தேவதானப்பட்டி பகுதியில் இளநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,
கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில்
தென்னை மரம் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்விளையும் தென்னங்காய்கள்
காங்கேயம், மும்பை, கேரளா என ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இப்பொழுது கடந்த சில வருடங்களாகப் போதிய
மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் இப்பகுதியில் தென்னை
மரம் பயிரிடலின் பரப்பளவு சுருங்கிவருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர்
குறைந்ததால் தேங்காய், இளநீர் ஆகியன பெரிதாக இல்லாமல் சிறிய அளவில் இளநீர்,
தேங்காய்கள் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள உழவர்கள்
பொள்ளாச்சிப்பகுதியில் இருந்து இளநீர்களை இறக்குமதி செய்து விற்பனை
செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி இளநீர்கள் 30 உரூபாய் முதல் 50
உரூபாய் வரை விற்பனை ஆகிறது. தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும்
வயிற்றுவலி, அம்மை நோய் போன்றவற்றால் விலை அதிகமாக இருந்தாலும் இளநீரைக்
கூடுதல் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
வைகை அனிசு, 9715795795, தேவதானப்பட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக