தலைப்பைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பலருக்கும் பகிரலாம் எனப் படித்துப் பார்த்தால், சிரிப்புதான் வருகின்றது. அயல்நாடுகளில் தமிழர்கள் துன்புறும் பொழுதும், ஈழத்தில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதும், அவர் தந்தையார், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைதான் எங்கள் கொள்கை எனச் சொல்லி வந்த பொழுது தெரிவித்து வலியுறுத்த வேண்டிய கருத்தை இப்பொழுது கூறுவது விளம்பரத்திற்காகவா? அறியாமையாலா? இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கான கொள்கையாகத்தான் இருக்க முடியும். மாநில நலன்களை மீறிய மத்திய அரசு கொள்கை என்பது மோசடியே! ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனச் சிக்கல் வரும்பொழுதுதான் நடுநிலை முடிவெடுக்க வேண்டிய பணி மத்திய அரசிற்கு வருகிறது. இனியேனும் ஈழத்தமிழர் நலன் குறித்த வெளியுறவுக் கொள்கையை அவர்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்க மத்திய அரசிடம் கனிமொழி வலியுறுத்தட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக