pon.radhakrishnan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pon.radhakrishnan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பாசக வேடிக்கை பார்க்காது: பொன். இராதாகிருட்டிணன் பேச்சு

பாஜக வேடிக்கை பார்க்காது: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

First Published : 08 Aug 2011 12:41:42 AM IST


ராமேசுவரம், ஆக. 7: தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத் தரக் கோரி, ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் கடல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன திமுக அரசால் இன்று தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.  கச்சத்தீவில் பாதுகாப்பாக மீன் பிடிக்கும் உரிமை வேண்டி நானும், சுப.நாகராஜன் உள்ளிட்ட சில தொண்டர்களும் சுமார் 6 மணி நேரம் நாட்டுப் படகில் கடலுக்குள் சென்று மறியல் போராட்டம் நடத்தினோம்.  மத்திய அரசு மீனவர்கள் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண வேண்டும். தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது. இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பாஜக சார்பில் கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தி, கச்சத்தீவை மீட்போம் என்றார்.  பாஜக தேசியச் செயலர் முரளீதர ராவ் பேசியதாவது:  இந்தியனுக்கு இடமில்லாத கச்சத்தீவில், சீன வீரர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச இடம் அளித்துள்ளார். இதைக் கண்டிக்காமல் பிரதமர், வெளியுறவுத் துறை, உள்துறை அமைச்சர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கு காங்கிரஸ், திமுக அரசுகள் மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளன. இந்தியர்களின் மூச்சுக் காற்று பட்டாலே இலங்கை காணாமல் போய்விடும். ஆனால், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொன்றும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.  இதற்கு மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்குதான் காரணம். தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டி, பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்வதில்தான் அக்கறை காட்டி வருகின்றனர்.  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளார். அப்போது அந் நாட்டு அரசிடம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்த நிறுத்த வலியுறுத்துவார் என்றார் முரளீதர ராவ். 

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

During D.M.K. and A.D.M.KL. regimes thamixhnadu met Retreat திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவு: பொன்.இராதாகிருட்டிணன்

பேராயக்கட்சியான காங். ஆட்சியை விட அடுத்து அமைந்த இரு கழகங்கள் ஆட்சியும் பல நன்மைகளை நாட்டிற்குச் செய்துள்ளன; இருப்பினும் எதிர்பார்த்த நன்மையான தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமையிடம் என்பதில் இரண்டும் கோட்டை விட்டன. அதனால்தான் இரண்டையும் எதிர்க்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக ௨ கழகங்களின் ஆட்சியால் கேடு என்று கூறக்கூடாது. ஊழலைப் பொறுத்தவரை எல்லா நாடுகளிலும் உள்ளது. பேராயக் காங். கின் ஊழலை யாரும் முந்த முடியாது. எனவே, அதற்கு 2 கழகங்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. எதிர்பார்த்தவாறான நேர்மையான ஆட்சியைத் தரவில்லை என்பது உண்மைதான்.  ஆனால், காங். இருநதிருந்தால் இன்னும் மோசமாக இருநதிருக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவு: 
பொன். ராதாகிருஷ்ணன்


களியக்காவிளை, ஏப். 3: தமிழகத்தை 44 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டை வளர்ச்சி விகிதத்தில் பின்னோக்கிக் கொண்டு சென்றுள்ளன என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.  கிள்ளியூர் தொகுதி பாஜக வேட்பாளர் டி. சந்திரகுமாரை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவர் அதங்கோட்டில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:  ஏராளமான சாதனைகள் செய்ததாகக் கூறியுள்ளார். சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். இலவசங்களை ஏராளமாக அறிவித்து அவை முழுமையாகக் கொடுக்கப்படாவிட்டாலும், கொடுத்து முடித்துவிட்டதாகக் கூறுகிறார்.  அப்படியிருந்தும், திமுக தனித்து தேர்தலைச் சந்திக்க அச்சப்படுகிறது. இருமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை.  இக் கட்சிகள் இப்போது சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலில் மட்டும் வெற்றிபெற முயல்கின்றனர்.  தமிழக பாஜகவுக்கு நான் தலைமையேற்ற நாள்முதல், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற முடிவை அறிவித்து தேர்தலைச் சந்திக்கிறோம். பாஜக நிலைப்பாட்டை மக்கள் பரிபூரணமாக ஏற்றுள்ளனர். வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம்.  தமிழகத்தில் ஆட்சி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்யும். இம் மாவட்டத்தில் கிள்ளியூர் உள்பட 6 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.  தேர்தல் முடியும் வரை இரவில் மின்வெட்டு ஏற்படாமலிருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பணம் கடத்த பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் சோதனையை எல்லா வாகனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.  அதங்கோட்டில் இருந்து பிரசாரம் மேற்கொண்ட அவர் படந்தாலுமூடு, கோழிவிளை, தளச்சான்விளை, சூழால், நடைக்காவு, நித்திரவிளை, மங்காடு வழியாக இரவு விழுதலம்பள்ளத்தில் நிறைவு செய்தார்.  அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்


தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூடும்போதெல்லாம் விலைவாசி ஏறிவிடுகிறது. அரசு பதவியில் கடைநிலை ஊழியர்கூட மாதம் சுளையாக குறைந்தது பத்தாயிரம் பெறமுடிகிறது. இதே தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களுக்கு இரண்டாயிரத்துக்கு மேல் போய்விட்டால் அவர் பெரும் பேறு பெற்றவர்! தனியார் நிறுவனங்களில் சம்பள ஏற்றம் என்பது அதன் லாபம் மற்றும் ஊழியரின் திறமை உழைப்பு, நடத்தை என்ற அடிப்படையில்தான் இருக்கும்; அரசு ஊழியர்கள் பலரது திறமை, உழைப்பு, நடத்தை குறித்து நான் கூறி உங்களுக்குப் புரியவேண்டிய அவசியம் இல்லை. பணிகளைப் புறக்கணித்து, அடங்க மறுத்து சாதாரண போராட்டத்தை வன்முறைக் களமாக்கிய அரசு ஊழியர்களை அடக்க அப்போது கடுமையான சட்டங்கள் தேவைப் பட்டன! அதில் தவறு காண்பவர்கள் மக்கள் விரோதிகள். ஏனினில் மக்களின் வரிப்பணம் அரசு ஊழியர்களிடமிருந்து மட்டுமே பெறப்படுவதில்லை. அரசு ஊழியர்கள் மக்களில் இரண்டு சதவிகிதம் தான். பணம், மற்றும் ஆசை காட்டி மதம் மாற்றுவது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது! அதன்படி மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது தவறல்ல. பின்னர் அவரே அதை ஓட்டுக்காக வாபஸ் பெற்றதே தவறு!! திருமா, ரா
By முத்துக்குமார்
4/4/2011 1:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 27 நவம்பர், 2010

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை

பிற்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை முதலான துறைகள் மூலம் இப்பொழுதும் அரசு ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்துத்தான் வருகிறது. கேட்க வேண்டியதை வெளிப்படையாகக் கேட்க வேண்டும். ௨.) சிறுபான்மையர் என்ற ஒதுக்கீட்டில் கல்வி நிறுவனங்கள் தொ டங்குபவர்கள் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் எத்தனை விழுக்காட்டினரோ  அந்த அளவிற்கு மட்டுமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில்
௭௫ விழுக்காட்டினர் சிறுபான்மையர் என்ற போர்வையில் இசைவு வாங்கி நடத்துபவர்களே. இந்நிலை மாறி அவர்களின்பொது இசைவிற்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை: அரசியல் கட்சிகள் பேச பயப்படுவது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

First Published : 27 Nov 2010 03:59:03 AM IST


சிதம்பரம், நவ. 26: சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கி பாதித்துவிடும் என தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்குவது போல் ஏழை இந்து சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து பேச பயப்படுகின்றன என பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.÷பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான தாமரை யாத்திரை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.÷இக் குழு சிதம்பரம் நகருக்கு வெள்ளிக்கிழமை மாலை வருகை தந்தது. அப்போது வடக்குமெயின்ரோட்டில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:÷இஸ்லாமிய, கிறிஸ்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஏழை இந்து சமுதாயத்தில் உள்ள மாணவர்களுக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை உதவித்தொகை வழங்க வேண்டும்.÷சிறுபான்மையினருக்கு வழங்குவது போல் இந்து இளைஞர்களுக்கு குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்.÷சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதித்துவிடும் என தமிழகத்தில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இப்பிரச்னையை எடுத்து பேச பயப்படுகின்றன.÷கடந்த 4 ஆண்டுகளாக இப்பிரச்னை குறித்து வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல் பாஜக மட்டும்தான் போராடி வருகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.29-ல் போராட்டம்: நிதின்கட்கரி பங்கேற்புரதயாத்திரை குழு ஜனவரி 29-ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. அங்கு இப்பிரச்னை குறித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.÷இதில் பாஜக அகில இந்திய தலைவர் நிதின்கட்கரி பங்கேற்கிறார். இப்போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க இந்த யாத்திரை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.÷நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எம்.சீனுவாசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் க.எழிலரசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சு.ஆதவன், மாநில விவசாயி அணி செயலாளர் கே.வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தனித்து போட்டியிட்டால் சாயம் வெளுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமி​ழக சட்​டப்​பே​ர​வைத் தேர்​தல் குறித்து பா.ஜ.க நிர்​வா​கி​கள் ஆலோ​ச​னைக் கூட்​டம் சென்​னை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்ற ​(வல​
சென்னை, செப். 23:  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியின் சாயம் வெளுக்கும் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து பா.ஜ.க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன் தலைமை வகித்தார்.இதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள்  குறித்து மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைவோம். கூட்டணி  குறித்து இதுவரை எங்களிடம் எந்த கட்சியும் பேசவில்லை. நாங்களும் யாருடனும் பேசவில்லை. இப்போதைக்கு கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவையில் கட்சி பலமாக உள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல இந்து மாணவர்களுக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை  வழங்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்த உள்ளோம். விவசாயிகள் பிரச்னை, கோயில் நில மீட்பு விவகாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துவோம். தமிழகத்தில் எல்லா வகையிலும் நிர்வாகம் செயல் இழந்துவிட்டது. தனியார் பள்ளி கட்டணம் தொடர்பான நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் அறிக்கையைக்கூட சரியாக செயல்படுத்த முடியவில்லை.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அதன் சாயம் வெளுத்துவிடும். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்றுள்ள ஊழல் மூலம் இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைக்குனிவு ஏற்படுள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன். கட்சியின் அகில இந்திய அமைப்பு இணைச்செயலர் வி.சதீஸ், கட்சியின்  தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில நிர்வாகிகள் இல.கணேசன், எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

காங்.கிற்கும் இந்த உண்மை தெரியும். ஆனால், அதுதான் பெரும்பான்மை வலிமையுடன் இருப்பது போல் கதை அளந்து ஏமாற்றிக் கொண்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதன் வலிமையால் பெரிய கட்சிகள் அதனுடன் கூட்டணி வைக்கப் போட்டிப் போட்டு அதைப்பெரிய கட்சியாக ஆக்குகிறார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 15 ஜூன், 2010

இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்



சென்னை, ஜூன் 14: இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலேயே, தமிழர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா. அவர் இப்போது காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பித்து கொழும்பு சென்று விட்டார். மத்திய அரசால் தப்பிக்க வைத்து, அனுப்பப்பட்டுள்ளார் என்பதே சரியானதாகும். டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், தேவானந்தா குறித்து தில்லிக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந் நிலையில் அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்பிச் சென்றுள்ளது, ஒரு குற்றவாளியை தப்பிக்க வைக்கும் மத்திய அரசின் உள்நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும், தீர்ப்பு வரட்டும். பார்க்கலாம் என்று ப. சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது. தமிழர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு இப்போது உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழ் அமைச்சர்களும் அவ்வாறுதான் உள்ளனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போயிருக்கும் மத்திய அரசு, தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என்று இப்போது கூறியிருக்கிறது. இதற்கு முன்பு அளிக்கப்பட்ட ரூ.1000 கோடி, தமிழர்களுக்காக செலவிடப்பட்டதாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான விவரங்களைப் பெற மத்திய அரசு முயற்சிக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பெயரில் கொடுக்கப்படும் பணம், அவர்களுக்குதான் பயன்படும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை. ù தாடர்ந்து தமிழர் எதிர்ப்பு நிலையையே மத்திய அரசு எடுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்த நிலையிலும் இப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி பாராமுகமாக இருப்பது நல்லதல்ல. எனவே, கருணாநிதி உடனே தலையிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

உண்மையைத்தான் சொல்லுகிறார் பொன்.இராதாகிருட்டிணன். ஆனால், மத்திய அரசு கொள்கையே எங்கள் கொள்கை எனக் கூறும் தமிழக அரசு தமிழர் எதிர்ப்பு நிலையைக் கைவிடுமாறு மத்திய அரசிடம் சொல்லும் என எதிர்பார்ப்பது அறியாமையே. தமிழக அரசின் நிலையைத் / தமிழர்களின் உணர்வை மத்திய அரசிற்கு உணர்த்தும் நிலையை /மத்திய அரசிற்கு உணர்த்துவதே கடமை எனத் தமிழக அரசு நினைத்திருநதால் பேரின அழிப்பு நடைபெற்றிருக்காதே. எனவே, நாடு தழுவிய நிலையில் தன் கட்சி மூலம் இதனை அறிவுறுத்தும் கடமையை அவர் மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

ராஜ​பட்ச -​ தமி​ழக எம்.பி.க்கள் ​சந்​திப்பு வெறும் நாட​கம்: ​பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன்



சென்னை, ​​ ஜூன் 10: இலங்கை அதி​பர் ராஜ​பட்​சவை,​​ தமி​ழக எம்.பி.க்கள் சந்​தித்​துப் பேசி​யது வெறும் நாட​கம் என்று பா.ஜ.க.​ மாநி​லத் தலை​வர் பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​ ​​ இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​ ​​ பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​பட்ச புது​தில்லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது.​ ​​ ஏற்​கெ​னவே இலங்கை சென்று ராஜ​பட்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் தில்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​ இது வெறும் சம்​பி​ர​தாய சந்​திப்​பாக நடை​பெற்​றுள்​ளது.​ ​​ தமி​ழர்​கள் தங்​கள் சொந்த இடங்​க​ளில் இன்​னும் 3 மாதங்​க​ளில் குடி​ம​யர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எப்​போ​தும் சொல்​வ​தையே இப்​போ​தும் ராஜ​பட்ச சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அத​னைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்​ட​தைப் போல தமி​ழக எம்.பி.க்கள் திரும்பி வந்​துள்​ள​னர்.​​ இலங்​கை​யில் நடை​பெ​றும் கொடு​மை​யை​விட,​​ ஆளும் காங்​கி​ரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்​றும் ராஜ​பட்ச நடத்​தும் நாட​கம் பெரும் கொடு​மை​யாக உள்​ளது.​ ​ ​​ இந்​தியா -​ இலங்கை இடையே இப்​போது 7 ஒப்​பந்​தங்​கள் கையெ​ழுத்​தா​கி​யுள்​ளன.​ ஆனால்,​​ இலங்​கைத் தமி​ழர் பிரச்னை பற்றி மேம்​போக்​கான,​​ கண்​து​டைப்​பான ஒரு ஒப்​பந்​தம் தவிர,​​ திட்​ட​வட்​ட​மான நட​வ​டிக்​கை​கள் எது​வும் இல்லை.​ இதி​லி​ருந்தே,​​ தமி​ழர்​களை ஒழிப்​ப​தில் இந்​தி​யா​வும்,​​ இலங்​கை​யும் கூட்​டாக செயல்​ப​டு​வது வெட்ட வெளிச்​ச​மா​கி​றது.​ ​​ இந்​தி​யா​வில் தேடப்​ப​டும் குற்​ற​வா​ளி​யான இலங்கை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்​தா​வை​யும் ராஜ​பட்ச தன்​னு​டன் அழைத்து வந்​தி​ருக்​கி​றார்.​ ​​ இந்​திய நாட்​டின் சட்​டம்,​​ ஒழுங்கு எவ​ரை​யும் விட்டு வைக்​காது என்​பதை புரிய வைக்க வேண்​டும்.​ எனவே,​​ டக்​ளஸ் தேவா​னந்​தாவை உட​ன​டி​யாக கைது செய்ய வேண்​டும்.​ ​​ இலங்​கை​யில் நடக்​கும் மறு சீர​மைப்​புப் பணி​க​ளில் சீனர்​க​ளைப் பயன்​ப​டுத்​தக் கூடாது.​ அந்​தப் பணி​களை தமி​ழர்​க​ளுக்கு வழங்க ராஜ​பட்​ச​வி​டம் இந்​திய அரசு வலி​யு​றுத்த வேண்​டும் என்று பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.
கருத்துக்கள்

நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 2 மே, 2010

நளினி - பிரியங்கா சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருட்டிணன்



கடலூரில் சனிக்கிழமை சுவாமி சகஜானந்தா நினைவு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி.
கடலூர், மே 1: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி நளினியை, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கடலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:நளினியுடன் பிரியங்கா சந்தித்துப் பேசிய பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது இந்திய மக்களுக்கே பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இது மனிதாபிமானமற்ற செயல். இந்திய அரசு அவரது மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவரது வருகையால் இந்தியாவில் தீவிரவாதம் தோன்றி, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றால் அதை கண்காணிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். தமிழ்ச் சமுதாயத்துக்கே எதிராகச் செயல்படுகிறது திமுக.சுவாமி சகஜானந்தா மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். எனவே அவரது குருபூஜையில் பாஜக கலந்து கொள்கிறது என்றார் ராதாகிருஷ்ணன்.பாஜக சார்பில் பேரணி: சுவாமி சகஜானந்தா குருபூஜையை முன்னிட்டு கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு, பாஜக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது. பேரணியை முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் நாகராஜன், மாநிலச் செயலர் ஆதவன், தாழ்த்தப்பட்டோர் அணி செயலர் பழநிவேல், மண்டலத் தலைவர் ஸ்ரீதரன், மாவட்டத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

தமிழ் மன்பதைக்கு எதிரான செயலைக் கண்டிப்பதற்குப் பாராட்டுகள். எனினும் நளினி பிரியங்கா சந்திப்பு குறித்து அறிக்கை அளித்தாலும் அதில் உண்மை இருக்கும் என்று எவ்வாறு நம்புவது? நளினியை விடுதலை செய்தாலே உண்மை வெளிவருமே! அதனால்தான் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, நளினியின் விடுதலையை வலியுறுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 24 பிப்ரவரி, 2010

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து



சென்னை, ​​ பிப்.23:​ அ.தி.மு.க.​ பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.​ ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து,​​ அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:62-வது பிறந்தநாள் காணும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா,​​ நிறைந்த உடல் ஆரோக்கியத்துடன்,​​ நீடித்த ஆயுளோடு இருக்கவும்,​​ சமுதாயப் பணிச் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

காட்சிக்கு எளியன் கடுஞசொல்லன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்னும் திருக்குறளைப் (384) பின்பற்றினால் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தவறாக வழிகாட்டும் ஆரியக் கூட்டததைப் புறந்தள்ளித் தமிழ் நல முடிவுகளை எடுத்தால் நிலையான உயர்வைப் பெறுவார். இவரைத் தவிர வேறு யாரேனும் இவரது கட்சித் தலைமையில் இருந்திருந்தால் காங்.-தி.மு.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்திருக்கும். கடைசி நேரத்திலாவது தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததால்தான் இந்த அளவாவது வெற்றி காண முடிந்தது. அதற்குப்பின்னர் அதனை மறந்ததால் கட்சி வளர்ச்சி தேக்கநிலையாகி விட்டது. எனவே, இக் குறைகளைக் களைந்து பெருந்தலைவர், பேரறிஞர், கலைஞர் முதலானவர்களிடம் இருந்து மக்களுடனான தொடர்பு முறையைக் கற்றுக் கொண்டு.தான் என்ன இனம் ஆக இருந்தாலும் தமிழின மக்களுக்கான கட்சியின் தலைமையில் உள்ளமையை உணர்ந்து தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனக் குரல் கொடுத்து தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழம் அமைய உலக நாடுகளில் குரல் கொடுத்து வெற்றி மா‌லை யணிந்து 100 ஆண்டு வாழ்வாராக!

By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *