தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி,
அ.வாடிப்பட்டி பகுதிகளில் மின்னியக்கி மூலம் தண்ணீர் திருடப்படுவதால் மற்ற
பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லும் நிலை தடுக்கப்படுகிறது.
தேவதானப்பட்டி அருகே உள்ள வைகை
அணைப்பகுதியில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்
வைகை அணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர்
மூலம் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டப்பகுதிகளில் வேளாண் பணிகள்
நடைபெற்று வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கானகாணி(ஏக்கர்) பரப்பளவில்
வேளாண்மை நடைபெற்று வருகிறது.
திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நெல், கரும்பு, தக்காளி, கத்திரிக்காய் போன்ற பயிர்த்தொழில் நடைபெற்று வருகிறது.
தற்பொழுது வைகை அணையிலிருந்து
அ.வாடிப்பட்டி பகுதி வரை ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட மின்னியக்கிகள் மூலம்
தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மற்ற பகுதிகளுக்குத்
தண்ணீர் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் கால்வாய்ப் பகுதிகளில் கற்களை
நிரப்பித் தண்ணீரை திருப்பி விடுகின்றனர்.
எனவே பொதுப்பணித்துறையினரும், மின்வாரிய
அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மின்னியக்கிகளைப் பறிமுதல்
செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக