birthday greettings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
birthday greettings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 நவம்பர், 2011

வாழ்க வாழ்க வாழ்கவே…




வாழ்க வாழ்க வாழ்கவே…

பதிவு செய்த நாள் : 26/11/2011


தமிழ்த் தேசிய ஞாலத் தலைவரே, பன்னாட்டு அவைகளிலும் தமிழீழத் தலைவராக உம் குரல் ஒலிக்கும் நாள் விரைவில்வரட்டும். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நலம் பெறவும் வளம் பெறவும் வாழ்க வாழ்க வாழ்கவே…
 
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன், 5 ஜனவரி, 2011

birthday greettings to kanimozhi: கனிமொழி பிறந்தநாள்


வாழ்க தமிழ் உணர்வோடு! வளர்க தமிழ் நலச் செயலோடு! கடந்த காலம் எவ்வாறிருப்பினும் இனி வருங்காலம் தமிழ்ப்பணியில் செல்லட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி வாழ்த்து


சென்னை, ஜன.5: தனது பிறந்தநாளையொட்டி முதல்வர் கருணாநிதியை அவரது மகளும், எம்பியுமான கனிமொழி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வரின் துணைவி ராஜாத்தி அம்மாள், செயலர்கள் ராஜமாணிக்கம், தேவராஜ், சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்

திங்கள், 27 டிசம்பர், 2010

Birthday wishes to nallakannu : நல்லகண்ணு பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து

எளிமையாய் வாழும், பிற கட்சியினரின் உள்ளங்களிலும் இடம்பிடித்துள்ள  கொள்கையாளர் தோழர் நல்லகண்ணு  அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்து தொண்டினைத் தொடரட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


நல்லகண்ணு பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து

First Published : 26 Dec 2010 02:49:36 PM IST


சென்னை, டிச.26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 86-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், சேதுராமன், துரைமாணிக்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலர் திருமலை, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுசீலா உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள்

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... உங்கள் சேவை தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.. உங்களுக்கு நீண்ட ஆயுளை ஆண்டவன் வழங்கட்டும் ...
By Velumani
12/26/2010 3:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நல்லகண்ணு பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து

First Published : 26 Dec 2010 02:49:36 PM IST


சென்னை, டிச.26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 86-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், சேதுராமன், துரைமாணிக்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலர் திருமலை, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுசீலா உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள்

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... உங்கள் சேவை தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.. உங்களுக்கு நீண்ட ஆயுளை ஆண்டவன் வழங்கட்டும் ...
By Velumani
12/26/2010 3:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இனமானப் பேராசிரியர் நூறாண்டு வாழ்ந்து கிரந்தத்தையும் அயற்சொல் கலப்பையும் அடியோடு ஒழிக்கட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அன்பழகன் பிறந்தநாள்: கருணாநிதி நேரில் வாழ்த்து

First Published : 19 Dec 2010 02:37:22 PM IST


சென்னை, டிச.19:  நிதி அமைச்சர் அன்பழகனின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு எம்பி உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.

வியாழன், 3 ஜூன், 2010

கருணாநிதி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து



சென்னை, ஜூன் 2: முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்: மக்கள் நலப் பணிகளை உயிரெனக் கருதி, தொண்டாற்றி, பெருவாழ்வு வாழ்ந்து புகழ் சேர்த்துள்ளவர் முதல்வர் கருணாநிதி. அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்காகப் பணியாற்றிட இந்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துகிறேன். பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்: முதல்வர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் வாழவும், பல சாதனைகள் படைக்கவும், தமிழகம் செழிக்கவும் அன்னை சக்தி அருள் புரிய வேண்டும். அவரது பிறந்த நாளில் தமிழனின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையிலும், தாய்மார்கள் மகிழும் வகையிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து, ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும். கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்: ராஜதந்திரத்தில் கருணாநிதியை மிஞ்சுபவர் எவருமில்லை. அவரது வாழ்வின் நீட்டம், தமிழ் இனத்தின் வளர்ச்சிப் பாதையின் ஓட்டம். எனவே, முதல்வர் கருணாநிதி தந்தை பெரியாரின் வயதையும் கடந்து பல்லாண்டு வாழ வேண்டும்.எஸ். ஜெகத்ரட்சகன், மத்திய இணையமைச்சர்: அரசியல் போர்க்களத்தில் அதிசயமானவர் முதல்வர் கருணாநிதி. அவர், எவரையும் அசைக்கும் எழுத்ததிகாரம், எவரையும் மயக்கும் சொல்லதிகாரம் படைத்தவர். தமிழர் வாழ்வுக்குச் செம்மொழி தந்த சிலப்பதிகாரம் அவர். இந்த சிறப்புகள் இமயம் வரை எட்டட்டும்.
கருத்துக்கள்

நாமும் வாழ்த்துவோம்! நீடு வாழ்க! நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க! தமிழ் மணத்துடன் வாழ்க!செழிப்புடன் வாழ்க! சிறப்புடன் வாழ்க! புகழுடன் வாழ்க! பொலிவுடன் வாழ்க! தமிழ் வாழ வாழ்க! இத்தகைய வாழ்வு வாழ வேண்டிய ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பறித்த கொலைகாரக் காங்கிரசில் இருந்து விலகி வாழ்க! ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த இன்னல்களுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழம் அமைய வாழ்க! தமிழர் தாயகம் தனியுரிமையுடன் திகழ வாழ்க! உலகத்தமிழர்கள் உயர்ந்தோங்க வாழ்க! தமிழ்நாட்டில் தமிழும் தமிழரும் தலைமையும் முதன்மையும் பெற வாழ்க! இந்தியக் கூட்டரசிலும் உலக அமைப்புகளிலும் தமிழ் உரிமையும் முதன்மையும் பெற வாழ்க!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2010 3:37:00 AM

இன்று பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களை நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !!! இனி வரும் இனிய நாட்களில் மாற்றாரும் மனம் மகிழ மனித நேயத்துடன் பணி செய்து சிறந்து விளங்கிட வேண்டுகிறேன் !!! @ rajasji

By rajasji
6/3/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 24 பிப்ரவரி, 2010

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து



சென்னை, ​​ பிப்.23:​ அ.தி.மு.க.​ பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.​ ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து,​​ அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:62-வது பிறந்தநாள் காணும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா,​​ நிறைந்த உடல் ஆரோக்கியத்துடன்,​​ நீடித்த ஆயுளோடு இருக்கவும்,​​ சமுதாயப் பணிச் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

காட்சிக்கு எளியன் கடுஞசொல்லன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்னும் திருக்குறளைப் (384) பின்பற்றினால் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தவறாக வழிகாட்டும் ஆரியக் கூட்டததைப் புறந்தள்ளித் தமிழ் நல முடிவுகளை எடுத்தால் நிலையான உயர்வைப் பெறுவார். இவரைத் தவிர வேறு யாரேனும் இவரது கட்சித் தலைமையில் இருந்திருந்தால் காங்.-தி.மு.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்திருக்கும். கடைசி நேரத்திலாவது தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததால்தான் இந்த அளவாவது வெற்றி காண முடிந்தது. அதற்குப்பின்னர் அதனை மறந்ததால் கட்சி வளர்ச்சி தேக்கநிலையாகி விட்டது. எனவே, இக் குறைகளைக் களைந்து பெருந்தலைவர், பேரறிஞர், கலைஞர் முதலானவர்களிடம் இருந்து மக்களுடனான தொடர்பு முறையைக் கற்றுக் கொண்டு.தான் என்ன இனம் ஆக இருந்தாலும் தமிழின மக்களுக்கான கட்சியின் தலைமையில் உள்ளமையை உணர்ந்து தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனக் குரல் கொடுத்து தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழம் அமைய உலக நாடுகளில் குரல் கொடுத்து வெற்றி மா‌லை யணிந்து 100 ஆண்டு வாழ்வாராக!

By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *