தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்)
வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே
உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம்,
முதலக்கம்பட்டி பகுதிகளில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் தாலநெய்(பாமாயில்)
வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் இடர்ப்படுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 22 ஆம்நாள்
கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பலகாரம் செய்யும் பணியை
வீடுகளில் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாகத் திருமணம் ஆன இணையர்களுக்குத்
தாய்வீட்டிலிருந்து இனிப்பு வகைகள் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதற்கு
தாலநெய்(பாமாயில்) இன்றியமையாது வேண்டப்படும். ரேசன்கடைகளில் கடந்த சில
மாதங்களாகத் தாலநெய்(பாமாயில்) போதிய அளவில் வழங்கப்படவில்லை.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத்
தாலநெய்(பாமாயில் வழங்கப்படாததால் பொதுமக்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து
நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தி
வருகின்றனர். எனவே மாவட்ட நிருவாகம் விரைவில் தாலநெய்(பாமாயில்) வழங்க
நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக