ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தேனிப் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருட்டு

தேனிப் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருட்டு

49electricitytheft02
தேனி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது.
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இக்காலம் கோயில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா என எந்த விழாவாக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் கோயில்திருவிழாவின்போது வண்ண வண்ண விளக்குகள், சாலையோரம் குழல்விளக்குகள் போன்றவை கட்டப்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுகிறது.
கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவது அப்பகுதியில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் நடைபெறுகிறது.
மேலும் ஊராட்சிப்பகுதிகளில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவதால் அதற்குரிய மின்சாரக்கட்டணத்தை அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சிஅலுவலகத்திற்கு அதிக மின்சாரக்கட்டணம் வருகிறது. இதனால் ஊராட்சியில் மின்சாரத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியை விடக் கூடுதலாகக் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்பாரா விதமாக மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தைத் துண்டிக்க முடிவதில்லை. இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் நடைபெறும் இந்த மின்சாரத் திருட்டை தடுத்து நிறுத்தவேண்டும் என உள்ளாட்சிச் சார்பாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
49electricitytheft03
vaigaianeesu_name03



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக