திங்கள், 20 அக்டோபர், 2014

தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம்


தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம்

49nelnadavuppani

தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை.
இதனால் உழவர்கள் தங்கள் வேளாண் பணியை விட்டுவிட்டுத் தொழில்நகரங்களை நாடிச்சென்றனர். ஒரு சிலர் கூலி வேலைக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.
தற்பொழுது மஞ்சளாறு அணை, வைகை அணை போன்ற அணைகள் பாசன வசதிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகிறது. இதனால் உழவர்கள் தங்கள் தரிசுநிலைங்களை உழுது நெல்நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் வேளாண்கருவிகள், உரம், விதைகள் போன்றவற்றிற்குத் தேவை பெருகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக