திங்கள், 16 டிசம்பர், 2013

akaramuthala அகரமுதல, இணைய இதழ் 5 மேலும் தலைப்புகள்



கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?

 - கலைஞர் வினா?  கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பில், ''கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?'' எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:  'கேரள மாநிலம், ...

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

 நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாதுஎன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் ...

இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம்

மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு-பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் (Bureau of Indian Standard) ஒழிவிடமாக உள்ள  '' நிலை அறிவியலாளர் ('B' Grade Scientists)பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் மொத்த  ஒழிவிடங்கள்: 115 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  இயந்திரவியல் - 31,  மின்னியல் ...

தமிழகம் முழுவதும், மலிவு விலை காய்கறிக் கடைகள் முதல்வர் ஆணை

சென்னை :  திசம்பர் 11: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மாநாட்டில்  தொடக்கவுரையாற்றிய பொழுதுமுதல்வர் செயலலிதா, 'விலைவாசியைக் கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை - காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற  காய்கறிக்கடைகளை, மாவட்டங்களில் தேவையான இடங்களில் தொடங்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டார்.

மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு

மூடநம்பிக்கை எதிர்ப்பு  சட்ட வரைவு 11.12.13 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  சமூக நீதித்துறை அமைச்சர் சிவாசி(இராவு மொகே) இந்தச் சட்ட முன்வடிவை அளித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவிப் பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்று ...

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! நந்தினி அறிவிப்பு

 நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா ...

கச்சத்தீவை இந்தியாவின் பகுதியெனப்பறைசாற்றுக! த.இரா.பாலு


அன்று அமைதி காத்த தி.மு.க. இன்று கழுவாய்  தேடுகிறது! புதுதில்லி: இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி மக்களவையில் 11.12.2013 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் வினாக்கள் எழுப்பினர். இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமாரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 11.12.13 அன்று காலை மக்களவை கூடியதும் முறையீடு அளித்தார். அதில் அவர் ...

அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்


  மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப்  புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS)  ஒழிவிடமாக உள்ள '', '' பிரிவு (குரூப் 'பி' மற்றும் 'சி' ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து  16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் ...

இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் கனடா உறுதி!

மனித உரிமை, சட்டம் ஒழுங்குசமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் ...

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் மழலையர் கற்றல் கொண்டாட்டம்


பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்றுமழலையர் கற்றல் கொண்டாட்டம்சிறப்பாய் நடந்தது. திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் ...

கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

- திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக