியுடன் உடல்தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

வாழும் காலத்தில், பிறருக்கு உதவ வேண்டும் என்பதால், பிறந்தநாள், திருமண நாள்களில் பசியால் வாடுவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்து வருகிறோம். இருக்கும் போதும், இறந்த பிறகும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும். நாங்கள் இறந்ததும், எங்களது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கும், உடல் மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கும் பயன்படும். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாத உடல், மற்றவருக்கு பயன்பட வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் விருப்பம். இதன் மூலம் இறந்த பிறகும் வாழலாம். இவ்வாறு, ராஜகோபால் தெரிவித்தார்.

விழிப்புணர்வு ஏற்படும்!

"பிறர்க்கு உதவு' அமைப்பின் நிறுவனர் ராஜாசேதுமுரளி கூறுகையில், ""கோவையில் குடும்பத்துடன் உடல்தானம் செய்வது இதுவே முதல் முறை. ""இவர்களை பார்த்து எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவர்கள் நான்கு பேருடன் சேர்த்து, குனியமுத்தூரை சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி ராஜவேலு என்பவரும் உடல்தானம் செய்துள்ளார். எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை 29 பேரின் உடல்தானம் செய்ய பதிவு செய்துள்ளோம்'' என்றார்.

சனி, 8 டிசம்பர், 2012

பாதாளச் சாக்கடையில் குடும்பம்

பாதாள ச் சாக்கடையில் 22 ஆண்டுகளாக க் குடும்பம் நடத்தும்  வாழ்விணையர்

மெடிலின்: கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மெடிலின் நகரில் வசிப்பவர், மைக்கேல் ரெஸ்டிரிபோ, 62. இவரது மனைவி மரியா கிரேசியா. கூலி வேலை செய்து வந்த மைக்கேல், போதைக்கு அடிமையானதால், வறுமையில் வாடினார். மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கøடையின் ஒரு பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை, என ஒதுக்கி விட்டனர். இதனால், இந்த பாதாள சாக்கடையை, மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக்கொண்டு, 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை ஏற்படுத்தி கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர கொண்ட, பாதாள அறையில் டிவி, மின்விசிறி, உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.

மழை காலங்களில், பாதாள சாக்கøடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே இருக்கின்றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்துவைத்து விடுகின்றனர். இவர்களுடன் வசிக்கும் நாயுடன் தான், இந்த பாதாள அறைக்குள் தூங்குகின்றனர். இதுவரை நகராட்சி அதிகாரிகள் இவர்களை அகற்ற, எந்த நடவடிக்கை எடுக்காததால், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நம்நாட்டில் சாக்கடைக் குழாய்களில் எண்ணற்றோ ர்  வாழ்வதை அறிந்த நமக்கு இதில் ஒன்றும் விந்தை இல்லை!