செவ்வாய், 20 செப்டம்பர், 2011

amil Nadu Chief Minister has say in appealing to Commonwealth

Tamil Nadu Chief Minister has say in appealing to Commonwealth

[TamilNet, Thursday, 15 September 2011, 04:59 GMT]
The Tamil Nadu Chief Minister has a say in appealing to New Delhi and other Commonwealth countries, especially where Tamils live, to decide not to hold the Commonwealth Heads of Government meet in Sri Lanka in 2013, Eezham Tamil political circles told TamilNet. The decision will be taken in the Commonwealth Heads of Government meet in Perth in Australia in October. The Canadian Prime Minister has already announced that he would not take part in the meet in Colombo, if Sri Lanka doesn't make progress on the question of human rights in the island. The Indian Prime Minister may not attend the meet in Australia this year, but Tami Nadu should register its opinion with the head of Indian delegation against deciding on holding the next meet in Colombo, Eezham Tamil politicians requested.

Informed circles told TamilNet that the UK is not dependable and Australia would keep silent as being the host country this year. Pakistan steadily supports Colombo and Colombo has recently found new military relations with Bangladesh. The tiny Maldives is overenthusiastic in supporting genocidal Sri Lanka.

The protest therefore should come from other major and small Commonwealth countries across the world. The Chief Minister of Tamil Nadu State that has officially resolved in its Assembly for the war crimes investigation and for economic sanctions against Colombo has all the moral rights to appeal to all Commonwealth countries against holding the meet in Colombo in 2013, the Eezham Tamil politicians said.

Commonwealth countries, especially countries like Malaysia, Singapore, South Africa, Mauritius, Seychelles, Guyana, Trinidad, Fiji and others, besides UK, Canada, Australia and New Zealand where Tamils live in large numbers will have to respect the appeal of the Chief Minister of Tamil Nadu, and this will be a new democratic way of defining the Commonwealth relations, the Eezham Tamil politicians said.

South Africa can influence many African countries that are considerable in number in the Commonwealth.

Besides, the global Tamils in these countries have their own responsibility in persuading their governments not to commit injustice to Tamils by recognizing a State that commits genocide on Tamils, the Eezham Tamil politicians further said.

Related Articles:
14.09.11   Sri Lanka aims to get more time to complete genocide
12.09.11   Harper to boycott Sri Lanka CHOGM over rights concerns

ilakkuvanarin pataippumanikal 56-61: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56-61

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு; பிராமணர் வேறு

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 57. களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 58. உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 59. நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார்

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 60. தொல்காப்பியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ?

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 61. நல்லரசின் போர்க்கொள்கை

 


Thamizhk katamaikal 86-91: தமிழ்க்கடமைகள் 86-91

vaazhviyal unmaikal aayiram 231-400: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 231-300

clouding scene in chennai



திங்கள், 19 செப்டம்பர், 2011

pesum padam- lion kiss:பேசும்படம்- சிங்கத்தின் முத்தம்



Tajmahal in Thamizhnaadu: தமிழ்நாட்டில் ஒரு தாசுமகால்!

தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்!

First Published : 18 Sep 2011 12:00:00 AM IST


ஆக்ரா என்றால் தாஜ்மஹாலும், தாஜ்ஹால் என்றால் காதலும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பேரழகுப் பெட்டகமாகத் திகழ்ந்த தனது மனைவி மும்தாஜுக்காக மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்வதில் வியப்பேதுமில்லை. பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனான ஷாஜகான் கட்டடங்களை அழகாக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். எனவேதான் தாஜ்மஹால் இன்றும் சரித்திரக் கதாநாயகனாகத் திகழ்கிறது.  இந்நிலையில் உயரத்திலும், அகலத்திலும், அழகிலும் தாஜ்மஹாலைப் போலவே ராமநாதபுரத்தில் இன்னொரு தாஜ்மஹால் செட்டிங்ûஸ உருவாகியுள்ளது. ஆக்ரா தாஜ்மஹாலைக் காணமுடியாதவர்கள் இந்த ராமநாதபுர தாஜ்மஹால் செட்டைக் கண்டு ஆனந்தம் அடைகின்றனர்.  கண்களைக் கவரும் வண்ண விளக்குகளும், செயற்கை நீருற்றுகளும் காண்போரின் இதயத்தை வருடுகின்றன. குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வருகை தந்து இந்த தாஜ்மஹால் செட்டைக் கண்டுகளித்துப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். நெல்லை சரவணா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், ராமநாதபுரம் அபிராமி சில்க்ஸ் நிறுவனமும் இணைந்து தாஜ்மஹால் போன்ற அரங்கத்துடன் தொடங்கியுள்ள பொருட்காட்சிதான் மக்களை இப்படிக் குதூகலிக்க  வைத்துள்ளது.  இந்த தாஜ்மஹால் அரங்கு குறித்து பொருட்காட்சி அமைப்பாளர் டி. சமுத்திரத்திடம் பேசினோம்:  ""வணிக நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஆக்ராவுக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த தாஜ்மஹாலைப் பார்த்து சந்தோஷம் அடைகின்றனர். சிறந்த பொழுது போக்குத் தலமாகத் திகழ்கிறது இந்த தாஜ்மஹால். சுமார் பத்தாயிரம் சவுக்குக்கம்புகள், இரும்பு பைப்புகள், பைபர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள், பிளைவுட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொடர்ந்து இரு மாதங்களாகப் பணியாற்றி இந்த தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளனர். உட்புறம் 48க்கு 48, வெளிப்புறம் 80க்கு 80 என்ற சதுர அடியில் வடிவமைத்துள்ளோம். பொருட்காட்சித் திடலின் உருவாக்கத்தில் மொத்தம் 150 பேர் பணியாற்றியுள்ளனர். இதேபோன்ற பொருட்காட்சியை நடத்திட சுமார் இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படும். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி, சென்னையில் இதே போன்று செய்திருக்கிறோம். திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் பொருட்காட்சியாக மட்டும் நடத்தினோம். மாவட்ட அளவில் முதன் முறையாக ராமநாதபுரத்தில்தான் தாஜ்மஹாலை உருவாக்கியிருக்கிறோம். டைட்டானிக் கப்பல், நாடாளுமன்றக் கட்டடம், செங்கோட்டை, மைசூர் அரண்மனை, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை போன்றவற்றைப் போலவும் செட் அமைக்க விரும்புகிறோம்'' என்றார். அடுத்து நம்மிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. மணிகண்டன்:  ""இந்தப் பொருட்காட்சித் திடலில் மொத்தம் 226 ஃபோக்கஸ் லைட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை தாஜ்மஹாலின் முன்புறமும், பின்புறமும் வைத்துள்ளோம். ஐந்து வகையான ராட்சத ஜெனரேட்டர்கள் மூலமாக மின் தேவையைச் சமாளிக்கிறோம். தினசரி இரவு 6 மணி முதல் 10 மணி வரை செலவாகும் மின்சாரத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டீசல் செலவாகிறது. எந்த ஊராக இருந்தாலும் எந்தக் கட்டட அமைப்பிலும் செட் அமைக்கத் தயாராக இருக்கிறோம். அரிமா, ரோட்டரி போன்ற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து பொருட்காட்சிகளை "ஷேர்' அடிப்படையில் நடத்த விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.  சி.வ.சு. ஜெகஜோதி  படங்கள் : எல். ஆனந்தராமன்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

போர்க்குற்ற வரலாற்றில் இராசீவ்காந்தியும் இராசபக்சேவும்

door pictures by santhana krishnan: கதவு சொல்லும் பண்பாட்டுக் கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம்

சென்னையைச் சேர்ந்த ஓவியர் சந்தான கிருஷ்ணன், தன் ஓவியங்கள் மூலம் கலாசாரத்தை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.



கதவை மட்டுமே பிரதானமாக வரைந்து, தேசமெங்கும் சுற்றி வரும் 34 வயது இளைஞர் சந்தான கிருஷ்ணன். உலகம் முழுக்க, 30க்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தி இருக்கும் இவர், தைவான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று, கை நிறைய விருதுகளை அள்ளி வந்திருக்கிறார். ஒவ்வொரு ஓவியரும் தங்கள் படைப்பின் தனிபாணி மூலம் அறியப்படுவது உண்டு. ஓவியர் மூக்கையாவுக்கு, "குதிரை'; சந்ருவுக்கு "எருது'; மனோகருக்கு "ஆடு'; பாஸ்கருக்கு "பூனை'; சந்தான கிருஷ்ணனுக்கு "கதவு'. அக்ரகாரத்து வீடுகள் தான் சந்தான கிருஷ்ணனின், "கதவு' ஓவியங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. கும்பகோணம் அரசு கவின்கலை கல்லூரியில் படித்த போது, கல்லூரிக்குச் செல்லும் சாலையில் இருந்த அக்ரகாரத்து வீதிகளும், வீடுகளும், கதவுகளும் ஒவ்வொரு ரகமாக இருந்திருக்கின்றன. மனதை பறிகொடுத்த போது, தொடர்ந்து கதவுகளை வரையும் எண்ணம் அவருக்கு வந்தது. சந்தான கிருஷ்ணனின், "கதவுகள்' தனிச்சிறப்பானவை.

ஒவ்வொரு கதவுக்குள்ளும், அதற்குப் பின்னாலும், சின்ன சிறுகதைகளை சொல்வது இவருடைய சிறப்பு. நிலையில் இருக்கும் சிற்பங்கள், அதனருகில் இருக்கும் சுவர் சித்திரங்கள் என, ஒவ்வொன்றும் நாம் கடந்து வந்த நாகரிக வளர்ச்சியை சொல்பவை. கதவுகளின் வழியே தெரியும் முற்றம், தாழ்வாரம், புழக்கடை, சமையலறை, புறவாசல், அதன் வழியே தெரியும் அடுத்த வீதி என, நம் வாழ்வை திரும்பிப் பார்க்க செய்பவை. நிலைப்படியில் இருக்கும் கடவுள் சிலைகள் மாறி, கண்ணாடி கிராதிகளானதும், பின்னால் வண்ணங்கள் கொண்டதும், அதன் பின் வெறுங்கதவாகி, இன்று கதவே வீடானது வரை இவருடைய கதவு ஓவியங்கள், பல அர்த்தங்களைச் சொல்லி, நம் கன்னத்தில் அறைபவை. "கதவு வெறும் கதவு மட்டும் அல்ல; அது வீட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சும் விளக்கு. நம் பண்பாட்டின், கலாசாரத்தின், குலப் பெருமையின் வெளிப்பாடு. அதனால் தொடர்ந்து கதவுகளை வரைவதன் மூலமாக, சிதைந்து போன நம் கலாசாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்கிறார் சந்தான கிருஷ்ணன்.

சென்னையில் இவரது ஓவியக் கண்காட்சி நடந்த போது, வெளிநாட்டில் குடியேறிய தமிழர் ஒருவர், ஓவியங்களை உற்றுப்பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்; ஆழமாக ரசிக்கிறார் என்று அவர் அருகில் சென்று பார்த்த சந்தான கிருஷ்ணன் அதிர்ச்சியாகியுள்ளார். "ஓவியத்தை உற்றுப்பார்த்திருந்த, அவருடைய கண்கள் சிவந்திருந்தன. அடக்க முடியாமல் அழுதபடி, தன் மகளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் சென்ற என் கைகளை பற்றி, "நான் அமெரிக்காவில் குடியேறி பல ஆண்டுகளாகி விட்டன. வெளிநாட்டில் வளர்ந்த என் மகளுக்கு, எப்படி சொந்த ஊரை காண்பிக்கப் போகிறோம் என்று கலக்கத்துடன் இருந்தேன். அந்த குறையை உங்கள் ஓவியம் பூர்த்தி செய்து விட்டது. நீங்கள் வரைந்திருப்பது எங்கள் வீட்டுக் கதவு. இதற்காக எங்கள் தலைமுறையே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது' என்று அவர் கதறலோடு சொன்னார். இது என் ஓவியத்திற்கு கிடைத்த மறக்க முடியாத அங்கீகாரம்' என்கிறார் சந்தான கிருஷ்ணன்.

முந்தைய கால வீடுகளில், எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும். வழிப்போக்கர்கள், உறவினர்கள், அயலார் என எல்லோரும் வந்து புழங்குவதற்கு கதவுகள் அனுமதிக்கும். ஆனால், இன்றைய கதவுகள் அடுத்த வீட்டு எண்ணை கூட தெரிந்து வைத்திருக்காதவை. குவிலென்ஸ் வழியாக வெளியே இருக்கிறவர்களை பார்த்த பின் அனுமதிப்பவை. "மனிதனின் பேராசையும், பெருங்கோபமும் தான் உறவுகளில் இருந்து நம்மை பிரிப்பவை. நம்மில் கண்ணுக்கு தெரியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் கண்ணியை அறுந்து விடாமல், கதவுகள் தான் காக்க வேண்டும். அதற்காகத் தான் ஓவியங்கள் மூலம் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.' என்ற சந்தான கிருஷ்ணனின் ஆசை, "எல்லா கதவுகளும் உடைந்து போய், வெளிச்சம் பரவ வேண்டும்' என்பது தான்.

- அ.ப.இராசா -

இனிமம் (சாக்லேட்) சாப்பிட்டால் தசைகள் வலுப்பெறும்: ஆய்வில் தகவல்

சாக்லேட் சாப்பிட்டால் தசைகள் வலுப்பெறும்: ஆய்வில் தகவல்

First Published : 16 Sep 2011 12:54:47 AM IST


லண்டன், செப்.15: சாக்லேட் சாப்பிட்டால் உடல் தசைகள் வலுப்பெறும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் உடலுக்கு சக்தியளிக்கும் மைட்டோகாண்ட்ரியா (உடல் செல்லின் சக்தி உலைகள் என்று மைட்டோகாண்ட்ரியாவைக் குறிப்பிடுவர்) பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது சாக்லேட்டில் காணப்பட்ட எபிகேட்டசின் என்ற தாவரச் சேர்மம், மைட்டோகாண்ட்ரியாவின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ததைக் கண்டறிந்தனர். சாக்லேட்டில் உள்ள எபிகேட்டசினும் மைட்டோகாண்ட்ரியாவை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் மோ மலேக் தெரிவித்தார். குறிப்பாக இதயத் தசைகளிலும், எலும்புத் தசைகளிலும் கூடுதல் சக்தி கிடைப்பதாக அவர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்த கோகோவிலுள்ள எபிகேட்டசினை, பரிசோதனைக்கூடத்திலுள்ள சுண்டெலிகளுக்கு 15 நாள்கள் தொடர்ச்சியாகக் கொடுத்து பரிசோதனை மேற்கொண்டனர். எலிகளுக்கு நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. எபிகேட்டசின் சாப்பிட்ட எலிகள் சுறுசுறுப்பாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.இதன்மூலம் வயதாவதால் தசைகளில் ஏற்படும் சோர்வும் தளர்ச்சியும் எபிகேட்டசினால் நீக்கப்படுவது உறுதியாவதாக மலேக் தெரிவித்தார். மேலும் தசைகள் நீடித்துழைக்கும் ஆற்றலைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பலன்கள் மனிதர்களிடத்தும் உருவாகும் என்பது மகிழ்ச்சிகரமான உண்மையென்றாலும், அதை உறுதிப்படுத்த மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மலேக் தெரிவித்தார்.