State autonomus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
State autonomus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2010

Central stands by the supports of states : மாநிலங்களின் ஆதரவால்தான் மத்திய அரசு நிலைக்கிறது: க. அன்பழகன்

தமிழர் தமிழராக வாழ்வது குறித்தும் கூட்டாட்சிக் குறித்தும் பேராசிரியர் அருமையாக உரையாற்றியுள்ளார். இளைய தலைமுறையினர் அதை உணர்தல் வேண்டும். பாரட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மாநிலங்களின் ஆதரவால்தான் மத்திய அரசு நிலைக்கிறது: க. அன்பழகன்

சென்னை, டிச.13: மாநில அரசுகளின் ஆதரவால் தான் மத்திய அரசு நிலைக்கிறது என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.மாநில திட்டக் குழு துணைத் தலைவர் மு. நாகநாதன் எழுதிய "இந்திய கூட்டாட்சியில் அதிகாரம் குவிப்பா? பகிர்வா?' என்ற நூலை திங்கள்கிழமை வெளியிட்டு, நிதியமைச்சர்க. அன்பழகன் பேசியதாவது: நாங்கள் பிரிவினை கோரவில்லை. உன்னோடு சேர்ந்து வாழ்வதற்கு இப்போது எங்களுக்கு தடையில்லை. ஆனால், நீ எங்ளை அடிமைப்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று எண்ணி துணிக என்ற தலைப்பில் அண்ணா விளக்கம் அளித்துள்ளார். இதுதான் திமுகவின் நெறிமுறைகளுக்கு அடிப்படையானது.  ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதா அல்லது பிரிவினை கேட்பதா என்ற நிலை அண்ணாவுக்கு ஏற்பட்டது. அப்போது, இந்த இயக்கத்தை வளர்த்த ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் பிரிவினை கேட்பதில் என்ன பொருள் உள்ளது என்று அந்தக் கோரிக்கையை அண்ணா கைவிட்டார். தமிழன் என்ற உணர்வுடன் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நாங்கள் தமிழர் என்று கூறுவோர் 45 சதவீதத்தை எட்டினால் பெரிய சாதனை. தமிழரை தமிழராக்குவதுதான் பெரியாரின் முயற்சி. தமிழர், தமிழராக வாழ முடியும் என்று எடுத்துக்காட்டுவது தான் அண்ணாவின் முயற்சி.  தமிழ் நம் தாய்மொழி என்று உயர்த்துவதுதான் பாரதிதாசனின் முயற்சி. ஆனால், இந்த அடிப்படைக் கருத்துகள் மக்களை முழுமையாகச் சென்று சேர்ந்ததா என்பது இன்றும் கேள்விக் குறியாக உள்ளது. இதை உணர்ந்தாலும் அதை ஏற்பார்களா என்பதும் சந்தேகமே. பிரிவினையை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை திருமாவளவன் போன்றவர்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் தெரியவரும். நமக்கு குழி பறித்து நம்மை வீழ்த்துகின்ற சக்திகள் தான் சுற்றி இருக்கின்றன. இன்றும் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி நடத்துவதா என்று கேட்கின்றவர்கள் தான் நாட்டில் உள்ளனர். தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க வேண்டும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டு கருணாநிதி. பெரும்பான்மை இருக்கலாம். சில நேரத்தில் சிறுபான்மை ஆகலாம். நமக்கு பெரும்பான்மை செல்வாக்கு என்பது சட்டப்பேரவையில் எண்ணிக்கை அடிப்படையில் கிடைத்தால் கூட, அது சிறுபான்மை ஆட்சியாகத் தான் பலரால் சித்தரிக்கப்படும்.  அமெரிக்காவில் கூட்டாட்சி கொள்கை மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு கூட்டாட்சி ஏற்படும் முன்னர் சுதந்திரமாக இருந்த ஒவ்வொரு மாநிலமும் சேர்ந்து கூட்டாட்சியை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு வைசிராய் தலைமையில் தனித் தனியாக இருந்த மாகாணங்களின் நிர்வாகம் இருந்தது. சமரச முயற்சியாக உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் முதல்வராக வர வேண்டும் என்ற யோசனையை நேரு ஏற்கவில்லை. இதனால் தான் பிரிவினை கோரிக்கை வலுப்பெற்றது. இப்போது மத்திய அரசு, மாநிலங்களை மதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு 100-க்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகளைக் கலைத்தது. ஆனால், இப்போது அது முடியாது. மாநிலங்கள் நினைத்தால் மத்திய அரசை கவிழ்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி கொள்கையின்படி மத்தியில் அதிகாரங்கள் குவிந்துகொண்டே போகக் கூடாது. இதனால் தான் இலங்கையில் இப்போதை விளைவு ஏற்பட்டது. இதேபோல மாநிலங்களில் வட்டார உணர்வு காரணமாகத்தான் ஏதேனும் ஒரு வகையில் தெலங்கானா போராட்டம் தொடர்கிறது. அவர்கள் ஏற்கெனவே சமஸ்தானமாக இருந்த காரணத்தால் அந்த உணர்வு மேலோங்கி தெலங்கானா கோரி போராடுகின்றனர். இது தவறு என்று வாதிட முடியாது. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டதற்காகவே அங்குள்ள மக்களின் உரிமைகளுக்கு தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு மத்தியில் ஒரே கட்சி ஆட்சியிருந்ததால் மாநிலங்களை மதிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அத்தகைய நிலை இல்லை. மாநில கட்சிகள் ஆதரவு அளித்து மத்தியில் ஆட்சி அமைப்பது இக்காலத்தில் உள்ளது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது இன்று இல்லாவிட்டாலும் நாளை நடைமுறையில் கொண்டுவர வேண்டியது என்பது எனது நம்பிக்கை. மாநில அரசுகளின் பெருந்தன்மையால் தான் மத்திய அரசு நிலைக்கிறது.  மாநில அரசு பெருமளவு கைகொடுத்து, மத்தியில் ஓர் அரசு தேவை என்று கருதுவதால் மத்திய அரசு நிலைக்கிறது. இப்போதும் காலம் மாறுகிறது. எனினும், நம் உரிமைகள் நிலைக்கும் என்றார் அமைச்சர் அன்பழகன்.  இதில் நூலாசிரியரும், திட்டக் குழுத் துணைத் தலைவருமான மு. நாகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன், 22 செப்டம்பர், 2010

தமிழக நலன்களை காக்க கருணாநிதிக்கு அக்கறை இல்லை: ஜெயலலிதா


சென்னை, செப்.22: மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றியமைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி எடுக்காததில் இருந்து, அவருக்கு தமிழக நலன்களில் அக்கறை இல்லை என்பது தெரிகிறது என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:     17.9.2010 அன்று மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான (Post Graduate Medical Courses) சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் குழுவின் (Medical Council of India) கருத்துருவை தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஆதரிக்கிறது என்றும், இதற்கான அறிவிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.  மருத்துவச் சேவையின் தரத்தையும், மருத்துவக் கல்வியின் தரத்தையும் உயர்த்தும் நோக்கத்தில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.      இதோடு நின்றுவிடாமல், மருத்துவ படிப்பிற்கான (M.B.B.S.) சேர்க்கையும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வரைவு சட்ட திட்டங்கள் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல், இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலையும் அரசு தலைமை வழக்குரைஞர் கோரி இருக்கிறார். “அரசின் கொள்கை முடிவில் எங்களை இணைக்காதீர்கள்" என்றும், "கருத்துருவை சமர்ப்பிக்காமல் எப்படி அனுமதி அளிக்க முடியும்?” என்றும் உச்ச நீதிமன்றம் பதில் அளித்து இருக்கிறது. “மாணவர்கள் மாறுகின்ற தன்மை உடையவர்கள்; படிப்படியாக செல்லுங்கள்; முதலில் பட்டமேற்படிப்பில் இதை நடைமுறைப்படுத்துங்கள்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.    இது மட்டுமல்லாமல், இந்திய மருத்துவக் குழுவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளித்துவிட்டதாகவும்; பொது நுழைவுத் தேர்விற்கு பிறகு ஒருங்கிணைந்த ஆலோசனை வழங்கப்படும் என்றும்; மருத்துவப் படிப்பினை முடித்து வெளியேறும் போது அவர்களுக்கு ஒரு தேர்வு வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.  இந்த வழக்கை ஒரு வாரம் கழித்து பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.    உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வாதங்கள் எல்லாம் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு மவுனியாக இருக்கிறார் கருணாநிதி. பொது நுழைவுத் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. சமூக நீதிக்கு எதிரான இந்த கொள்கை முடிவை எடுத்த மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது.     சமூகநீதியை காப்பதற்கான அக்கறை கருணாநிதியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.  69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்திருந்தால், பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றியமைக்க முயற்சி எடுத்து இருக்க வேண்டும்.  இல்லையெனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.  இதைச் செய்யாததிலிருந்து தமிழ்நாட்டின் நலன்களை, தமிழர்களின் நலன்களை காப்பதற்கான அக்கறை  கருணாநிதிக்கு இல்லை என்பது தெரிகிறது.    மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் என்ற வகையில், கூட்டு அதிகாரப் பட்டியலில் (Concurrent List) உள்ள ‘கல்வி’ மாநிலப் பட்டியலில் (State List) சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வரும் சூழ்நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்.எனவே ஏழை, எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ - மாணவியர் நலன்களுக்கு எதிரான பொது நுழைவு தேர்வு முறையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எனவே, கூறுவது யார்? நோக்கம் என்ன? என்று ஆராயாமல் முதல்வர் உடனே தலையிட்டு நம் உரிமை காக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவி அறிக்கையுடன் நின்று விடாமல் வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச சேர்த்துக் கொள்ளச் செய்து வாதிட்டு வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 12:36:00 PM
யம்மாடி தெரியுமடி உங்க நாடகம் அப்பன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எனபது தானே உன் ஆசை.எதையாவது சொல்லி நாடகமாடி திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறாதா நாம் உள்ளே செல்ல பாதை போடலாமே என்று நப்பாசை தானே உனக்கு உன் ஆசை எல்லாருக்கும் புரியுமடி நாயே.உன் ஆசையில் மன்னுதண்டி பெரிய பொறுப்பு உனக்கு மட்டும் தான் இருக்கு எனபது போல அறிக்கை விடு அப்புறம் கொடநாடு போய் தோழியின் கத கதப்பிள் இரு நாடாளும் முக வுக்கு தெரியாதாக்கும் தமிழ் நாட்டு நலன் பறிபோகும் என்று இவ சொல்ல வந்துட்டா கம்னாட்டி.நீ என்ன நாடகம் போட்டாலும் நீ ஒரு ஆட்டக்காரி தான்.
By periya karuppan.kadalur
9/22/2010 12:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சமூக நீதியைக் காப்பதில் கருணாநிதிக்கு அக்கறை இல்லை: ஜெயலலிதா


 

புதன், 1 செப்டம்பர், 2010

கூட்டாட்சி தத்துவம் ஜெயலலிதாவுக்குப் புரியாது: முதல்வர் கருணாநிதி



சென்னை, ஆக. 31: மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் புரியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.மாநில உரிமைகளை முதல்வர் கருணாநிதி பறிகொடுத்து வருவதாக ஜெயலலிதா புகார் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கத்தைத் தந்து மாநில அரசின் உரிமைகளுக்காக 1970-ம் ஆண்டுகளிலேயே மத்திய அரசுடன் வாதாடி உரிமைகளைப் பெறத் தொடங்கியது திமுக.மத்தியில் தனியொரு கட்சியின் ஆட்சி நிலவும் சூழல் மாறி பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாகும் கூட்டாட்சி அமையத் தொடங்கியது. இதன்பிறகே, தமிழகம் அதிகளவில் திட்டங்களைப் பெற்று பயனடைந்து வருகிறது.1991-ல் சந்தர்ப்பவசத்தால் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையில் மத்தியில் அமைந்த அரசை மிரட்டி இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியைக் கலைக்கச் செய்தவர் ஜெயலலிதா.1998-ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரது கூட்டணியில் வென்று அவர் பிரதமராக நீடிக்க தனது கட்சியின் ஆதரவு அளிக்கும் விஷயத்தில்-அப்போதைய திமுக அரசைக் கலைக்க ஒப்புதல் தந்தால்தான் அதிமுக ஆதரவு தரும் எனக் கூறினார் ஜெயலலிதா.இந்த நிபந்தனையைப் பெறுவதற்காகவே ஒப்புதல் தருவதில் காலம் கடத்தி, அந்த முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளில் பதவியை ராஜிநாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அவருக்கு மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படி புரியும்?தமிழகத்தின் நன்மைக்கு: மாநில அரசின் நன்மையையே திமுக அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டு அமைந்த மத்திய அரசுகளில் தமிழகத்தின் நன்மைக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியும், நிறைவேற்றப்பட்டும் வருகின்றன.மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்பதை, சந்தர்ப்பம் ஏற்படும் நேரங்களில் திமுக சுட்டிக்காட்டி வந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு கூறியதும் அது குறித்து மாநில அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனால், அந்த முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால்தான் மத்திய அரசு முடிவை நிறுத்தி வைத்ததாக ஜெயலலிதா கூறியிருப்பது ஏமாற்றும் செயலாகும். கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தியது.ஆனால், இதற்கு முன் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

ஒருவருக்குப் புரியாது.மற்றவர்க்குத் தெரிந்தாலும் செயலாற்ற இயலாது. கொடியேற்றுரிமை , பதவியாசை முதலான சின்ன சின்ன ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மாநிலத் தன்னாட்சி முழக்கம் உதவி இருக்கலாம். மற்றபடி முதல்வர் அவர்களே வருத்தப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில்தான் மாநிலத் தன்னாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற கூக்குரல் உள்ளது. தொடர்கட்டுரைகளாகவும் நூலாக ஆக்கியும் முரசொலி மாறன் தெரிவித்த கருத்துகள் யாவும் ஏட்டோடு மறைந்தன. எல்லாம் தெரிந்த கலைஞர் அவர்கள் யாருக்குத் தெரியும் அல்லது தெரியாது என்று ஆராயாமல் காங்கிரசு அல்லாத பிற மாநில அரசுகளுடன் இணைந்து துணிவுடன் போராடினால் வாகை சூடலாம். இல்லையேல் நாளும் பறி போகும் மாநில உரிமைகளால் ஊராட்சி நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்டும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 5:34:00 AM
எங்களுக்கு நல்லா புரியுது. மாநிலத்தில வர்றது எல்லாம் கருணாநிதிக்கு மட்டும், வேற யாருக்கும் பங்கு கிடையாது. மத்தியிலே வர்றதுலே எல்லாருக்கும் பங்கு, கருணாநிதிக்கும் சேர்த்து. மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
9/1/2010 5:21:00 AM
//கூட்டாட்சி தத்துவம் ஜெயலலிதாவுக்குப் புரியாது: முதல்வர் கருணாநிதி// adha yaar solradhu?
By Mohamed bilal
9/1/2010 5:09:00 AM
பேரறிஞர் அண்ணா போதித்த மாநில சுய ஆட்சித் தத்துவமும் ...அவர் போதித்த அரசியல் நாகரிகமும் ....மக்கள் பணியே மகேசன் பணி என சுயநலம் இன்றி பணியாற்றும் பாங்கும் தான் புரட்சித் தலைவிக்கு தெரியும் ! உன்னைப் போல் பெரியார் அண்ணா என்று சொல்லி அவர்களின் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கத் தெரியாது ! தமிழ் தமிழ் இனம் என்று பேசி கழுத்தறுக்கத் தெரியாது ! மாநில சுயாட்சி ..கூட்டாட்சி என்று சொல்லி ஒரு மாநிலத்தை அடகு வைக்கத் தெரியாது ! மாநிலத்தின் உரிமைகளை பண்டமாற்று முறையில் உன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக சுகத்திற்காக விட்டுக் கொடுப்பது போல் துரோகம் செய்யத் தெரியாது ! உன்னைப் போல் ஊழல் செய்யவும்...அருவருக்கத் தக்க அரசியல் வியாபாரம் செய்யவும் தெரியாது !!! இது போன்ற விஷயங்களில் நீ உலக மகா கில்லாடி என்பதனை ஏற்றுக் கொள்கிறோம் ! @ rajasji
By rajasji
9/1/2010 2:23:00 AM
Dear dinamani readers happy, happy news. Today dinamani's RAJASJI left for Kodanadu to have fun, exiting, lesbian games with Jeya and Sasi. He will be toooo busy satisfying them. Enjoy it RAJASJI.
By S.S. Chandran
9/1/2010 1:10:00 AM
JAYA KNOWS ONLY MONEY. OTHER THAN THAT SHE DOES NOT KNOW ANYTHING
By SIRANJEEVI
9/1/2010 12:51:00 AM
கூட்டு ஆட்சி, குழம்பு ஆட்சி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இது கூட்டுக் கொள்ளை. அதுசரி, பெட்ரோல் டீசல் விலை ஏறுச்சுன்னா நீயே பந்து பண்றேன்னு போடுறியே ஒரு சீனு, அது காலை டிபனுக்கப்புரம் மதிய சாப்பாடு வரை இருந்தியே உண்ணா விரதம், அத விடக் காமடி. உண்மையான எதிர்ப்புன்னா உன் கட்சி எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல். ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் திருடனும், அப்படியே எதிர்ப்பை காட்டினா மாதிரியும் இருக்கணும். எவ்வளவு நாளைக்குத்தான் இந்த ஈனப் பிழைப்பு உனக்கு?
By இடி அமீன், உகாண்டா.
9/1/2010 12:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சுயாட்சி - கூட்டாட்சி தத்துவம் புரியாதவர் ஜெயலலிதா :முதல்வர் கருணாநிதி

சனி, 21 ஆகஸ்ட், 2010

மாநில உரிமைகளில் தில்லி தலையிடுகிறது: முதல்வர் கருணாநிதி


சேலம், ஆக. 20: மாநில அரசுகளின் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.சேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.39 கோடி கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.273 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.36 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து கருணாநிதி பேசியது:சேலத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது திறப்பு விழா காணும் இந்தப் புதிய அலுவலகம் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 51 துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு மிகப் பெரிய அலுவலகமாகத் திகழ்கிறது. இதேபோல் ரூ.139 கோடி மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன மருத்துவமனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானதாகத் திகழ உள்ளது.நுழைவுத் தேர்வு:மருத்துவமனைகள் மத்திய அரசின் பொறுப்பில் வரும். அப்படி வந்தால் இனி நுழைவுத் தேர்வு உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுக  ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு இருந்தால்  கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது, உயர்ந்த பதவிகளுக்கு வர முடியாது என்ற காரணத்தால், நுழைவுத் தேர்வு என்னும் கதவு இல்லாமலேயே மாணவர்கள் முன்னேறி வர வசதியாக சட்டம் இயற்றினோம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதில் எந்தக் கட்சிக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. காங்கிரஸ், பாமக கட்சிகள் இதே கருத்து உடையவை. அதிமுக கூட நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மத்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறது, ஆனால் இவர் கடிதம் எழுதுகிறார் என்று அறிக்கை வெளியிட்டார்.கடிதத்தின் பலனே இது... நான் கோரிக்கைகளுக்காகவும், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன். நுழைவுத் தேர்வு குறித்த கடிதத்தில் சாமானிய குடிமகன்களின் வாழ்வை நுழைவுத் தேர்வு அழித்துவிடும் என்று தமிழக மக்களின் மனதை பிரதிபலித்து கடிதம் எழுதினேன். அதன் பலனாகத்தான் இப்போது நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு என்ற தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது.உரிமைகளை பறிக்கக் கூடாது: அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு எடுக்கும் முறையில் இருந்தால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.மத்திய அரசு எடுக்கும் நுழைவுத் தேர்வு முடிவானாலும், வரி விதிப்பு போன்ற எந்த செயலாக இருந்தாலும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிந்தே மத்திய அரசு  முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இங்கிருந்து எழும் குரல் பொதுவான விஷயங்களுக்கு ஒருமித்த குரலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றார் முதல்வர்.விழாவில், நிதி அமைச்சர் க.அன்பழகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், மத்திய இணையமைச்சர் காந்திச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது குறித்து தமிழ்நாட்டின் முசிபூர் இரகுமான் அவர்கள் வருத்தப்பட்டால் பயனில்லை. மாநிலத்தில் தன்னாட்சிக்கு உரிமை கொடுக்கும் அவர் பிற மாநில அரசுகளுடன் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டும்.தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் கடலோரக் காவலை மத்திய அரசிடம் ஒப்படைக்கக்கூறிய கருத்தையும் திரும்பப் பெற வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் முயன்று வெற்றி காண ‌வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 5:56:00 AM
நிருபாமா – கருணாநிதி: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் “போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ்,
By முத்தமிழ்
8/21/2010 4:43:00 AM
அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ், போர் நடந்த பகுதியில் தமிழர்களின் வாழ்வும், மறுவாழ்வுப் பணிகளும் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிய இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார். “எங்கே வீடு கட்டித் தரவேண்டும் என்று (சிறிலங்க அரசு) இடம் ஒதுக்கித் தருகிறார்களோ அந்த இடத்தில் இந்தியா வீடு கட்டித்தரும்” என்று கூறியுள்ளார்.” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியும்,
By முத்தமிழ்
8/21/2010 4:42:00 AM
இனப்படுகொலையின் பின்னணியில் செயலாற்றிய( தெலுங்கன் தட்சணாமூர்த்தி என்ற) மானில கருணாநிதி அரசு, மத்தியரசின் இத்தாலிய சோனியா இலங்கை இராயபக்ச‌ அரசு என்ற முக்கோண கூட்டணிக்கு எதிரான உணர்வலைகளும் இந்திய அரசிசைப் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவும் அதே வேளை தமிழ் நாட்டின் அதிகரித்துவரும் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மிகவும் நுணுக்கமான முயற்சியே இந்த உதவியின் பின்புலமாகும். உழைத்து வாழ்ந்த வன்னி மக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்களின் விளைநிலங்கள் பல் தேசிய முதலீட்டுக்காகவும், பௌத்த விகாரைகளின் புனிதப் பிரதேசங்களுக்காகவும், இராணுவக் குடியிருப்புக்களுகாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வளம்மிக்க நிலங்களை வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து
By முத்தமிழ்
8/21/2010 4:40:00 AM
வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து அவற்றில் சிங்களக் குடியேற்றங்களையும்,இந்திய- பல்தேசியக் நிறுவனங்களை அமைக்கவும், இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுவதற்கான அறிகுறியே இந்த உதவியின் சாராம்சம். தவிர, இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு நிதிக் கொடுப்பனவுகளிலிருந்து வழங்கப்பட்ட பணத்தில் அரசால் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு அடிப்படையான உதவிகள் கூட வழங்கப்படவில்லை. புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசு திட்டமிட்டது போல எழுச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ் நாட்டில் இதனை மட்டுப்படுத்தி அழிப்பதற்கான ஆயுதமாகவும் இந்த உதவி பயன்படுத்தப்படுகிறது. தமிழ்ப் பேசும் மக்களின் இனச் செறிவைக் குறைத்து அவர்களின் அடையாளத்தை அழிக்கும் இலங்கை – இந்திய அரசுகளிகளின் முதல் நோக்கமும் எழுச்சிகளை ஒடுக்கும் இரண்டாவது நோக்கமும் கொண்ட இலங்கை அரசிற்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகள் இனம்காணப்பட வேண்டும்.
By முத்தமிழ்
8/21/2010 4:39:00 AM
Congress politcians suck poor people money and live in Ac rooms, travel in AC cars, Go aboroad , send their children to America to study. Our Chilren study under the trees, no tailets, no teachers . Are Poor indian so stupid still believe in congress party. Congress is dead after Mahathma Gandi is dead. jey hinth!இந்திய எம்.பி.க்கள் சம்பளம் உயர்வு இந்திய நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 3 மடங்காக அதிகரிக்க இந்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த உயர்வு போதாது என்று பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மாதம் 16 ஆயிரம் ரூபாயாக உள்ள சம்பளம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர, தினப்படி, தொகுதி சுற்றுப்பயணப்படி, அலுவலக ஊழியர் ஊதியம், இலவச விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், அரசுத்துறைச் செயலர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் புகார் கூறுகிறார்கள். அரசுத்த
By Vadivel
8/21/2010 3:56:00 AM
Sir.Karunanithi Iyaaa it is too late ! Sonia madam and Rahul sir chested you and yamilnadu people. They want distroy DMK as Stilankan Tamils in Srilanka. It is the tuth. Still you don't understand who is Sonia jajeeve gandi madam is.They betrays all Tamil people by Killing the freedom fighters who wanted freedom for Tamils. Sorry Sir, you have about 50 years experience in politics;but, you do not understand Italian womens sir.
By George
8/21/2010 3:50:00 AM
It was said that hindia did not interfere in eelam affairs. So we won't believe that hindia govt is interfering in tamil nadu affairs. Ass hindia had not interfered in the tamil nadu affairs. Screw yourself karuna ni(kabo)dhi.
By jandian
8/21/2010 3:42:00 AM
நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு. சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட் டுள்ளமையினை மிகவும் கவலைக்கும் கண்டனத்து க்குரிய விடயமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குகிறது.திரு சீமான் தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மக்களுக்குமாக எழுப்பும் ஆதரவுக்குரல் ஒடுக்கப்படும் மக்களுக்கு நியாயம் கோரும் வகையிலானது. எல்லை தாண்டும் சிறீலங்காவை அச்சுறுத்தக்கூடியது. சீமான் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறியீட்டு வடிவில் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்து விடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.எனவே தமிழக அரசு இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுத்த திரு.சீமான் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக ஆவன செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கின்றது.செயலகம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் secretariat@tgte.org
By naam tamilar
8/21/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும்....Well said Ilakkuvanar..wonderfull arguement.
By Seralaathan-Melbourne
8/21/2010 7:36:00 AM

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

காஷ்மீருக்கு சுயாட்சி: பிரதமரின் பேச்சுக்கு விஎச்பி கண்டனம்


ஹைதராபாத், ஆக.11: காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுக்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றி பேசுவோர் இந்தியாவுடன் காஷ்மீர் ஏற்கனவே இணைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என விஎச்பி சர்வதேசத் தலைவர் அஷோக் சிங்கால் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

தவறுதான். காசுமீருக்கு மட்டும் தன்னாட்சிகொடுத்தால் தவறுதான். அனைத்து மாநிலங்களுக்கும் தன்னாட்சி கொடுக்க வேண்டும். இந்திய ஒன்றியம் என்பது உண்மையான கூட்டாட்சியாக நிலவத் தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் என்னும் அமைப்பாக உருவாக வேண்டும். சிறப்பான தன்னாட்சிகளும் வலிமையான கூட்டாட்சியும் கொண்ட அமைப்பாகத் தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் திகழும் பொழுது உலகில் நல்லரசாகத் திகழ்ந்து பிறருக்கு வழிகாட்டிட இயலும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 3:38:00 AM
இசக்கிக்கு ஆயதப் பயிற்சி எடுக்கும் ஃபாசிச கும்பல்களை பற்றி ஏன் எழுத இயலவில்லை? தமிழகத்தில் இந்த தேச விரோத கும்பல்களான இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள்,ஆயதங்களை தரித்து அரைக்கால் டவுசரில் நாடெங்கும் கொலைவெறி கூப்பாடிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் சிவசேனா தீவிரவாதிகளை என்னவென்பது? அடக்குமுறையே உலகில் தலைதுர்க்கும் தீவிரவாதங்களுக்கு அடிக்கல் என்பதை உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும், ஃபாசிச பத்திரிகை சக்திகளுக்கும் தெறிவித்து கொள்கின்றோம். எங்கெல்லாம் ஃபாசிச பத்திரிகைகளின் எழுத்துக்களுக்கு துனை பூகும் வகையில் அவர்களோடு இணைந்து அடக்குமுறை என்ற பெயரில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் இன் விடுதலை என்ற பெயரில் போராட்டங்களும் வீறு கொண்டு எழும்
By copy
8/12/2010 3:00:00 AM
மதுரை, கோவை, இராமநாதபுரம், என தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் ஆயுதப் பயிற்சி எடுக்கும் இந்துத்துவ தீவிரவாத குழுவான ஆர்.எஸ்.எஸ் போன்றவ!இந்திய சுதந்திரத்தில் இருந்து தொடங்கி, தேசப்பிதாவை கொன்ற இந்த தீவிரவாதிகள் மீரட், பாகல்பூர், குஜராத் என அப்பாவி மக்களை கொன்று குவித்து .ரத்த ஆற்றை ஓட்டிவரும் இந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து.?
By sinthi
8/12/2010 2:00:00 AM
tmp very good comment
By ahmed - riyadh
8/12/2010 12:53:00 AM
இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்
By ssr
8/12/2010 12:27:00 AM
1.முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள். அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ? கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது.
By tmp
8/12/2010 12:11:00 AM
2.ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம். குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்
By tmp
8/12/2010 12:09:00 AM
3.தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம். அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.
By tmp
8/12/2010 12:08:00 AM
4.பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? //பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – - குருமூர்த்தி// என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.
By tmp
8/12/2010 12:04:00 AM
இந்திய சுதந்திர போராட்டம் என்பது காந்தி, நேரு, பட்டேல் ஆகியோரின் சுதந்திர போராட்டமாகச் சுருக்கப்பட்டு விட்டது இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆஸாத் போன்றவர்களுக்கு உரிய அங்கிகாரமும் மரியாதையும் கிடைக்க வில்லை இங்குள்ள வரலாறுகளைப் படித்தால் சுதந்திரப் போராட்டம் என்பதே காந்தியிடமிருந்து தான் தொடங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன நாம் நமது தலைவர்களை மதிக்கிறோம் அதே நேரம் அவர்களை நுட்பமான விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டும் (ஏ-ஜி நூரானி)
By copy
8/11/2010 11:58:00 PM
I don't know why Dinamani giving much importance to VHP this party doesn't have much voice in TN and in India, few fools are supporting VHP and Rama sena these pary create the violence for money and getting publicity,Dinamani never published Thelka news about Ramasena
By Dillu Durai
8/11/2010 7:27:00 PM
Not just Kashmr, But all other states must have autonomy.
By senthil
8/11/2010 6:32:00 PM
Mr.MANMOHAN SINGH TOLD ABOUT KASHMIR ISSUES THESE ASPECT IS NOT CORRECT KASHMIR ALREDY JOINED IN THE INDIAN GOVERNMENT INDIANS NOT ACCEPT PM,S ANNOUNMENT IN THE KASHMIR ISSUES PEOPLE OF INDIA THOUGH CONGRESS GOVERNMENT ALREDY SURRENDED INTHE HANDS OF UNITED STATES,SRILANKA,NOW THEY ALSO READY SURREND WITH PAKISTAN ALSO, THIS SHAME
By raman r
8/11/2010 4:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்