ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

விருபா குமரேசனின் மின்னகராதிப் பணிகள்


viruba01 viruba02
அனைவருக்கும் வணக்கங்கள்,
சென்ற ஆண்டின் இறுதியில், நாம் உருவாக்கிய விருபா வளர் தமிழ் : நிகண்டு என்னும் செயலியின் துணையுடன் சிந்தாமணி நிகண்டு மின்-அகராதியினை இணையத்தில் இணைத்திருந்தோம். இதனை நீங்கள்
என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம். சிந்தாமணி நிகண்டில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் தனித்தனியான இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு மின் அகராதியில் தலைச்சொற்கள், பொருள் விளக்கச் சொற்கள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2015.08.03 அன்று, வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதியான வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் என்னும் அகராதியையும் மின்-அகராதியாக மாற்றி இணைத்துள்ளோம். இதனை நீங்கள்
என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம். வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 வடசொற்களும், பொருள்விளக்கச் சொற்களாக 1676 சொற்களும்,  ஆகமொத்தம் 3129 சொற்கள் காணப்படுகின்றன. தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளில் பின்வரும் 8 சொற்கள் ; உச்சி, ஏனம், குணம் , சமயம், நயம், பதி, பரம்பரை, பூசை காணப்படுகின்றன.  மிகவும் திட்டமிட்டு, கட்டமைப்புடன் கூடிய தரவுதளமாக இதனை அமைத்துள்ளோம். இதன் மூலம் அறிவியல் அணுகுமுறையுடன் பல பகுப்பாக்கங்களைச் செய்யவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. மின்-அகராதியானது, அச்சடிக்கப்பட்ட அகராதிகளில் காணப்படாத ( Reverse Lookup ) தலைகீழாக அல்லது மறுதலையாகப் பார்த்துக் கொள்ளும் வசதியையும் தருகிறது.
 இணைக்கப்பட்டுள்ள இரு மின்-அகராதிகளின் ஒன்றிப்பும் இடைவெட்டும்
சிந்தாமணி நிகண்டு மூலம் 5422 சொற்களையும், வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் மூலம் 3129 சொற்களையும் அறியமுடிகிறது. இரண்டு மின்-அகராதிகளிலும் காணப்படும் 614 சொற்களையும், அவற்றுக்கான பொருள் விளக்க வேறுபாடுகளையும் / ஒற்றுமைகளையும் அறியும் நிலையில்  சொற்குவியல் என்ற பெயரில்
இணைய முகவரியில் தந்துள்ளோம்.
விரைவில் மூன்றாவதாக ஒரு மின்-அகராதியையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மேன்மேலும் பல்வேறு நிகண்டுகளையும், அகராதிகளையும் மின்-அகராதிகளாக்கி இணைத்துக்கொள்ளும்போது, ஒன்றித்த நிலையில் அதிக எண்ணிக்கையிலான சொற்களையும், இடைவெட்டு நிலையில் குறித்த ஒரு சொல்லிற்கான அதிக எண்ணிக்கையில் விளக்கங்களையும் பெறுவதற்கு வாய்ப்புக்கிடைக்கும்.
இதுவரையில் வெளியான அனைத்துத் தமிழ் நிகண்டுகளையும், அகராதிகளையும் இவ்வாறாக மின்-அகராதிகளாக மாற்றுமிடத்து அவற்றில் காணப்படும் அத்தனை சொற்களையும் குவியலாக்கி, ஒரே இடமாகக் காண்பிக்கும் பேரிணையம் ஆக அது அமையும்.
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம், சொற்குவியல் பகுதிகளைப் பார்வையிடவும், தொடர்பான கருத்துக்களைக்கூறவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பணிவுடன், 
 – விருபா து.குமரேசன்
vituba_TKumaresan01