official language லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
official language லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

முதலமைச்சர் தனிப்பிரிவில் முன்முறையாகத் தமிழ் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.


பொதுமக்கள் நன்மை பெறுவதற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலப் பயன்பாட்டில் இருப்பதால்  பெருவாரியான மக்களுக்கு என்ன நன்மை? எனவே, தமிழில் பயன்பாடு முழுமையாக இருக்கும் வகையில் வலைத்தளத்தை மாற்ற வேண்டும். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும் மடல்களும் தமிழில் இருத்தல் வேண்டும். இது குறித்து நான் முன்னரே இப்பிரிவிற்கு முறையிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி இயக்குநரும் மடல் எண் ந.க.ஆ.மொ.3 /5316/2012  நாள் 30 .07 .12  இல் இந்திய அரசால் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிச் சட்டத்திற்கு உறுதுணை புரியுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவி்ற்கு மடல் அனுப்பி உள்ளது.  எனவே, முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையத் தளம் உட்பட அனைத்திலும் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தைமுழுமையாக நிறைவேற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், சென்னை 600004.


முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க புதிய வலைத்தளம்: தொடங்கி வைத்தார் முதல்வர்


Last Updated : 12 Aug 2012 01:08:49 PM IST
சென்னை, ஆக.12: முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..." ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,  தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள்  வாயிலாகவும்  நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.  இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார். இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு  உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.  சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள  முதலமைச்சர் தனிப்பிரிவின்  ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்  மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போது அனைவரிடமும் கைப்பேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் மூலம்  மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல்வர் துவக்கி வைத்தார்கள். அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிடிருந்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண்,  தொடர்புடைய  அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து  குறுந்தகவல்  மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வர் 11.8.2012 அன்று மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 113 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். ”-இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 9 மே, 2011

thamizh should be the offical langugage of Puduchery: புதுவையில் அலுவல் மொழியாக தமிழ் வரவேண்டும்

காங்.அமைச்சர் இதைப் பேசுகிறார் என்னும் பொழுது விந்தையாகத்தான் இருக்கிறது. எனவே, பேச்சுடன் நிற்காமல் புதுச்சேரியில் தமிழே ஆட்சிமொழியாக நிலைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வாகை சூட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புதுவையில் அலுவல் மொழியாக தமிழ் வரவேண்டும்

First Published : 09 May 2011 04:10:43 AM IST

Last Updated : 09 May 2011 04:14:01 AM IST

கம்பன் விழாவில் பேசுகிறார் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி. (இடது படம்) விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.
புதுச்சேரி, மே 8: புதுச்சேரியில் அலுவல் மொழியாக தமிழ் வரவேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி விருப்பம் தெரிவித்தார். புதுச்சேரி கம்பன் விழாவில் பங்கேற்ற பல்வேறு நாடுகள், ஊர்களில் இருந்து வந்திருக்கும் கம்பன் கழக பிரதிநிதிகளை கெüரவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி பங்கேற்று அனைவரையும் கெüரவித்தார்.பின்னர் நாராயணசாமி பேசியது:45 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெரு முயற்சியால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒத்துழைப்புடன், மன்மோகன் சிங் ஆசியில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இது தமிழுக்கு கிடைத்த முத்திரை. சில தினங்களுக்கு முன்பு தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கி சிறப்பித்துள்ளார்.புதுச்சேரியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் நீதிமன்றத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஆங்கிலம் குறையவில்லை. புதுச்சேரியில் அலுவல் மொழியாக தமிழ் வர வேண்டும். இதற்கான மனப்பக்குவம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வர வேண்டும். அதற்கு ஆட்சியாளர்களுக்கு தமிழ் அறிஞர்கள் உறுதுணையாக இருந்து, தமிழை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் கற்றால் முன்னேற முடியும் என்ற நிலையை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும். என்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி உடனிருந்தார்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

நல்ல பதிவு. பாராட்டுகள்.ஆட்சி மொழியாகத் தமிழைக் கொண்டு வந்த காங்.தான் பயிற்சி மொழியாகத் தமிழ் வராமல் தடுத்தார்கள். தமிழில் படிபக்க வாய்ப்பு இல்லையெனில்  ஆட்சி மட்டும் எவ்வாறு தமிழில் இருக்கும் என்று சிந்திக்கத் தவறியவர்கள். தில்லிக்குக் காவடி தூக்கினால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இச்சட்டத்தைக்கூட முழுமையாக நடத்தத் தவறிய குற்றத்திற்கு இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளும் இருக்கும் கட்சியும் பொறுப்பாகும். தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்காத கட்சியும் ஆட்சியும் வேண்டா என மக்கள் முடிவெடுத்துச் செயல்படுத்த வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 


சனி, 5 ஜூன், 2010

தமிழ் வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?



புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த 1956-ல் நாட்டில் மொழி வாரியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களின் நிர்வாகம் அந்தந்த மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியில்தான் நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து, சட்டப் பேரவையில் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, 1996-ல் முதல் முறையாக தமிழ் ஆட்சி மொழித் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றும் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலியிலும், சேலத்திலும் மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில், ஆட்சி மொழிச் சட்டத்தை முழு அளவில் நிறைவேற்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி பெற அரசு வழி வகுத்தது.மாவட்டந்தோறும் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு ஓர் இயக்குநர் உள்பட 5 ஊழியர்கள் என்ற விகிதத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தனி வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 51 அரசுத் துறை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆட்சி மொழி பயன்படுத்தப்படும் நிலைமையை ஆய்வு செய்து, தமிழ்ச் சொற்களுக்கான விளக்கங்களையும், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட ஆட்சி சொல்லகராதியையும் அளித்து, அனைத்துக் கோப்புகளையும் தமிழ் மொழியில் கொண்டு வரச் செய்வதே இந்த அலுவலகத்தின் அன்றாடப் பணியாகும்.தினமும் ஒன்று அல்லது இரண்டு அரசு அலுவலகம் என்ற விகிதத்தில் மாதம் 40 அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இவற்றில் தேனி, அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உதவி இயக்குநர் பணியிடம் காலியாகவும், கடலூர், விழுப்புரம் மாவட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், சில மாவட்டங்களில் வாகன வசதியும் இல்லை.இதன் காரணமாக, அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக மாற்றும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மேலும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கையை தீவிரமாக அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறையினர் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் எதிர்பார்ப்பு, முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் நிறைவேறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்திய முதல்வர், இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி இந்தக் குறையைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
கருத்துக்கள்

பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டும் தமிழ் ஆட்சிமொழி முழுமையாக நிறைவேறுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ் ஆட்சிமொழியாகச்சிறக்க வேண்டும் என்றால் உடனே தமிழ் வளர்ச்சித்துறையை மூட வேண்டும். நிதியுதவி, பரிசு வழங்கல் முதலான நலப்பணிகளைத் (தமிழ்நாடு இயல இசை நாடக மன்றத்திலிருந்து இயல் பணிகளைப் பிரித்துத்) தமிழ்நாடு இயல்மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாணைகள் அனைத்தையும் தமிழில் வெளிவரச் செய்து தமிழில் உள்ள பட்டியல்கள், காசோலைகள், ஒப்பந்தங்கள் முதலானவை மட்டுமே செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழறிஞர்களைக் கொண்ட வழிநடத்தும் குழுவை அமைத்து நல்ல தமிழில் எழுத வழிகாட்ட வேண்டும். உயர் நீதிபதி தலைமையில் செயலாக்கக் குழுவை நிறுவி விதி மீறுவோருக்குத் தண்டனை வழங்க வேண்டும். இவற்றைச் செய்வார் யாருமில்லை. எனவே, ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம் என்பது கானல் நீரே. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/5/2010 1:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

முல்லைப் பெரியாறு ஐவர் குழுவில் தமிழகப் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை: தி.மு.க. வலியுறுத்தல்



சென்னை,பிப்.20: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்யும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்கள் விவரம்:முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று 27.2.2006}ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரளம் இத்தீர்ப்பை மதிக்காமல், அதற்கு மாறாக ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது.இந்த சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஆய்வு நடத்த ஐவர் குழுவை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தமிழக அரசின் வழக்கையே திசை திருப்பி, கேரளம் நிறைவேற்றிய சட்ட திருத்தத்துக்கு உட்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இப்பிரச்னையில் உச்ச நீதிமன்றம் சார்பிலும், 7 பேர் கொண்ட மிட்டல் குழு சார்பிலும் ஏற்கெனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அணை வலுவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்று தி.மு.க. உறுதியாகக் கருதுகிறது.இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கையில் போர் முடிந்த பிறகும், இன்னும் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப முடியாமல், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காலம் தாழ்த்தாமல், அவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதைத் தவிர வேறு எந்தத் தீர்வும் கிடையாது. ஏற்கெனவே உறுதி அளித்தபடி, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சக வாழ்வுக்கு வழி வகுக்கும். எனவே, அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும். மீனவர் பிரச்னை: இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியும் கூட, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள் தொடர் கதையாகவே உள்ளன. இலங்கைக் கடற்படையின் இந்த வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான ஒரு முடிவினை ஏற்படுத்த வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.சேது சமுத்திர திட்டம்: ராமர் பாலம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், மதவாதக் காரணங்களைக் காட்டி, சேது சமுத்திர திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதற்கான வழக்கை விரைந்து முடித்திட மத்திய அரசு முயல வேண்டும். தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.கட்டாய திருமணப் பதிவு: திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் குறித்து இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கென தனியான திருமணச் சட்டங்கள் இருக்கும் நிலையில், இப்போதைய சட்டத்தின் மூலம் அவர்களது மார்க்க நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இப்பிரச்னை குறித்து இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மகளிர் மசோதா: சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மாநில சுயாட்சி: மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி, விரைவில் முடிக்க வேண்டும். சேலம் ரயில்வே கோட்டம் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்:தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டல திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

1.) குழு என ஒன்று இருந்தால் அதில் நமது சார்பாளர் இல்லையேல் கருத்தினை எதிரொலிக்கவோ குழுவின் நடவடிக்கையை அறியவோ இயலாது. இவ்வாறான நழுவலான தவறான முடிவை எடுப்பதற்கு மாறாக இத்தகைய குழுவை அமர்த்துவதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உடனடித் தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வெற்றி காண்பதே சரியாதாகும். 2)ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்வகைக் கண்டனமும் இரங்கலும் தெரிவிக்காமல் தமிழ் ஈழமே தீர்வு என்னும் ஈழத் தமிழர்களின் கோரிக்கயை ஏற்காமல் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்னும் பசப்புத் தீர்மானம். 3.) மத்திய அரசு மீனவரகள் படுகொலையை நிறுத்தும் வகையில் நடவடிக்கையை எடுக்காகவிட்டால் தமிழக அரசே நேரடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்க எடுக்கும் என எச்சரிக்காமல் கொண்டு வந்துள்ள போலித் தீர்மானம். 4.) மாநிலத் தன்னாட்சி குறித்து ஒப்புக்குச் சப்பாணித் தீர்மானம். சரி!சரி! மக்கள் பார்க்க விரும்பாத திமுக நாடகம் எப்படி நடந்தால் என்ன?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 4:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இச்செய்தி குறித்து அதிகக் கருத்துகள் பதிவாகவில்லை. ஒரு வேளை திமுக தீர்மானங்கள் என எண்ணாமல் திமுகா - திராவிட முன்னேற்றக் காங்கிரசு எனப் பெயர் மாற்றம் செய்து விட்டார்கள் என எண்ணியுள்ளனர் போலும். காங்கிரசின் ஊதுகுழலாகத் திமுக செயல்படுவதை விட அவ்வாறு பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 11:09:00 AM

1.) குழு என ஒன்று இருந்தால் அதில் நமது சார்பாளர் இல்லையேல் கருத்தினை எதிரொலிக்கவோ குழுவின் நடவடிக்கையை அறியவோ இயலாது. இவ்வாறான நழுவலான தவறான முடிவை எடுப்பதற்கு மாறாக இத்தகைய குழுவை அமர்த்துவதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உடனடித் தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வெற்றி காண்பதே சரியாதாகும். 2)ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்வகைக் கண்டனமும் இரங்கலும் தெரிவிக்காமல் தமிழ் ஈழமே தீர்வு என்னும் ஈழத் தமிழர்களின் கோரிக்கயை ஏற்காமல் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்னும் பசப்புத் தீர்மானம். 3.) மத்திய அரசு மீனவரகள் படுகொலையை நிறுத்தும் வகையில் நடவடிக்கையை எடுக்காகவிட்டால் தமிழக அரசே நேரடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்க எடுக்கும் என எச்சரிக்காமல் கொண்டு வந்துள்ள போலித் தீர்மானம். 4.) மாநிலத் தன்னாட்சி குறித்து ஒப்புக்குச் சப்பாணித் தீர்மானம். சரி!சரி! மக்கள் பார்க்க விரும்பாத திமுக நாடகம் எப்படி நடந்தால் என்ன?

By usanthan
2/21/2010 10:45:00 AM

மழுப்பலாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் பொதுக்குழுவை கூட்டுவார். உண்மையை சொல்லும்போது கூட கருணாநிதி பயந்து பயந்து சொல்ல வேண்டுமா?. வாயில் தலையை விட்டாலும் கடிக்காத கிழட்டு சிங்கம்தான் கருணாநிதி என்பதை அண்டை மாநிலத்தார்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். அண்டை மாநிலங்களை பகைத்துக் கொண்டால் தனது குடும்ப தொல்லை காட்சிகளின் வியாபாரம் பாதிக்கப்படும் அல்லவா!

By கழககோழை
2/21/2010 9:48:00 AM

மதிப்புக்குரிய இலக்குவனார் திருவள்ளுவர் அவர்களே ! நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அவர்களுக்கு தெரியாததா ? அவர்கள் கழ்வும் மீனில் நழுவும் விலாங்குகள். எதை எப்படி செய்தால், என்ன என்ன பயன் கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பவர்கள். தமிழ், தமிழர்கள், தமிழகம் எல்லாம் இவர்கள் சுகமாக, பணக்காரர்களாக, ஆட்சியாளர்களாக இருக்க உதவும் சொற்கள்; மற்றபடி அவர்கள் veettu pillai kuttihalai paarungal. English kaarargal pola iruppaargal. PADIPPADHU RAAMAAYANAM; IDIPADHU PERUMAL KOVIL. OORUKKUTHAAN UPADHESAM; IDHU KALANJAR PAANI.

By pannadai pandian
2/21/2010 6:58:00 AM

This is a dangerous and stupid decision.Mu.Ka betrays our state.He should ask his Central Ministers to get out and cut off the alliance with Congress.He will never do this as he enjoys BENEFITS from Power. When a committee is formed by the court(???),our case should be represented, or else, it will mean we have nothing to say or agrees whatever be the decision Of course, it is a fact that the orders of the supreme court will not be honored at all and this is only a custom/tradition.as we have witnessed in the case of Kavery. .

By Kaleelulla
2/21/2010 6:52:00 AM

அதனால் ரொம்ப அலட்டிக வேணாம் என்பதே இவரின் எண்ணம். அதுவும் உண்மை தான். திருமங்கலத்திலிருந்து வந்தவாசி வரை நாம் பார்த்தது என்னவோ பிரியாணி, சாராயத்தின் மகிமையே. எல்லாவற்றையும் கணக்கு போட்ட காங்கிரஸ், இவருடன் கூட்டணியை தொடர்ந்தால் பஞ்சமா பாதகத்துக்கு துணை போனதாக ஆகிவிடும் என்று எண்ணி, இவரை எப்படி கழட்டி விடுவது என்று எண்ணி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நரி புத்தி வயோதிகரோ பெல்ட் போட்டு டைட்டாக கூட்டணியை பலவித சலுகைகள், மிரட்டல்கள் காங்கிரஸ் காரர்களுக்கு கொடுத்து மீளாதவாறு கட்டி வைத்திருக்கிறார்.

By N.Jiang
2/21/2010 6:39:00 AM

உலகத்தில் யாரும் இவரை போல வெட்டி பேச்சு பேசுபவர்கள் இல்லை. இந்த வெட்டி பேச்சின் பின்னே சுய நலம் பொதிந்திருக்கிறது. யார் அதிகமாக பேசுகிறார்களோ, அவர்கள் தங்கள் குற்றங்களை மறைக்க முயலுகிறார்கள் என்று அர்த்தம். இந்த வகையில் கலைஞரை மிஞ்ச உலகத்தில் வேறு ஒரு ஆள் பிறக்க வேண்டும். கலைஞரின் வாழ்வில் தற்போது அவர் கொண்டாடும் சுயநலத்தனம் அவர் வாழ்வில் எப்போதும் கொண்டதில்லை. ஏமாற்று கலையில் இவரை விட கை தேர்ந்த அரசியல் வாதிகள், மற்றும் அரசியலில் எவ்வளவுக்கு எவ்வளவு கீழ் தரமாக போக முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கீழே போய் கரை கண்டவர் யாவரும் இல்லை. தற்போது முல்லை பெரியார் பிரச்சனையில் இவர் தமிழக நலனை கையாண்ட விதம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி. கேரளாகாரனே வெட்கப்படும்படியாக பராசுரனை விட்டு கோர்ட்டில் நாடகமாடினார். இப்போது பொதுக்குழுவில் இன்னொரு நாடகம். இவர் என்ன நினைக்கிறார் என்றால், தமிழக மக்களுக்கு இருப்பதோ எருமை தோல்; இவர்களுக்கு நாம் செய்யும் தில்லு முள்ளு தனம் தெரிந்தாலும், வோட்டு போடும் பொது இந்த வோட்டு போடும் மஷின் நமக்குதான் குத்தும். அதனால் ரொம்ப அலட்டிக வேணாம் என்பதே இவரின் எண்ண

By N.Jiang
2/21/2010 6:36:00 AM

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫.)இந்தியக் கூட்டரசின் மொழியாகத் தமிழ் மொழியை ஏற்கச் செய்யாமல் காலந்தோறும் தீர்மானம் போட்டே மக்களை ஏமாற்றி விடலாமா?
-- தினமலர்
பிப்ரவரி 21,2010,00:00 IST
இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இன்று முதல திமுக வின் பெயர் திமுகா - திராவிட முன்னேற்றக் காங்கிரசு என மாற்றப்படுகிறது. பெரியார்,அண்ணா, கலைஞர் கொள்கைகளைக் கைவிட்ட பின்பும் நடிக்காமல்., நாங்கள் தழுவியுள்ள காங்கிரசில் இணைவதை விட ஒட்டுக காங்கிரசாகச் செயல்பட இப்பெயர் மாற்றம் போதும் என நாணயமாக நாங்கள் எடுத்த முடிவை அனைவரும் வரவேற்பீர்கள் என்று தெரியும். குறிப்பாக எங்கள் அண்ணன் இராசபக்சே மிகவும் மகிழ்ந்து எங்களை வாழ்த்துவார். அனைவருக்கும் முன்னதான நன்றி.
இப்படிக்கு ஒரு காலத்தில் திமுக எனச் செயல்பட்ட திமுகாங்கிரசு. -- இலக்குவனார் திருவள்ளுவன்



செவ்வாய், 26 ஜனவரி, 2010

தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு? கருணாநிதி



சென்னை, ஜன.25: எல்லா தகுதிகளும் நிறைந்த மொழி தமிழ். எனவே தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.அக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:1938-ம் ஆண்டு முதல் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து 30}க்கும் மேற்பட்ட தமிழ்த் தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். இந்தி உள்பட எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நம் மீது கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதைத்தான் மறுக்கிறோம். தமிழ் மொழிக்கான இடம் பறிக்கப்படுவதை எதிர்க்கிறோம்.1938-ல் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதில் அப்போதைய முதல்வர் ராஜாஜி தீவிரமாக இருந்தார். எனினும் காலம் மாறியது. அதே ராஜாஜி 1965-ல் இந்தியை எதிர்த்து என்னுடன் ஒரே மேடையில் நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.÷1963}ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்று, கைதானார். ஆனால் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை யாரும் பறிக்கவில்லை. எனினும் 1986-ல் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்றதற்காக க. அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. இது மிகவும் வேதனையானது.மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நேரத்தில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழை மட்டும் மத்திய ஆட்சி மொழியாக்க கோரவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்.தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆட்சி மொழிக்கான எல்லா தகுதிகளும் தமிழுக்கு இருக்கின்றன. எனவே, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே மொழிப் போர் தியாகிகள் தினத்தில் எங்களது பிரதான கோரிக்கை ஆகும்.தமிழகத்தைப் பொருத்த வரை எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. தமிழ் மொழியின் சிம்மாசனத்தைப் பறிக்க யார் முயன்றாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் கருணாநிதி. கூட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும் பன்னாட்டு அவைகளின் அலுவல் மொழியாகவும் தமிழ் விளங்கத் தமிழக அரசு முனைப்புடன் முயல வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் தமிழ் உணமையான ஆட்சிமொழியாக விளங்கவும் கல்வி மொழி, சமய மொழி,என்பன போன்று தமிழ் நாட்டில் தமிழே தலைமையாக விளங்கவும் தமிழர்களுக்கு முதன்மை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி பெரிதல்ல என்று பேசினால் நம்பகத் தன்மை போய்விடும். மயிலை மாங்கொல்லையில் இது போல் பேசிய பின்புதான் பதவி நாற்காலிகளில் பசையுடன் ஒட்டிக் கொண்டதால் ஈழத் தமிழர்களின் பேரவலப் படுகொலைகள் நடந்தேறியதை யாரும் மறக்க மாட்டார்கள்.எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய தலைமையிடம் உடனடியாக அளித்து விட்டு மத்திய அரசிலும் தமிழுக்குச் சமஉரிமை பெற்றுத் தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/26/2010 9:43:00 AM

I have not heard a sweeter language than Tamil' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - Bharathiyar/சுப்பிரமணிய பாரதி

By reader
1/26/2010 8:47:00 AM

...இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...

By khan
1/26/2010 8:39:00 AM

yov perusu, poi pullaiya modalla english padikka sollu...

By Vanakkampatty Raamsamy
1/26/2010 8:06:00 AM

IT IS A FOOLISH DEMAND.....HINDI AND ENGLISH ARE SUFFICIENT...... KARUNANITHI MAHE A DRAMA IN THE NAME OF TAMIL

By avudaiappan
1/26/2010 8:04:00 AM

ஐயோ! தமிழ் ஆச்சி மொழியா சாரி ஆட்சி மொழி..... மகனுக்கு (அழகிரி) ஆங்கிலம் ஹிந்தி தெரியவில்லை அதனால் தமிழ் ஆட்சி மொழி.... என்ன ஒரு மொலி(ழி) பற்று..... சபாஷ் தமிழன் (கருணாநிதி) கில்லாடிபா

By thamilanban
1/26/2010 7:32:00 AM

...மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்....Well said!!!

By Tamilan
1/26/2010 6:47:00 AM

அப்படியே தமிழன் வட இந்திய காரனுக்கு ஏன் அடிமையா இருக்கணும் என்று கேளுங்கள். நிறைய அமைச்சர் பதவிகள் தேடிவரும் அதை கொள்ளு பேரன்களுக்கு வாங்கி கொடுத்தா போச்சு

By Selva, Singapore
1/26/2010 6:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல் தமிழ் நாட்டில் தமிழ் உண்மையிலேயே ஆட்சி மொழியாகச் செயற்படுத்தப்பட வேண்டும். அவரவர் சிமமாசனம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் தமிழ்த்தாயின் சிம்மாசனத்தை நாமே பறிப்பதை நிறுத்த வேண்டும். உதட்டில் தமிழ் ஆட்சியும் உள்ளத்தில் குடும்ப ஆட்சியும் பண ஆட்சியும் இல்லாமல் என்றும் எங்கும் தமிழே ஆட்சிபுரிய வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வெற்றி காணா விட்டால் வேறுயார்தான் வெற்றி காண்பர் என்பதை உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்னை : ""இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழும் வரவேண்டும்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சென்னை பெரவல்லூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1938 ம் ஆண்டு முதல், இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து 30 க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த மொழிப்போரில் ஈடுபட்டவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இக்கூட்டம் நடக்கிறது. இதை, கொண்டாட்டம் என கூறக்கூடாது. மொழிப்போர் தியாகிகளை நினைவூட்டும் நாள். எதிர்காலத்தில் தமிழுக்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளம்.



இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல. அதை, நம்மீது திணிக்கும்போது, மறுக்கிறோம்; எதிர்க்கிறோம். கடந்த 1938 ல், ராஜாஜி இந்தியை கட்டாயம் என அறிவித்தார். பின்னர் அவரே, 1965 ல் இந்தியை எதிர்த்தார். இந்தி வந்தால், நாம் இரண்டாவது குடிமகனாக ஆகிவிடுவோம் என்றும் கூறினார். தி.மு.க., 1967 ல் உதயமானபோது, முதல்வர் அண்ணாதுரை மொழிப்போர் தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய தீர்மானம் கொண்டு வந்தார். மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் தொடர வேண்டும். இந்தியை, தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, குஜராத் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், ஆட்சிமொழியாக இந்தி, அதையடுத்து ஆங்கிலம் உள்ளது. தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.



1986 ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது நானும் அன்பழகனும், அரசியல் சட்டத்தின் ஒருபகுதியை எழுதி கொளுத்தினோம். அதற்காக அன்பழகன் உள்ளிட்ட பத்து எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டது. நாங்கள் சிங்கத்தமிழர் கூட்டம். நாங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல; தமிழ்த் தாயின் சிம்மாசனத்தை பறித்தால், விடமாட்டோம். இந்தியாவில் ஆட்சிமொழியாக, தமிழும் வரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இவ்வாறு முதல்வர் பேசினார்.


சனி, 23 ஜனவரி, 2010



ஆனால் அப்துல் கலாம் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றிருப்பின் இந்தியில்தான் கையெழுதம்திட முடியும். இல்லையேல் பதவி யேற்றது செலலாது என்கிறது மத்திய அரசு. எனவே. மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க முயல்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

நிருவாகத்தில் கன்னடத்தை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வர்



பெங்களூர், ஜன.21: அரசு நிர்வாகத்தில் கன்னட மொழியைப் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார்.கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் கர்நாடக அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கன்னட மொழியை பேச, படிக்க, எழுதப் பயிற்சி வழங்கும் முகாமை பெங்களூரில் வியாழக்கிழமை துவக்கி வைத்தார் எடியூரப்பா. அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:ஆட்சி நிர்வாகத்தில் கன்னட மொழியை பேசவும், எழுதவும் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இனிமேல் கன்னட மொழியை பயன்படுத்த தவறும் அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.கன்னட மொழியை ஆட்சி மொழியாகப் பயன்படுத்த தவறும் அதிகாரிகளுக்கு சலுகைகள் கிடைக்காது. அவர்களது சேவைப் பதிவேட்டில் கன்னடத்தை பயன்படுத்தாதவர் என்று கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர். கடைகளின் முன்பகுதிகளில் துறை, நிறுவன, கடைகளின் பெயரை கன்னடத்தில் பெரிதாக எழுத வேண்டும் என்றார் அவர். இந்த பயிற்சி முகாமைத் தொடர்ந்து கன்னட வளர்ச்சி ஆணையத்தின் மாநிலம் தழுவிய விடியோ கான்பரன்சிங் பயிற்சி முகாமையும் முதல்வர் துவக்கி வைத்தார். கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் மந்திரி சந்துரு, தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

திங்கள், 18 ஜனவரி, 2010

அரசு நிர்வாக மொழியாகத் தமிழ் ஆக வேண்டும்



சென்னை, ஜன.17: நடைபெறவிருக்கிற செம்மொழி மாநாட்டிற்குப் பின்பு அரசின் நிர்வாக மொழியாக தமிழை ஆக்க உறுதி எடுக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் கூறினார்.சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சா.கணேசன் எழுதிய "மாமன்னன் ராஜராஜன்' நூல் வெளியீட்டு விழாவும், தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரமாண்டு விழாவும் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியதாவது: "ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலைப் பார்க்கும் எல்லாருக்கும் பெரிய அளவுக்கு வியப்புதான் தோன்றும். ராஜராஜ சோழனின் ஆட்சி மன்னராட்சி என்ற பெயரில் நடந்த மக்களாட்சி. அந்தக் காலத்தில் கலையையும், இலக்கியத்தையும் வளர்க்க மதம் பயன்பட்டது. ஆட்சியும் மதமும் பிரிக்க முடியாதவாறு அப்போது இருந்தது. இன்று நாம் செய்ய விரும்பும் மாறுதல்களை ராஜராஜசோழன் அன்றே செய்திருந்தார். பெரிய கோயிலுக்கு விளக்கேற்ற கிராம மக்களிடம் அன்றைக்கு கால்நடைகளை வளர்க்கக் கொடுத்து, அதிலிருந்து வரும் வருமானத்தைப் பயன்படுத்தினார். இன்றும் நாம் சொல்லக் கூடிய சுயஉதவிக் குழுக்களின் பணிகளை அன்றே செயல்படுத்திய மன்னன் அவர். நமது வரலாறு எழுச்சியும் வீழ்ச்சியும் உள்ளதாக இருக்கிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்தவர் ராஜராஜன். நாம் இன்னும் வரப்போகிற ஆயிரம் ஆண்டுகளில் நமது பண்பாடு வீழாமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் இப்போது முக்கியம்'. விழாவுக்குத் தலைமையேற்றும், சா.கணேசன் எழுதிய "மாமன்னன் ராஜராஜன்' நூலை வெளியிட்டும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் பேசியதாவது:ராஜராஜனின் கோயில் பக்திக்காக மட்டும் கட்டப்பட்டதில்லை. ராஜராஜனின் காலத்திற்கு முன்பு தஞ்சையை ஆண்ட மன்னர்களின் ஆட்சிப் பரப்பு அவன் காலத்தில் போல இந்த அளவுக்கு விரிவானதாக இல்லை. ராஜராஜன் காலத்திலேயே அது மிக விரிவானதாக ஆனது. அதன் குறியீடாகத்தான் ராஜராஜன் கோயில் கட்டினான். தஞ்சைப் பெரிய கோயிலை மிகப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ராஜராஜனுக்கு ஈழப் போரின்போது அவன் கண்ட பெரிய பெரிய புத்தர் சிலைகள் அவனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிற கோயில்களில், கோயிலைக் கட்டிவிட்டுப் பின்பு மூலவரை வைப்பார்கள். தஞ்சைக் கோயிலில் மூலவரை வைத்துவிட்டுப் பின்பு கோயிலைக் கட்டினார்கள். மூலவர் இருக்குமிடத்திற்கு மேலே கோயில் உயரமாகத் தெரிய வேண்டும் என்று ராஜராஜன் நினைத்தான். பெரிய கோயில் என்று பெயரளவில் மட்டும் இல்லாமல் பெரிய நந்தி, உயர்ந்த கோபும் என்று கட்டினான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பு ஆற்று மணலைக் கொட்டி அதன் மீது அடித்தளம் அமைத்துக் கோயில் கட்டியிருக்கிறார்கள். கட்டிடக் கலையின் உயர்ந்த தொழில்நுட்பம் } அறிவுக் கருவூலம் அந்தக் காலத்திலேயே தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. அதன் தொடர்ச்சியை நாம் விட்டுவிடக் கூடாது. விழாவில் கலந்து கொண்டு குடவாயில் பாலசுப்ரமணியம் பேசியதாவது:தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனுக்கு 41 சிறப்புப் பட்டங்கள் இருந்தன. அதில் அவனுக்கு மிகவும் பிடித்த பட்டம் ஜனநாதன் என்பதே. எல்லா மக்களாலும் விரும்பப்படும் மன்னனாக இருக்கவே அவன் ஆசைப்பட்டான். கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள மெய்கீர்த்திகளில் கோயில் கட்ட கொடை கொடுத்த சாதாரண மக்களின் பெயரும் உரிய மரியாதையோடு பொறிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ""ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் 2010-ல் எதன் குறியீடாக இருக்க முடியும்? ராஜராஜன் காலத்தில் பக்தி இலக்கியம் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளது. மீட்டெடுப்பின் குறியீடாகவே ராஜராஜன் கோயில் உள்ளது'' என்றார். விழாவில் வரலாற்று ஆய்வாளர் செண்பக லட்சுமி, தொல்லியல்துறையைச் சேர்ந்த சத்யபாமா பத்ரிநாத், கவிஞர் இளையபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

அண்ணா நூற்றாண்டில் தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்



சென்னை, ஆக. 25: அண்ணா நூற்றாண்டில் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தி கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று பண்டித நேரு அளித்த உறுதிமொழி, பின்னர் வந்த இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்ற பிரதமர்களால் உறுதி செய்யப்பட்டது. அதனால் ஹிந்தி திணிப்பு என்கிற ஆபத்து இன்று வரை தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், "ஹிந்தி தேசிய மொழி. எனவே நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் அது கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம்' என்று பேசியிருக்கிறார். நாடு முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைக்க இது போன்ற நடவடிக்கைகள் உதவாது. இது கபில் சிபலுக்கும், மத்திய அரசுக்கும் உரிய முறையில் உணர்த்தப்பட வேண்டும். ஹிந்தி திணிப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம், நேருவின் உறுதிமொழியைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற குரல் தமிழகத்திலிருந்துதான் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. எனினும், நேரு அளித்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்வதில் தமிழகம் தவறியிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும். ஹிந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் போட்டி அரசியலுக்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, ஹிந்தி திணிப்பு என்ற ஆபத்தை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த உதவவில்லை என்பதும் நிதர்சனமான உண்மையாகும். இந்நிலையில் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. அவ்விழாவில் தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளும், மத்தியில் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டு, அண்ணாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும். இதற்கான முயற்சிகளை முதல்வர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கருத்துக்கள்

பேரளவிலான இனப்படுகொலைகளையே துணி்ந்து செய்பவர்கள் தமிழ் மக்கள் இந்தியை விரும்புகிறார்கள் எனப் பொய்யான புள்ளிவிவரத்தைச் சொல்லி அயல்மொழி எனக் கூறி ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்கத் தயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென்ற, கடாரம் வென்ற இமயமத்தில் கொடியேற்றிய, கடல் கடந்து வெற்றி கொடி நாட்டிய தமிழ் மூவேந்தர்கள் பெயர் சூட்டக் கூடாதா? இப்படி எதை எடுத்தாலும் ஆரிய மயமாக்கும் முயற்சியில் இருந்து காங். அரசு பின்வாங்காது. எனவே, பிற மொழிகளுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுத்து நேரத்தை வீணாக்காமல் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு முயன்று வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:08:00 AM

பிற மொழிகள் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டாலும் படா விட்டாலும் தமிழ் மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவேண்டும். மேலும் நேருவின் உறுதி மொழி என்பது ஒரு கேலிக்கூத்து. அதனைத் தி.மு.க. கட்டிக் கொண்டு அழுவது போல் பா.ம.க.வும் கூறுகின்றது. நேரு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்றுதான் உறுதி தந்தாரே தவிர இந்தி ஆட்சி மொழி இல்லை என்றோ தமிழும் மத்திய ஆட்சி மொழி என்றோ சொல்லவில்லை. பேரளவிலான இனப்படுகொலைகளையே துணி்ந்து செய்பவர்கள் தமிழ் மக்கள் இந்தியை விரும்புகிறார்கள் எனப் பொய்யான புள்ளிவிவரத்தைச் சொல்லி அயல்மொழி எனக் கூறி ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்கத் தயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென்ற, கடாரம் வென்ற இமயமத்தில் கொடியேற்றிய, கடல் கடந்து வெற்றி கொடி நாட்டிய தமிழ் மூவேந்தர்கள் பெயர் சூட்டக் கூடாதா? இப்படி எதை எடுத்தாலும் ஆரிய மயமாக்கும் முயற்சியில் இருந்து காங். அரசு பின்வாங்காது. எனவே, பிற மொழிகளுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுத்து நேரத்தை வீணாக்காமல் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழி

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
HERE I HAVE SEEN SO MANY PEOPLE RECORDED THEIR QUOTS AGAAINST DR.RAMADOSS. ALL OF THEM ARE FOOLS ( VADIKATTINA MUTTALGAL). DON'T DRINK,DON'T SMOKE APPADINNU SONNA AVAR UNGALUKKU WASTA. NEENGAL ELLORUM VERU JATHIKKARARAGA IRUPPEER ILLAIYENDRAL VANNIYANUKKU PORANTHIRUKKA MATTEER. AVAR VANGI KODUTHA MBC KOTTA MATHIRAM INIKKUTHA.
By KUMARI
8/27/2009 8:09:00 PM

ஒழுங்காக BJPயை ஆதரிதிருந்தால் எப்போதோ தமிழ், மற்ற மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழியாக ஆகியிருக்கும்(1999). இலங்கையிலும் தமிழர்கள் இந்த பேரவல நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். தமிழர்களின் தலைவ(லி)ர் செய்தத் தொண்டு தமிழர்களை நாறடித்ததுதான். அறிவுல்ல தமிழ்பற்றுடையவர் தான் CMஆக வரவேண்டும்.

By Maran
8/26/2009 10:09:00 PM

Mr.Human, the westerners confirmed that the Indus valley civilization was Dravidian. Still Brahui, a dravidian languge is spoken in Pakistan. People like Karnan, Ekalaivan were Dravidians, betrayed by Aryans. When Indus was destroyed all Prakrit (non-sanskrit) speaking people came south. Beyond south they put a hindu rule that they can't cross sea. But Tamils spread to Kadaram (Indonesia, Malaya, Combodia-Ankorvat's Suryavarman). Most of the prakrit literature, remains were destroyed. I think RajaRaja the great's devanagari coin was issued in a temple or N.India where he conquered, to spread his record, or while other Tamil coins were destroyed/melted/looted. Only some like Thirukkural, Tholkappiyam, Silampathikaram were saved. People of Indus worshipped Mother Goddess (Amman), still we do a lot. They worshipped Adi Bagavan -Sun God, the source of the world, and without Him, nothing can survive, grow or see -including light from moon. Better worship Sun alone as the true God's reflect

By GV
8/26/2009 9:55:00 PM

I agree with Mr. Ilakkuvanar Thiruvalluvan. Ramadoss made good suggestions. Let us accept good things who ever is doing it.

By GANESSIN
8/26/2009 8:42:00 PM

www.masthfun.com Thanks dr ramdoss atlease you are there to sopport tamil!!!

By sasi
8/26/2009 7:06:00 PM

Indha Ramadsukku oru velayum illa. Ivan pecha ethukku thinamani poduthu? Ramadosa nadutheruvula nikka vachi sowkkala adinga. Avan appadithan sonnaan. Vanniyanin blooda urinji kudicha maha thirudan.

By Khan
8/26/2009 6:06:00 PM

இருந்தாலும் தினமணிக்கு இப்பிடி ஒரு சுயநலம் இருக்க கூடாது. தினமும் ராமதாஸ் ந்யூஸ் போட்டு மக்களை கவர் பண்ணி திட்டு வாங்கி விட்டு (இன்டர்நெட்) இ-பேப்பர் படிப்பதை ஊக்குவிக்கிறது. ராமதாஸ் ந்யூஸ் வந்தாலே, எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறார்கள். ஆனா, ஒரு விண்ணப்பம், தயவு செய்து அவர் படத்தை மட்டும் போடாதீர்கள். பொம்பள பிள்ளைகள் பயப்படுகிறார்கள்.

By மூர்த்தி, விழுப்புரம்
8/26/2009 3:33:00 PM

kalakura jumpu, pudhu koottani ,pudhu thoguthi,pudhu election.

By VENGAYA VANNIYAN
8/26/2009 2:55:00 PM

My appeal to all Tamilian friends ! The Aryan invasion theory is a Mythical theory spread to pit the south Indians against North Indians. Please check out in the Internet about the origin of this Mythical theory. If you find this theory relevant, then you can quote about this theory in your comments. Just go back to the time when Chera, Chozha, Pandiya and Pallava Kings ruled in Tamilnadu. Do you mean to say, there was no link to Sanskrit with Tamil during those days. Just the name "Raja Raja Chozhan" has Tamil and Sanskrit words. Who is Aadhi and Bhagawan referred in the Thirukkural. I think Tamil and Sanskrit are in separable from the days of Thiruvalluvar. Intellect is for questioning. Please investigate the wrongly propagated theory. The Internet gives complete information on this Myth.

By Human
8/26/2009 1:03:00 PM

அய்யா, உங்கள் பேரன் எங்கு படிக்கிறார் என்பதை முதலாவது மக்களுக்கு சொல்லுங்கள். பின்பு பிறமொழி பற்றி பேசுங்கள். தமிழை மற்றும் படித்தால் கும்மிடிபூன்டியை தாண்ட முடியாது. கூடுதலாக ஒரு மொழியை படித்தால் கூடுதலாக ஒரு அறிவு கிடைக்கும். (தமிழன் அறிவு இல்லாமல் இருப்பது தானே உங்களுக்கு வசதியாக இருக்கும்.) ஓஹோ, இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ?

By Ramalingam, Cuddalore
8/26/2009 12:58:00 PM

//***தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென்ற, கடாரம் வென்ற இமயமத்தில் கொடியேற்றிய, கடல் கடந்து வெற்றி கொடி நாட்டிய தமிழ் மூவேந்தர்கள் பெயர் சூட்டக் கூடாதா? ***// படைக்கலனுக்கு மட்டும் அல்ல இப்பொழுது அனைத்துவகையான வணிக சில்லரை பொருள்களிலும் இந்தி திணிப்பு உள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து நடுவன அரசு அலுவலங்கிலும் இந்தியின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது அங்கே நியமிக்கபடும் அனைத்து உயர் அதிகாரிகளும் இந்திகாரர் அல்லது இந்தி தெரிந்த அதிகாரி இப்படி இந்தியின் மதிப்பை எற்றிகொண்டே போகிறார்கள் இரெயில்வே துறையில் கொண்டுவரபடும் அனைத்து திட்டங்களும் இந்தியின் பெயரையே தாங்கிவருகிறது, அதுமட்டும் அல்ல எல்.ஐ.சியில் கொண்டுவரபடும் அனைத்து திட்டங்களும் இந்தியின் பெயரிலே வருகிறது விண்ணில் விடபடும் விண்கலம் முதல் அனைத்தும் இந்தியிலே இருக்கிறது. என் மொழியின் அடையாளம் துளிகூட இல்லாத என் மொழிக்கு உரிமை இல்லாத இந்த இந்தியாவை என்னுடைய நாடு என்று முழுமையாக சொல்லமுடியவில்லை

By barani
8/26/2009 12:22:00 PM

//***நேருவின் உறுதி மொழி என்பது ஒரு கேலிக்கூத்து. அதனைத் தி.மு.க. கட்டிக் கொண்டு அழுவது போல் பா.ம.க.வும் கூறுகின்றது. நேரு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்றுதான் உறுதி தந்தாரே தவிர இந்தி ஆட்சி மொழி இல்லை என்றோ தமிழும் மத்திய ஆட்சி மொழி என்றோ சொல்லவில்லை***// மிக சரியாக சொன்னிர்கள் திருவள்ளுவன் அவர்களே //***பிற மொழிகள் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டாலும் படா விட்டாலும் தமிழ் மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவேண்டும். ***// தமிழர்கள் தவிர அனைத்து மாநிலங்களும் இந்தியை எற்றுகொண்டார்கள் ஆதலால் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய முன்றையும் நடுவன ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவேண்டும். //***அயல்மொழி எனக் கூறி ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்கத் தயங்க மாட்டார்கள் ***// வேடிக்கை என்னவென்றால் இந்தி என்பது மொகலாயர்களின் மொழி அது எப்படி இந்தியமொழி ஆனது என்பது விந்தையாக உள்ளது, எந்த மொழியையும் சாராமல் தனியாக, பலமொழிக்கு வேர்ராக இந்த நாட்டின் மெய்யான மொழி தமிழ்மொழி மட்டுமே //***தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென

By barani
8/26/2009 12:19:00 PM

Anithaku en photo potadhaan pidikum illa anitha sellam !

By Jeyendran
8/26/2009 10:50:00 AM

மொழி அடிப்படையில் பிரிக்கிரோமென்று நயவஞ்சகமாக தமிழ்நாட்டின் பாதியை பிரமாநிலங்களுக்கு தந்து காவெரி முதல் பிரித்தாண்டார்கள். ஏற்கனவே 10 - 12 கோடி தமிழர்கள் 7 கோடியாக குறைத்து பொய்கணக்கு எழுதிவிட்டார்கள். இனி மொத்தமாக தமிழர்களை அடையாலம் காணாமல் செய்யப்பார்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக செய்யும் துரோகத்தை நெஞ்சு பொருக்கதில்லையே, இந்த நிலைகட்ட மனிதர்களை நினைத்துவிட்டால். இன்றைக்கு இருக்கும் சூழ்(ச்சி)நிலையில் திருடனே பார்த்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது. சுதந்திரம், வந்தேமாதிரம் என்றால் தந்திரமாக வந்து ஏமாத்றோம் என்றே போருளாகி விட்டது.

By senthamizh selvan
8/26/2009 10:10:00 AM

Dear Sir, Where is your Grand Son Study? S.Prabakar

By S.Prabakar
8/26/2009 10:03:00 AM

Dear Dinamani Editor, Don't Publish his Photo. Please, Please. (Bayama Irukku).

By Anitha
8/26/2009 9:55:00 AM

பேரன்புமிக்க தமிழர்களே, இது இன்றைய "சிரிப்பு வெடி". பார்த்து ரசியுங்கள். அய்யா, என் ராசா, என் கொய்யால, அண்ணாதுரை வன்னியர் இல்லப்பா. ஜாக்கம்மா சொல்றா. ஜாக்கம்மா சொல்றா. தமிழ் நாடே இன்னைக்கு இவரா திட்டபோகுது.

By ரவி, பாண்டிச்சேரி.
8/26/2009 9:52:00 AM

DURING THE HINDI IMPOSITION DAYS, ON C.N.ANNADORAI'S (MEMBER OF PARLIAMENT) FREQUENT REPRESENTATION THEN PRIME MINISTER NEHRU ASSURED IN THE LOK SABHA THAT UNTIL NON HINDI SPEAKING PEOPLE ACCEPTANCE OF HINDI AS OFFICIAL LANGUAGE OF COMMUNICATIONS, ENGLISH WILL ALSO CONTINUE TO BE THE OFFICIAL LANGUAGE. THIS ASSURANCE IF IT IS RESTORED IN PARLIAMENT IT WILL BE CONSIDERED AS GIFT FOR ANNADURAI'S POLICY AND PRINCIPLES FOR THE PEOPLE OF TAMIL NADU, THOSE WHO DIED FOR THE SAKE OF TAMIL AND VALUE OF ANNA'S BIRTH CENTENARY YEAR.

By S.GURUMURTHY
8/26/2009 5:49:00 AM